June 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 25

0

Today Special Historical Events In Tamil | 25-06 June 25

June 25 Today Special | June 25 What Happened Today In History. June 25 Today Whose Birthday (born) | June-25th Important Famous Deaths In History On This Day 25/06 | Today Events In History June-25th | Today Important Incident In History | ஜூன் 25 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 25-06 | ஆனி மாதம் 25ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 25.06 Varalatril Indru Nadanthathu Enna.

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 25-06

  • தனி ஆட்களும் குழுக்களும் மரங்களை நட்டு மரங்கள்பால் அக்கறை கொள்ள ஊக்குவிக்கப்பதற்காக‌ மர நாள் கொண்டாடப்படுகிறது.
  • 1975ல் மொசாம்பிக் போர்த்துகலிடம் இருந்து விடுதலை பெற்ற‌ நாள் கொண்டாடப்படுகிறது.
  • குவாத்தமாலா எனும் நாட்டில் ஆசிரியர் நாள் கொண்டாடப்படுகிறது.
  • உலக தோல் நிறமி இழத்தல் என்னும் இந்த சரும பாதிப்பு நாளாக கொள்ளப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 25-06 June 25

  • 1632ல் எத்தியோப்பியாவின் பாசிலிடெசு பேரரசர் எத்தியோப்பியப் பழமைவாதக் கிறிஸ்தவத்தை அரச மதமாக அறிவித்து இயேசு சபையின் உடைமைகளைக் கைப்பற்றினார்.
  • 1658ல் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஜமேக்காவை கைப்பற்றுவதில் எசுப்பானியப் படையினர் தோல்வியடைந்தனர்.
  • 1678ல் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையை வெனிசைச் சேர்ந்த எலேனா பிசுகோபியா பெற்றார்.
  • 1741ல் அங்கேரியின் அரசியாக ஆத்திரியாவின் மரீயா தெரேசா முடிசூடினார்.
  • 1788ல் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்ட 10-வது மாநிலமாக வர்ஜீனியா ஆனது.
  • 1803ல் கண்டிப் போர்கள் நடைபெற்றது, கண்டியில் மேஜர் டேவி தலைமையிலான பிரித்தானியப் படையினர் கண்டி அரசிடம் சரணடைந்ததுடன் ஏராளமான பிரித்தானியர் படுகொலை செய்யப்பட்டனர்.
  • 1900ல் கற்குகைகள் தொடர்பான அரிய கையெழுத்துப்படிகளை தாவோயிசத் துறவியான‌ வாங் யுவான்லூ துன்குவாங் துன்குவாங் மொகாவோ கண்டுபிடித்தார்.
  • 1910ல் ஒழுக்கக்கேடான நோக்கத்திற்காக பெண்களை மாநிலங்களிடையே கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கும் சட்டத்தை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நிறைவேற்றியது.
  • 1935ல் கொலம்பியாவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது.
  • 1940ல் இரண்டாம் உலகப் போரின் போது பிரான்சு அதிகாரப்பூர்வமாக செருமனியிடம் சரணடைந்தது.
  • 1943ல் பெரும் இன அழிப்பு, போலந்து, செஸ்டசோவா வதைமுகாமில் யூதர்கள் நாட்சிகளுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
  • 1944ல் இரண்டாம் உலகப் போர், நோர்டிக் நாடுகளின் மிகப் பெரும் சமர் சோவியத் ஒன்றியத்துக்கு எதிராக பின்லாந்தில் ஆரம்பமானது.
  • 1950ல் வட கொரியா தென் கொரியா மீது படையெடுத்ததை அடுத்து கொரியப் போர் ஆரம்பமானது.
  • 1960ல் பனிப்போர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர்களாகப் பணியாற்றிய குறியாக்கவியலாளர்கள் இருவர் மெக்சிக்கோவிற்கு விடுமுறையில் சென்று அங்கிருந்து சோவியத் ஒன்றியத்திற்கு சென்றனர்.
  • 1975ல் இந்தியப் பிரதமரான‌ இந்திரா காந்தி நாட்டில் நெருக்கடி நிலையைப் பிறப்பித்து தேர்தல்கள் மற்றும் மனித உரிமைப் போராட்டங்களைத் தடை செய்தார்.
  • 1975ல் மொசாம்பிக் போர்த்துகல்லிடமிருந்து விடுதலை அடைந்தது.
  • 1981ல் வாசிங்டனில் மைக்ரோசாப்ட் நிறுவனமயப்படுத்தப்பட்டது.
  • 1983ல் இலண்டனில் நடந்த உலகக் கிண்ணத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை 43 ஓட்டங்களால் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
  • 1991ல் யுகோசுலாவியாவிடம் இருந்து குரோவாசியாவும் சுலோவீனியாவும் விடுதலையை அறிவித்தன.
  • 1996ல் சவூதி அரேபியாவில் கோபார் கோபுரத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 19 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.
  • 1997ல் ஆளில்லா புரோகிரஸ் விண்கலம் உருசிய விண்வெளி நிலையம் மீருடன் மோதியது.
  • 1998ல் வின்டோஸ் 98 முதற் பதிப்பு வெளியானது.
  • 2007ல் கம்போடியாவில் விமானம் வீழ்ந்து நொருங்கியதில் அதில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர்.
  • 2017ல் ஏமனில் 200,000 இற்கும் அதிகமானோர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 25-06 June 25

