June 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 13

0

June 13 Today Special | June 13 What Happened Today In History. June 13 Today Whose Birthday (born) | June-13th Important Famous Deaths In History On This Day 13/06 | Today Events In History June-13th | Today Important Incident In History | ஜூன் 13 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 13-06 | ஆனி மாதம் 13ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 13.06

Today Special Historical Events In Tamil | 13-06

இன்றை நாளின் சிறப்பு

 • ஹ‌ங்கேரியின் கண்டுபிடிப்பாளர் நாள்.
 • ஈராக்கிய குர்திஸ்தானின் மாவீரர் நாள்.

வரலாற்று நிகழ்வுகள்

 • 313ல் உரோமைப் பேரரசில் அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கவேண்டும் என்னும் கட்டளை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைனால் விடுக்கப்பட்டது.
 • 1381ல் இலண்டனில் விவசாயிகளின் போராட்டம் காரணமாக‌ சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது.
 • 1514ல் இங்கிலாந்தில் 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனைக் கொண்ட‌ மிகப் பெரும் போர்க் கப்பல் அமைக்கப்பட்டது.
 • 1525ல் கத்தோலிக்க திருச்சபையின் கட்டளையை மீறி மார்ட்டின் லூதர் கத்தரீனா வொன் போரா என்பவரைத் திருமணம் செய்தார்.
 • 1625ல் இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கத்தோலிக்க இளவரசி பிரான்சின் என்றியேட்டா மரியாவைத் திருமணம் செய்தார்.
 • 1774ல் றோட் தீவு அடிமைகள் இறக்குமதியை தடை செய்தது. அடிமை இறக்குமதியைத் தடை செய்த முதல் நாடு இதுவாகும்.
 • 1871ல் லாப்ரடோரில் என்னும் சூறாவளி தாக்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.
 • 1881ல் ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் பனிக்கட்டியுடன் மோதி மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
 • 1886ல் பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது.
 • 1917ல் முதலாம் உலகப் போரில் லண்டனின் நகர் மீது ஜேர்மனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1925ல் சார்ல்ஸ் ஜென்கின்ஸ் என்பவர் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.
 • 1931ல் இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
 • 1934ல் கிட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்துக்கொண்டனர்.
 • 1944ல் இரண்டாம் உலகப் போரில் வில்லெர்ஸ்-போக்காஜ் சண்டையில் ஜேர்மனியத் தாங்கிகள் பிரித்தானியப் படைகளைத் தாக்கியதில் 14 பிரித்தானியத் தாங்கிகள் அழிக்கப்பட்டன‌.
 • 1944ல் இரண்டாம் உலகப் போர்ரில் ஜேர்மனி வி௧ என்னும் பறக்கும் வெடிகுண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. மொத்தமாக‌ 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கியது.
 • 1948ல் ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான, தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
 • 1948ல் மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.
 • 1952ல் சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.
 • 1955ல் சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
 • 1977ல் மூன்று நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து தப்பிய மார்ட்டின் லூதர் கிங்கின் கொலையாளி யேம்சு ரே மீண்டும் கைது செய்யப்பட்டான்.
 • 1981ல் லண்டனில் இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் இரண்டாம் எலிசபெத் மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளை சுட்டுத் தீர்த்தான்.
 • 1982ல் சவூதி அரேபியாவின் மன்னராக பாகுத் முடிசூடிக்கொண்டார்.
 • 1983ல் நெப்டியூனின் சுற்றுவட்டத்தை பயனியர் 10 எட்டியது, மத்திய சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் என்ற சாதனையை பயனியர் 10 படைத்தது.
 • 2000ல் வடகொரியத் தலைநகர் பியொங்யாங்கில் தென்கொரியாவின் அரசுத்தலைவர் கிம் டாய் ஜுங்கும் வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங்கும் சந்தித்தனர். இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
 • 2002ல் ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அமெரிக்கா விலகியது.
 • 2006ல் நியூ ஹரைசன்ஸ் விண்கலம் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் “132524 ஏபிஎல்” என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.
 • 2007ல் திருகோணமலையில் “மேர்சி கோப்ஸ்” என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் பிலிப்பீன்ஸ் பணியாளர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டார்.
 • 2010ல் 25143 இத்தொகாவா என்ற சிறுகோளில் இருந்து மண் மாதிரிகளுடன் அயபூசா என்ற சப்பானிய விண்கலம் பூமி திரும்பியது.
 • 2012ல் ஈராக்கின் பல பாகங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று பிறந்தவர்கள்

