June 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 24

0

June 24 Today Special | June 24 What Happened Today In History. June 24 Today Whose Birthday (born) | June-24th Important Famous Deaths In History On This Day 24/06 | Today Events In History June-24th | Today Important Incident In History | ஜூன் 24 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 24-06 | ஆனி மாதம் 24ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 24.06 Varalatril Indru Nadanthathu Enna.

June 24
June 24

Today Special Historical Events In Tamil | 24-06

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 24-06

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 24-06 June 24

  • கிமு 217ல் திராசிமின் ஏரி போரில் ஹன்னிபால் கையசு பிளாமினியசு தலைமையிலான உரோமைப் படைகளைத் தோற்கடித்தார்.
  • 474ல் உரோமைப் பேரரசராக யூலியசு நெப்போசு தன்னை மேற்கு அறிவித்தார்.
  • 1314ல் இசுக்கொட்லாந்துப் படைகள் இராபர்ட்டு புரூசு தலைமையில் இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்து தம‌து விடுதலையை மீண்டும் பெற்றது.
  • 1340ல் நூறாண்டுப் போர் நடைபெற்றதுடன் இங்கிலாந்து கடற்படையினர் மூன்றாம் எட்வர்டு தலைமையின் கீழ் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர்.
  • 1374ல் செருமனியின் ஆஃகன் நகரில் புனித ஜானின் நடனம் அந்நகர மக்களுக்கு மாயத்தோற்ற‌ங்களைக் கொடுத்து மக்களை பித்துப் பிடித்தவர்கள் போல நடனமாட வைத்து மக்கள் மயங்கும் வரை நடனம் ஆடினர். பின்னர் இது ஐரோப்பாவெங்கும் பரவியது.
  • 1497ல் ஜான் கபோட் வட அமெரிக்காவில் நியூபவுண்லாந்து தீவில் தரையிறங்கி வைக்கிங்குகளுக்குப் பின்னர் அப்பகுதியை ஆராய்ந்த முதலாவது ஐரோப்பியர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
  • 1509ல் இங்கிலாந்தின் மன்னராக எட்டாம் ஹென்றி முடி சூடினார்.
  • 1571ல் மணிலா நகரை மிகுவெல் உலோபசு டி லெகாசுபி அமைத்தார்.
  • 1597ல் கிழக்கிந்தியத் தீவுகளுக்கான முதலாவது இடச்சுப் பயணிகள் கப்பல் சாவகத்தை அடைந்தது.
  • 1622ல் டச்சு நாட்டவர் மக்காவு நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் தோல்வி கண்டனர்.
  • 1779ல் ஜிப்ரால்ட்டர் மீதான பெரும் முற்றுகை ஆரம்பமானதுடன் அமெரிக்கப் புரட்சிப் போர் நடைபெற்றது.
  • 1812ல் நெப்போலியப் போர்களில் உருசியாவினுள் ஊடுருவும் முயற்சியில் நெப்போலியனின் பெரும் படை நேமன் ஆற்றைக் கடந்தது.
  • 1813ல் கனடா, ஒண்டாரியோவில் பீவர் அணை சமரில் பிரித்தானிய இந்தியக் கூட்டுப் படை அமெரிக்க இராணுவத்தைத் தோற்கடித்தது.
  • 1821ல் கரபோபோ என்ற இடத்தில் எசுப்பானியாவிடம் இருந்து வெனிசுவேலாவின் விடுதலைக்கான போர் நடைபெற்றது.
  • 1856ல் முதன் முதலில் பார்ட்டிங் என்பவரால் இலங்கையில் புகைப்படக்கலை அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1859ல் வடக்கு இத்தாலியில் சார்தீனியா, மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.
  • 1880ல் முதல் தடவையாக கனடாவின் நாட்டுப்பண்ணாகப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓ கனடா பாடல் பாடப்பட்டது.
  • 1894ல் பிரான்சின் அரசுத் தலைவரான‌ மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.
  • 1902ல் குடல்வாலழற்சியால் ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு பாதிக்கப்பட்டதால் அவரது முடிசூடல் தள்ளிப்போடப்பட்டது.
  • 1913ல் பல்காரியாவுடனான தொடர்பை கிரேக்கமும் செர்பியாவும் துண்டித்தன.
  • 1932ல் சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சியை அடுத்து மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.
  • 1938ல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் வீழ்ந்தது.
  • 1939ல் சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது.
  • 1948ல் பனிப்போர் நடைபெற்றதுடன் சோவியத் ஒன்றியம் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.
  • 1950ல் தென்னாப்பிரிக்காவில் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.
  • 1963ல் உள்ளக சுயாட்சியை சான்சிபாருக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கியது.
  • 1973ல் அமெரிக்காவின் நியூ ஓர்லென்சில் தன்னினச் சேர்க்கையாளர்கள் கூடிய விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவைப்பு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.
  • 1989ல் தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாலராக யான் சமீன்த தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1997ல் ஈழப்போர் நடைபெற்றதுடன் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.
  • 2002ல் தான்சானியாவில் இடம்பெற்ற பெரும் தொடருந்து விபத்தில் 281 பேர் உயிரிழந்தனர்.
  • 2004ல் மரண தண்டனை சட்டவிரோதமானதாக நியூயோர்க்கில் அறிவிக்கப்பட்டது.
  • 2010ல் ஜூலியா கிலார்ட் ஆத்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார்.
  • 2007ல் கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
  • 2013ல் இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தமது அதிகாரத்தை முறை தவறிப் பயன்படுத்தியதாகவும், குறைவயது விலைமாது ஒருவருடன் உறவைப் பேணியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 24-06 June 24