  • 1852ல் குவெல் பூங்காவை வடிவமைத்த எசுப்பானியக் கட்டிடக் கலைஞரான‌ அந்தோனி கோடி பிறந்த நாள் (இறப்பு 1926)
  • 1896ல் இலங்கை அரசியல்வாதியான‌ சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம் பிறந்த நாள்
  • 1900ல் பிரித்தானிய இந்தியாவின் 44வது தலைமை ஆளுநரான‌ மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த நாள் (இறப்பு 1979)
  • 1900ல் உக்ரைனிய-சோவியத் வானியலாளரான‌ சினைதா அக்சென்சியேவா பிறந்த நாள் (இறப்பு 1969)
  • 1903ல் பிரித்தானிய எழுத்தாளரான‌ ஜார்ஜ் ஆர்வெல் பிறந்த நாள் (இறப்பு 1950)
  • 1908ல் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சரான‌ சுசேதா கிருபளானி பிறந்த நாள் (இறப்பு 1974)
  • 1925ல் அமெரிக்கக் கட்டிடக் கலைஞரான‌ ராபர்ட் வெஞ்சூரி பிறந்த நாள்
  • 1931ல் இந்தியாவின் 7வது பிரதமரான‌ வி. பி. சிங் பிறந்த நாள் (இறப்பு 2008)
  • 1933ல் ஈழத்து ஓவியரான‌ அ. மாற்கு பிறந்த நாள் (இறப்பு 2000)
  • 1935ல் இலங்கை-கனடியத் தமிழ் எழுத்தாளரான‌ ஆர். சிவலிங்கம் பிறந்த நாள்
  • 1959ல் ஆத்திரேலிய வானியலாளரான‌ உரோபெர்த்தா வைல் பிறந்த நாள் (இறப்பு 1996)
  • 1961ல் ஆங்கிலேய நடிகரும் இயக்குநருமான‌ ரிக்கி கேர்வைஸ் பிறந்த நாள்
  • 1962ல் இலங்கை அரசியல்வாதியும் வழக்கறிஞரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான‌ நடராஜா ரவிராஜ் பிறந்த நாள் (இறப்பு 2006)
  • 1972ல் லிபிய அரசியல்வாதியான‌ சைஃப் அல்-இசுலாம் கதாஃபி பிறந்த நாள்
  • 1975ல் உருசிய சதுரங்க வீரரான‌ விளாடிமிர் கிராம்னிக் பிறந்த நாள்
  • 1978ல் இந்தியத் திரைப்பட நடிகரான‌ அப்தப் சிவதசனி பிறந்த நாள்
  • 1981ல் தென்னிந்திய நடிகையான‌ பூஜா பிறந்த நாள்

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead In History Today 25-06 June 25

  • 1671ல் இத்தானிய மதகுருவும் வானியலாளருமான‌ ஜியோவானி ரிக்கியொலி இறப்பு நாள் (பிறப்பு 1598)
  • 1772ல் சிவகங்கை பாளைய மன்னரான‌ முத்து வடுகநாதர் இறப்பு நாள்
  • 1894ல் பிரான்சின் 5வது அரசுத்தலைவரான‌ மரீ பிரான்சுவா சாடி கார்னோ இறப்பு நாள் (பிறப்பு 1837)
  • 1960ல் செருமானிய வானியலாளரான‌ வால்டேர் பாடே இறப்பு நாள் (பிறப்பு 1893)
  • 1965ல் சுவீடிய வானியலாளரான‌ பெர்ட்டில் இலிண்ட்பிளாடு இறப்பு நாள் (பிறப்பு 1895)
  • 1984ல் பிரான்சிய வரலாற்றாளரும் மெய்யியலாளருமான‌ மிஷேல் ஃபூக்கோ இறப்பு நாள் (பிறப்பு 1926)
  • 2007ல் இந்திய திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான‌ ஜீவா இறப்பு நாள் (பிறப்பு 1963)
  • 2007ல் மலேசியத் திரைப்பட நடிகையான‌ சுஜாதா கிருஷ்ணன் இறப்பு நாள் (பிறப்பு 1979)
  • 2009ல் அமெரிக்கப் பாடகரும் நடிகருமான‌ மைக்கல் ஜாக்சன் இறப்பு நாள் (பிறப்பு 1958)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleJune 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 24
Next articleJune 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 26