June 23 Today Special | June 23 What Happened Today In History. June 23 Today Whose Birthday (born) | June-23th Important Famous Deaths In History On This Day 23/06 | Today Events In History June-23th | Today Important Incident In History | ஜூன் 23 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 23-06 | ஆனி மாதம் 23ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 23.06 Varalatril Indru Nadanthathu Enna.
Today Special Historical Events In Tamil | 23-06
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 23-06
- நிக்கராகுவா, போலந்து ஆகிய நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
- பன்னாட்டுக் கைம்பெண்கள் நாள் கொண்டாடப்படுகிறது.
- எசுத்தோனியாவின் வெற்றி விழா கொண்டாடப்படுகிறது.
- ஒலிம்பிக்கு நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 23-06 June 23
- 1305ல் பிளெமிசு,பிரான்சியருக்கிடயே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
- 1532ல் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர்.
- 1565ல் உதுமானியக் கடற்படைத் தளபதி திராகுத் மால்ட்டா மீதான படையெடுப்பின் போது இறந்தார்.
- 1594ல் அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்ற போர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர்.
- 1611ல் என்றி அட்சனின் நான்காவது பயணத்தின் போது என்றி, அவரது மகன், மற்றும் ஏழு மாலுமிகளும் அட்சன் விரிகுடாவில் தரையிறங்கினதுடன் இவர்கள் பின்னர் காணாமல் போயினர்.
- 1658ல் இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.
- 1713ல் அகாடியாவின் பிரெஞ்சுக் குடிகள் பிரித்தானியாவுடன் பற்றுறுதியை ஏற்படுத்த ஓராண்டு காலம் தவணை கொடுக்கப்பட்டது. இல்லையேல் அவர்கள் நோவா ஸ்கோசியாவை விட்டு வெளியேற வற்புறுத்தப்பட்டனர்.
- 1757ல் பிளாசி சண்டை நடைபெற்றது, ராபர்ட் கிளைவ் தலைமையிலான 3,000 படையினர் சிராச் உத் தவ்லா தலைமையிலான 50,000 இந்தியப் படையினரைத் தோற்கடித்தனர்.
- 1760ல் ஏழாண்டுப் போர் நடைபெற்றது, லாண்டிசட் சமரில் புருசியாவை ஆஸ்திரியாத் தோற்கடித்தது.
- 1794ல் உருசியாவின் இரண்டாம் கத்தரீன் கீவ் நகரில் யூதர்கள் குடியேற அனுமதி வழங்கினார்.
- 1865ல் இலங்கையில் அரச ஆணைக்குழு இராணுவ செலவீனங்களை விசாரிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டது.
- 1868ல் கிறித்தோபர் சோலசு தட்டச்சுக் கருவி கண்டுபிடிப்புக்கான காப்புரிமத்தை பெற்றார்.
- 1894ல் பாரிசில் பன்னாட்டு ஒலிம்பிக் குழு பியர் தெ குபர்த்தென்னின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்டது.
- 1940ல் இட்லர் மூன்று மணித்தியால சுற்றுப் பயணமாக பாரிசு சென்றார். ஒரேயொரு தடவை மட்டுமே அவர் பாரிசு சென்றார்.
- 1940ல் என்றி லார்சன் வடமேற்குப் பெருவழியால் மேற்கில் இருந்து கிழக்கு வரையான பயணத்தை வான்கூவரில் இருந்து ஆரம்பித்தார்.
- 1941ல் இலித்துவேனிய செயற்பாட்டு முன்னணி சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்து இடைக்கால அரசை அமைத்தது.
- 1942ல் இரண்டாம் உலகப் போரில் செருமனியின் போர் வானூர்தி வேல்சில் தவறுதலாகத் தரையிறங்கிய போது கைப்பற்றப்பட்டது.
- 1942ல் இரண்டாம் உலகப் போரில் முதன் முதலாக அவுசுவித்சு வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.
- 1946ல் நிலநடுக்கம் கனடாவின் வான்கூவர் தீவில் ஏற்பட்டது.
- 1960ல் பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
- 1961ல் பனிப்போரில் அண்டார்க்டிக்காவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடை செய்யும் அண்டார்டிக்கா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
- 1967ல் பனிப்போரில் அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் சோவியத் பிரதமர் அலெக்சி கொசிஜினை நியூ செர்சியில் சந்தித்தார்.
- 1980ல் இந்திய அரசியல்வாதியான சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்தார்.
- 1985ல் அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.
- 2001ல் பெருவின் தெற்கே இடம்பெற்ற 8.4 Mw நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையால் 74 பேர் உயிரிழந்தனர்.
- 2010ல் கோயம்புத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஆரம்பமானது.