 • 40ல் உரோமை இராணுவத் தளபதி அக்ரிகோலா நீயஸ் ஜூலியஸ் பிறந்த நாள் (இறப்பு 93)
 • 1773ல் ஆங்கிலேய இயற்பியலாளரும் உளவியலாளருமான தாமசு யங் பிறந்த நாள் (இறப்பு 1829)
 • 1831ல் இசுக்கொட்டிய இயற்பியலாளரும் கணிதவியலாளருமான ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல் (இறப்பு 1879)
 • 1865ல் நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து கவிஞர் டபிள்யூ. பி. யீட்சு பிறந்த நாள் (இறப்பு 1939)
 • 1870ல் நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய உயிரியலாளர் ஜூல்ஸ் போர்டெட் பிறந்த நாள் (இறப்பு 1961)
 • 1903ல் மலையால எழுத்தாளர் சஞ்சயன் பிறந்த நாள் (இ. 1943)
 • 1905ல் இலங்கைத் தமிழ் வரலாற்றாளரும் நூலாசிரியருமான ஜேம்ஸ் இரத்தினம் பிறந்த நாள் (இறப்பு 1988)
 • 1909ல் கேரளத்தின் 1வது முதலமைச்சர் ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு பிறந்த நாள் (இறப்பு 1998)
 • 1911ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் லூயிஸ் வால்டர் அல்வாரெஸ் பிறந்த நாள் (இறப்பு 1988)
 • 1917ல் பராகுவை புதின எழுத்தாளர் அகுஸ்டோ ரொவ பாஸ்டோ பிறந்த நாள் (இறப்பு 2005)
 • 1928ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கக் கணிதவியலாளர் ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் பிறந்த நாள் (இறப்பு 2015)
 • 1933ல் ஈழத்து எழுத்தாளர் யாழ்வாணன் பிறந்த நாள் (இறப்பு 1996)
 • 1935ல் தாய்லாந்தின் 25வது பிரதமர் சமாக் சுந்தரவேஜ் பிறந்த நாள் (இறப்பு 2009)
 • 1944ல் தென்கொரிய அரசியல்வாதியும் ஐநாவின் 8வது பொதுச் செயலருமான பான் கி மூன் பிறந்த நாள்.
 • 1946ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரிவேதியலாளர் பவுல் மோட்ரிச் பிறந்த நாள்.
 • 1946ல் நேபாளத்தின் 32-வது பிரதமர் செர் பகதூர் தேவ்பா பிறந்த நாள்.
 • 1959ல் உருமேனியாவின் 5வது அரசுத்தலைவர் கிளாசு யோகன்னிசு பிறந்த நாள்.
 • 1966ல் உருசியக் கணிதவியலாளர் கிரிகோரி பெரல்மான் பிறந்த நாள்.
 • 1981ல் அமெரிக்க நடிகரும் தயாரிப்பாளருமான கிறிஸ் எவன்ஸ் பிறந்த நாள்.
 • 1987ல் தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்று இறந்தவர்கள்

1231ல் போர்த்துக்கீசப் புனிதர் பதுவை நகர அந்தோனியார் இறந்த‌ நாள் (பிறப்பு 1195)
1861ல் ஆங்கிலேய உடல்கூறியலாளரும் மருத்துவருமான ஹென்றி கிரே இறந்த‌ நாள் (பிறப்பு 1827)
1931ல் ஜ‌ப்பானிய மருத்துவர் கிடசாடோ சிபாசாபுரோ இறந்த‌ நாள் (பிறப்பு 1851)
1960ல் அமெரிக்க வானியலாளர் கார்ல் கீனான் சீபெர்ட் இறந்த‌ நாள் (பிறப்பு 1911)
1969ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான கோ. வேங்கடாசலபதி இறந்த‌ நாள் (பிறப்பு 1909)
1969ல் இந்திய ஊடகவியலாளரும் திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான‌ பிரகலாத் கேசவ் அத்ரே இறந்த‌ நாள் (பிறப்பு 1898)
1973ல் இந்திய மருந்தியலாளர் ராம்நாத் சோப்ரா இறந்த‌ நாள் (பிறப்பு 1882)
1987ல் இந்தியக் கணிதவியலாளர் கணபதி அய்யர் இறந்த‌ நாள் (பிறப்பு 1906)
1988ல் தமிழகத் தமிழறிஞர், தமிழிசை அறிஞர் க. வெள்ளைவாரணனார் இறந்த‌ நாள் (பிறப்பு 1917)
1998ல் பிரேசில் கட்டிடக்கலைஞர் லூசியோ கோஸ்தா இறந்த‌ நாள் (பிறப்பு 1902)
2007ல் இந்திய மெய்யியலாளர் இராமச்சந்திர காந்தி இறந்த‌ நாள் (பிறப்பு 1937)
2012ல் பாக்கித்தானிய கசல் பாடகர் மெஹ்தி அசன் இறந்த‌ நாள் (பிறப்பு 1927)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 13.06.2020 Today Rasi Palan 13-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next article14-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 14-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live