14-06-2020 இன்றைய தலைப்பு செய்திகள் Tamil News Today 14-06-2020 Today News in Tamil – Tamil News Today – Tamil News Live

0

Tamil news today 14-06-2020, Tamil news today, Today news in tamil, Tamil News Live, Today popular news tamil 14.6.20, Today trending news tamil, Today news in tamil live, Today tamil news in sri lanka, Today tamil news in india, Indraya mukkiya seithigal, Indraya thalaippu seithigal, Tamil News Live 14/6/20, Today News in Tamil 14.06.2020, Today breaking news in tamil, today headlines tamil, இன்றைய தலைப்பு செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள்.

Tamil News Today Sri Lanka

கிளிநொச்சி, பரந்தன் சந்தைப்பகுதியில் நான்கு சிறிய வர்த்தக நிலைங்கள் உடைக்கப்பட்டு, பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.

முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களால் கவனயீர்ப்புப் போராட்டம்! மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு வளங்கள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

“நான் இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒரு குடிமகன்” என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ண ஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், அடக்குமுறைகள், இன அழிப்புகள், காட்டிக்கொடுப்பு, ஏமாற்றுக்கள், குழிபறிப்புக்கள் என்பவற்றுக்கெதிராக தமிழ் தேசிய அரசியலை வெற்றிபெறச் செய்யும், தனது அரசியல் போராட்டத்துக்கு முழுமையான ஆதரவும் மக்களிடம் நிதியுதவியும் கோரும் சி.வி. விக்னேஸ்வரன்.

Tamil News Today India

இந்தியாவின் மிக மூத்த கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி சனிக்கிழமை காலமானார். வயது முதிர்வு காரணமாக வசந்த் ராய்ஜியின் உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது.

இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என மாற்ற நினைத்தால் எதிர்மறை விளைவுகளையே சந்திக்க நேரிடும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் தென்மேற்கு பருவகாற்று காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தவறான பந்தயத்தில் வெற்றி பெறுவதற்காக தேசம் பயணிக்கிறது” என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் இடைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் வேலைக்கு செல்லமுடியாமல் தவித்து வரும் நிலையில் வீட்டு வாடகை, கடன் தொகை, என்பவற்றை கட்டாயப்படுத்தி வசூல் செய்ய கூடாது என அரசு அறிவித்துள்ளது.

Tamil News Today World

சீன தலைநகர் பீஜிங்கில் மீண்டும் புதிதாக கொரொனா தொற்று 10 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த பொலிஸார்!

கொரொனா முடக்கநிலை காரணமாக, பிரித்தானியாவின் பொருளாதாரம் ஏப்ரல் மாதத்தில் 20.4 சதவீதம் சுருங்கியுள்ளது.

கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக உயிரிழப்பை சந்தித்த இரண்டாவது நாடாக பிரேஸில் மாறியுள்ளது.

எந்தவொரு அமெரிக்க அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு, நாடு நம்பகமான இராணுவப் படைகளை உருவாக்கும் என வடகொரியா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில் கு(ண்)டு வெடிப்பு ஒருவர் பலி 15 பேர் காயம்.

Tamil News Live

நடிகர் விஜய்,சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர்களின் பாதுகாவலர் மஞ்சள் காமாலை காரணமாக மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்.

நயன்தாரா அம்மன் புகைப்படத்தை வைத்து இளைஞர் ஒருவர் கும்பிடுவது போல், அதற்கு அப்பா அடிக்க துரத்துவது போல், ஒரு மீம் வைரல் ஆகி வருகிறது.

அடுத்து அருண்விஜய் நடிப்பில் “வா டீல்” படம் OTTக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.

இலங்கையில் 48 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வில் அம்புகளின் பயன்பாடு இருந்துள்ளது. ஆய்வில் தகவல்.

Today News Tamil – Tamil News Today 14-06-2020

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleJune 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil June 13
Next articleஇன்றைய ராசி பலன் 14.06.2020 Today Rasi Palan 14-06-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!