  • 1542ல் எசுப்பானியப் புனிதரான‌ சிலுவையின் புனித யோவான் பிறந்த நாள் (இறப்பு 1591)
  • 1619ல் ஒல்லாந்த இலங்கையின் ஆளுநரான‌ ரைக்லாவ் வொன் கூன்சு பிறந்த நாள் (இறப்பு 1682)
  • 1883ல் பிரான்சிய ஓவியரான‌ யோன் மெட்சிங்கர் பிறந்த நாள் (இறப்பு 1956)
  • 1885ல் சீக்கிய அரசியல், சமயத் தலைவரான‌ தாரா சிங் பிறந்த நாள் (இறப்பு 1967)
  • 1907ல் தமிழகத் தமிழறிஞரான‌ கா. அப்பாத்துரை பிறந்த நாள் (இறப்பு 1989)
  • 1915ல் ஆங்கிலேய வானியலாளரான‌ பிரெட் ஆயில் பிறந்த நாள் (இறப்பு 2001)
  • 1921ல் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞருமான‌ கண்ணதாசன் பிறந்த நாள் (இறப்பு 1981)
  • 1928ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளரான‌ எம். எஸ். விஸ்வநாதன் பிறந்த நாள் (இறப்பு 2015)
  • 1929ல் அமெரிக்க வானியலாளரான‌ கரோலின் சூமேக்கர் பிறந்த நாள்
  • 1937ல் இந்திய-அமெரிக்க எழுத்தாளரான‌ அனிதா தேசாய் பிறந்த நாள்
  • 1938ல் தமிழக எழுத்தாளரான‌ நீல.பத்மநாபன் பிறந்த நாள்
  • 1953ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளரும் இயற்பியலாளருமான‌ வில்லியம். ஈ. மோர்னர் பிறந்த நாள்
  • 1961ல் இசுக்கொட்டிய நடிகரான‌ இயன் கிளென் பிறந்த நாள்
  • 1966ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் அரசியல்வாதியுமான‌ விஜயசாந்தி பிறந்த நாள்
  • 1968ல் உருசிய-இசுரேலிய சதுரங்க வீரரான‌ போரிசு கெல்பண்ட் பிறந்த நாள்
  • 1974ல் தென்னிந்தியத் திரைப்படப் பாடகரான‌ மது பாலகிருஷ்ணன் பிறந்த நாள்
  • 1979ல் அமெரிக்க நடிகையான மிண்டி காலிங் பிறந்த நாள்
  • 1987ல் அர்ச்செந்தீனக் காற்பந்தாட்ட வீரரான‌ லியோனல் மெசி பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 24-06 June 24

  • 1398ல் சீனப் பேரரசரான‌ கோங்வு இறப்பு நாள் (பிறப்பு 1328)
  • 1564ல் கோண்டுவானா அரசியான‌ ராணி துர்காவதி இறப்பு நாள் (பிறப்பு 1524)
  • 1908ல் அமெரிக்காவின் 22வது, 24வது அரசுத்தலைவரான‌ குரோவர் கிளீவ்லாண்ட் இறப்பு நாள் (பிறப்பு 1837)
  • 1947ல் இந்தியப் பௌத்தப் பேரறிஞரான‌ தர்மானந்த தாமோதர் கோசாம்பி இறப்பு நாள் (பிறப்பு 1876)
  • 1957ல் செக் நாட்டு ஓவியரான‌ பிரான்டிசேக் குப்கா இறப்பு நாள் (பிறப்பு 1871)
  • 1963ல் மெக்சிக்கோ புனிதரான‌ மரிய குவாதலூபே கார்சிய சவாலா இறப்பு நாள் (பிறப்பு 1878)
  • 1980ல் இந்தியாவின் 4-வது குடியரசுத் தலைவரான‌ வி. வி. கிரி இறப்பு நாள் (பிறப்பு 1894)
  • 1992ல் தமிழக கருநாடக இசைப் பாடகரான‌ மகாராஜபுரம் சந்தானம் இறப்பு நாள் (பிறப்பு 1928)
  • 2006ல் தமிழக எழுத்தாளரும் திரைப்பட விமர்சகருமான‌ சிட்டி பெ. கோ. சுந்தரராஜன் இறப்பு நாள் (பிறப்பு 1910)
  • 2007ல் கனடிய மற்போர் வீரரான‌ கிறிஸ் பென்வாஇறப்பு நாள் (பிறப்பு 1967)
  • 2008ல் நோபல் பரிசு பெற்ற உருசிய-அமெரிக்க பொருளியலாளரான‌ லியோனிடு ஹுர்விக்ஸ் இறப்பு நாள் (பிறப்பு 1917)
  • 2020ல் இலங்கை வானொலி அறிவிப்பாளரும் நடிகருமான‌ எஸ். நடராஜசிவம் இறப்பு நாள்

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleJune 23 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 23
Next articleJune 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 25