- 2016ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் 52 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
- 2017ல் பாக்கித்தானில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களில் 96 பேர் கொல்லப்பட்டனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 23-06 June 23
- 1616ல் முகலாய இளவரசரான ஷா ஷுஜா பிறந்த நாள் (இறப்பு 1661)
- 1668ல் இத்தாலிய வரலாற்றாளரும் மெய்யியலாளருமான கியாம்பாட்டிஸ்டா விக்கோ பிறந்த நாள் (இறப்பு 1744)
- 1876ல் இலங்கை அரசியல்வாதியான க. பாலசிங்கம் பிறந்த நாள் (இறப்பு 1952)
- 1877ல் இந்திய-ஆங்கிலேய நடிகரான நார்மன் பிரிட்சர்டு பிறந்த நாள் (இறப்பு 1929)
- 1889ல் உக்ரைனிய-உருசியக் கவிஞரான அன்னா அக்மதோவா பிறந்த நாள் (இறப்பு 1966)
- 1906ல் நேபாள மன்னரான திரிபுவன் வீர விக்ரம் ஷா பிறந்த நாள் (இறப்பு 1955)
- 1912ல் ஆங்கிலேயக் கணிதவியலாளரும் கணினி அறிவியலாளரான அலன் டூரிங் பிறந்த நாள் (இறப்பு 1954)
- 1922ல் புதுக்கோட்டை சமத்தான அரசரான ராஜகோபால தொண்டைமான் பிறந்த நாள் (இறப்பு 1997)
- 1925ல் தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானியரான ஜான் ஷெப்பர்ட் பேரோன் பிறந்த நாள் (இறப்பு 2010)
- 1924ல் இலங்கை அரசுத்தலைவரான ரணசிங்க பிரேமதாசா பிறந்த நாள் (இறப்பு 1993)
- 1934ல் இந்திய அரசியல்வாதியான வீரபத்ர சிங் பிறந்த நாள்
- 1937ல் நோபல் பரிசு பெற்ற பின்லாந்தின் 10வது அரசுத்தலைவர் மார்ட்டி ஆத்திசாரி பிறந்த நாள்
- 1940ல் அமெரிக்க ஓட்ட வீரரான வில்மா ருடோல்ஃப் பிறந்த நாள் (இறப்பு 1994)
- 1943ல் அமெரிக்க இணைய முன்னோடியான வின்டு செர்ப்பு பிறந்த நாள்
- 1946ல் சிரிய-செருமனிய எழுத்தாளரான இறபீக் சாமி பிறந்த நாள்
- 1953ல் இந்தியக் கல்வியாளரும் அரசியல்வாதியுமான சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் (இறப்பு 1901)
- 1972ல் பிரான்சியக் காற்பந்தாட்ட வீரரான ஜீனடின் ஜிதேன் பிறந்த நாள்
- 1974ல் ஆத்திரேலிய நடிகரான ஜோல் எட்கர்டன் பிறந்த நாள்
- 1980ல் கயானாத் துடுப்பாளரான ராம்நரேஷ் சர்வான் பிறந்த நாள்
- 1980ல் இத்தாலிய டென்னிசு வீராங்கனையான பிரான்செசுகா இசுகியவோனி பிறந்த நாள்
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 23-06 June 23
- கிமு79ல் உரோமைப் பேரரசரான வெசுப்பாசியான் Roman இறப்பு நாள் (பிறப்பு 9)
- 1836ல் இசுக்காட்டிய வரலாற்றாளரும் மெய்யியலாளருமான ஜேம்ஸ் மில் இறப்பு நாள் (பிறப்பு 1773)
- 1891ல் செருமானிய இயற்பியலாளரான வில்கெம் எடுவர்டு வெபர் இறப்பு நாள் (பிறப்பு 1804)
- 1891ல் ஆங்கிலேய வானியலாளரான நார்மன் இராபர்ட் போகுசன் இறப்பு நாள் (பிறப்பு 1829)
- 1939ல் இந்தியக் கல்வியாளரான கிஜூபாய் பதேக்கா இறப்பு நாள் (பிறப்பு 1885)
- 1971ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் நிர்வாகியுமான சிறீ பிரகாசா இறப்பு நாள் (பிறப்பு 1890)
- 1980ல் இந்தியப் பொறியியலாளரும் அரசியல்வாதியுமான சஞ்சய் காந்தி இறப்பு நாள் (பிறப்பு 1946)
- 1983ல் இலங்கை-ஆங்கிலேய கவிஞரும் இதழாசிரியரும் திறனாய்வாளரும் பதிப்பாளருமான மியரி ஜேம்சு துரைராஜா தம்பிமுத்து இறப்பு நாள் (பிறப்பு 1915)
- 1984ல் உருசிய ஓவியரான அலெக்சாண்டர் செமியோனவ் இறப்பு நாள் (பிறப்பு 1922)
- 1995ல் அமெரிக்க உயிரியலாளரும் மருத்துவருமான யோனாசு சால்க் இறப்பு நாள் (பிறப்பு 1914)
- 2015ல் இந்திய கத்தோலிக்க அருட் சகோதரியான நிர்மலா ஜோஷி இறப்பு நாள் (பிறப்பு 1934)
- 2015ல் இந்திய இதழாளரும் செயற்பாட்டாளருமான பிரபுல் பிட்வாய் இறப்பு நாள் (பிறப்பு 1949)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: