January 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 01

0

Today Special Historical Events In Tamil | 01-01 | January 01

January 01 Today Special | January 01 What Happened Today In History. January 01 Today Whose Birthday (born) | January-01st Important Famous Deaths In History On This Day 01/01 | Today Events In History January-01st | Today Important Incident In History | தை 01 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 01-01 | தை மாதம் 01ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 01.01 Varalatril Indru Nadanthathu Enna| January 01 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 01/01 | Famous People Born Today January 01 | Famous People died Today 01-01.

January 01
  • Today Special in Tamil 01-01
  • Today Events in Tamil 01-01
  • Famous People Born Today 01-01
  • Famous People died Today 01-01
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 01-01 | January 01

    இயேசுவின் விருத்தசேதன விழா கொண்டாடப்படுகிறது.
    புத்தாண்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
    சப்பானியப் புத்தாண்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
    உலக அமைதி நாளாக கொண்டாடப்படுகிறது.
    குவான்சா விழாவின் கடைசி நாளாக கொண்டாடப்படுகிறது.
    எயிட்டி, சூடான், கமரூன், புரூணை, செக் குடியரசு,சிலோவாக்கியா ஆகியவற்றின் விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது.

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 01-01 | January 01

    கிமு 45ல் உரோமைப் பேரரசில் யூலியன் நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது, சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது.
    கிமு 42ல் உரோமை மேலவை யூலியசு சீசரை கடவுளுக்கான மரியாதையை அளித்தது.
    1001ல் முதலாம் இசுடீவன் அங்கேரியின் முதலாவது மன்னராக அறிவிக்கப்பட்டார்.
    1068ல் நான்காம் ரொமானசு பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.
    1502ல் போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெட்ரோ ஆல்வாரெஸ் கப்ரால் பிரேசில் நாட்டின் இரியோ டி செனீரோ நகரை அடைந்தார்.
    1515ல் பன்னிரண்டாம் லூயி இறந்ததை அடுத்து, அவரது மருமகன் 20-அகவையில் முதலாம் பிரான்சிசு பிரான்சின் மன்னராக முடி சூடினான்.
    1600ல் இசுக்கொட்லாந்து மார்ச் 25 இற்குப் பதிலாக சனவரி 1 ஐ ஆண்டின் தொடக்க நாளாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.
    1651ல் இரண்டாம் சார்லசு இசுக்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
    1700ல் உருசியா அனோ டொமினி முறையைப் பின்பற்ற ஆரம்பித்தது.
    1707ல் போர்த்துகல்லின் மன்னராக ஐந்தாம் ஜான் முடிசூடினார்.
    1752ல் கிரிகோரியன் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது.
    1772ல் 90 ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தக்கூடியதான உலகின் முதலாவது பயணிகள் காசோலை லண்டனில் விற்பனைக்கு வந்தது.
    1776ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: அரச கடற்படை மற்றும் அமெரிக்க விடுதலைப் படையினரின் நடவடிக்கையினால் வர்ஜீனியாவின் நோர்போக் நகரம் தீப்பற்றி அழிந்தது.
    1788ல் தி டைம்ஸ் முதல் இதழ் இலண்டனில் வெளியிடப்பட்டது.
    1800ல் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டது.
    1801ல் சிறுகோள் பட்டையில் காணப்படக்கூடிய மிகப்பெரும் பொருள் சியரீசு கியூசெப்பே பியாசி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
    1801ல் பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆனது.
    1804ல் எயிட்டியில் பிரெஞ்சு ஆட்சி முடிவுக்கு வந்தது. இதுவே முதலாவது கறுப்பினக் குடியரசும், வட அமெரிக்காவில் ஐக்கிய அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாவது விடுதலை பெற்ற நாடும் ஆகும்.
    1808ல் ஐக்கிய அமெரிக்காவில் அடிமைகளை இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டது.
    1833ல் ஐக்கிய இராச்சியம் போக்லாந்து தீவுகளின் மீது உரிமை கொண்டாடியது.
    1858ல் இலங்கையில் முதலாவது தந்திச் சேவை கொழும்புக்கும் காலிக்கும் இடையில் ஆரம்பமானது.
    1866ல் யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக காவற்துறை அமைக்கப்பட்டது.
    1867ல் ஐக்கிய அமெரிக்காவில் ஒஹாயோவின் “சின்சினாட்டி” நகருக்கும் கென்டக்கியின் “கொவிங்டன்” நகருக்கும் இடையில் ஜோன் ஏ. ரோப்லிங் தொங்கு பாலம் திறக்கப்பட்டது. இதுவே உலகின் அதி நீளமான தொங்கு பாலமாகும்.
    bஇலங்கையில் ரூபாய், மற்றும் சதம் ஆகிய நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
    1872ல் முதலாவது இந்திய அஞ்சல் ஆல்ப்சின் சேனீ மலைச் சுரங்கம் ஊடாக சென்றது.
    1877ல் இந்தியாவின் மகாராணியாக விக்டோரியா தில்லியில் அறிவிக்கப்பட்டார்.
    1883ல் இலங்கையின் தமிழர் தாயகம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
    1886ல் பர்மா விக்டோரியா மகாராணிக்கு அவரது பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்டது.
    1890ல் எரித்திரியா இத்தாலிய குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.
    1893ல் யப்பானில் கிரெகோரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது.
    1899ல் கியூபாவில் எசுப்பானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
    1901ல் நைஜீரியா பிரித்தானியாவின் முதலாவது காப்பரசானது.
    1901ல் பிரித்தானியக் குடியேற்ற நாடுகளான நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா, தாசுமேனியா, மேற்கு ஆஸ்திரேலியா ஆகியன ஆத்திரேலியப் பொதுநலவாயம் என்ற ஒரே நாடாக இணைந்தன. அதன் முதலாவது பிரதமராக எட்மண்ட் பார்ட்டன் தெரிவு செய்யப்பட்டார்.
    1906ல் பிரித்தானிய இந்தியாவில் இந்திய சீர்தர நேரம் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    1911ல் வட மண்டலம் தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து பிரிக்கப்பட்டு ஆஸ்திரேலிய நடுவண் அரசின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது.
    1912ல் சீனக் குடியரசு அமைக்கப்பட்டது.
    1919ல் ஸ்கொட்லாந்தில் அயோலயர் என்ற கப்பல் மூழ்கியதில் 205 பேர் உயிரிழந்தனர்..
    1927ல் மெக்சிக்கோவில் கத்தோலிக்க மதத் தடையை எதிர்த்து மதத் தீவிரவாதிகள் அரசுடன் போர் தொடுத்தனர்.
    1927ல் துருக்கி கிரெகொரியின் நாட்காட்டியை அறிமுகப்படுத்தியது. இதன்படி 1926, டிசம்பர் 18 இற்கு அடுத்த நாள் சனவரி 1, 1927 ஆக மாற்றப்பட்டது.
    1928ல் யோசப் ஸ்டாலினின் தனிச்செயலரான போரிஸ் பசனோவ் சோவியத் ஓன்றியத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எல்லை கடந்து ஈரான் சென்றார்.
    1935ல் இத்தாலியக் குடியேற்ற நாடுகளான திரிப்பொலி, சிரெனாய்க்கா ஆகியன சேர்ந்து லிபியா ஆகியன.
    1945ல் இரண்டாம் உலகப் போர்: மால்மெடி படுகொலைகளுக்கு எதிர்த்தாக்குதலாக அமெரிக்கா பெல்ஜியத்தில் 60 நாட்சி ஜெர்மனி போர்க் கைதிகளைக் கொன்றது.
    1945ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியின் வான்படை வடக்கு ஐரோப்பாவில் நேச நாடுகளின் வான் படைகளை அழிக்கும் நோக்குடன் போடன்பிளாட் நடவடிக்கையை மேற்கொண்டது.
    1947ல் பனிப்போர்: இரண்டாம் உலகப் போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட செருமனியின் பிரித்தானிய மற்றும் அமெரிக்கப் பகுதிகள் ஒன்றாக்கப்பட்டன. இது பின்னர் ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு எனப் பெயர் பெற்றது.
    1948ல் பிரித்தானிய தொடருந்து சேவைகள் தேசியமயமாக்கப்பட்டன.
    1948ல் பிரிவினைக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்ட 550 மில்லியன் ரூபாய் பணத்தை இந்தியா தரமுடியாதென அறிவித்தது.
    1949ல் ஐநா அறிவுறுத்தலின் படி காஷ்மீரில் நள்ளிரவுக்கு ஒரு நிமிடத்துக்கு முன்னர் போர்நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பாகிஸ்தானுடனான இந்தியப் போர் முடிவுக்கு வந்தது.
    1956ல் எகிப்து மற்றும் பிரித்தானியா ஆகியவற்றிடம் இருந்து சூடான் விடுதலை பெற்றது.
    1958ல் இலங்கையில் வாகன இலக்கத்தகடுகளில் சிங்கள மொழியில் ශ්‍රී (ஸ்ரீ) எழுத்து கட்டாயமாக்கப்பட்டது.
    1958ல் இலங்கையில் பேருந்து சேவை தேசியமயமாக்கப்பட்டது.
    1958ல் ஐரோப்பிய சமுகம் அமைக்கப்பட்டது.
    1959ல் கியூபப் புரட்சி: கியூபாவின் அரசுத்தலைவர் புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா பிடெல் காஸ்ட்ரோவின் படைகளினால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
    1960ல் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிடம் கமரூன் இருந்து விடுதலை பெற்றது.
    1962ல் சமோவா நியூசிலாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
    1964ல் ரொடீசியா, னியாசாலாந்து கூட்டமைப்பு கலைக்கப்பட்டு சாம்பியா, மலாவி ஆகிய இரு சுதந்திர நாடுகளாகவும், ரொடீசியா என்ற பிரித்தானிய ஆளுகைக்குட்பட்ட நாடாகவும் மூன்றாகப் பிரிக்கப்பட்டது.
    1971ல் அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் புகைத்தல் குறித்த விளம்பரங்கள் தடை செய்யப்பட்டன.
    1973ல் டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகியன ஐரோப்பிய பொருளாதார சமூகத்தில் இணைந்தன.
    1978ல் துபாய் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா 855 போயிங் 747 விமானம் வெடித்து பம்பாயில் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் 190 பயணிகள் உட்பட அனத்து 213 பேரும் உயிரிழந்தனர்.
    1979ல் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தூதரக உறவு நடைமுறைக்கு வந்தது.
    1981ல் கிரேக்கம் ஐரோப்பிய சமூகத்துடன் இணைந்தது.
    1981ல் பலாவுக் குடியரசு ஐக்கிய அமெரிக்காவின் அதிகாரத்துள் சுயாட்சி பெற்றது.
    1983ல் அர்ப்பாநெட் தனது மூல பிணைய நெறிமுறைகளை இணைய நெறிமுறையாக மாற்றியது இன்றைய இணையத்தின் தொடக்கத்திற்குக் காரணமானது.
    1984ல் புரூணை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
    1985ல் பிரித்தானியாவில் முதன் முதலில் செல்பேசித் தொடர்பை வோடபோன் நிறுவனம் ஏற்படுத்தியது.
    1989ல் ஓசோன் குறைபாட்டை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களைத் தடை செய்யும் மொன்ட்ரியால் உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
    1993ல் செக்கோசிலவாக்கியா நாடு செக் குடியரசு, சிலோவாக் குடியரசு என இரு நாடுகளாகப் பிளவடைந்தது.
    1995ல் ஆஸ்திரியா, பின்லாந்து, சுவீடன் ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
    1995ல் உலக வணிக அமைப்பு உருவாக்கப்பட்டது.
    1999ல் 11 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் யூரோ நாணயம் அறிமுகமானது.
    2007ல் பல்காரியா, உருமேனியா ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.
    2007ல் இந்தோனேசியாவின் மாக்காசார் நீரிணைப் பகுதியில் ஆடம் ஏர் 574 விமானம் 102 பேருடன் மூழ்கியது.
    2008ல் கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
    2009ல் தாய்லாந்து, பேங்காக் நகரில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 66 பேர் உயிரிழந்தனர்.
    2010ல் பாக்கித்தானில் கைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 105 பேர் கொல்லப்பட்டனர்.
    2011ல் எகிப்து, அலெக்சாந்திரியாவில் கோப்து கிறித்தவர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டனர்.
    2011ல் எசுத்தோனியா யூரோ நாணயத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
    2013ல் கோட் டிவார், அபிஜான் நகரில் விளையாட்டரங்கொன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர், 200 பேர் காயமடைந்தனர்.
    2015ல் உருசியா, பெலருஸ், ஆர்மீனியா, கசக்கஸ்தான், கிர்கிசுத்தான் ஆகிய நாடுகள் இணைந்து யூரேசியப் பொருளாதார ஒன்றியம் என்ற அமைப்பை நிறுவின..
    2017ல் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரவு இடுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 01-01 | January 01

    1484ல் சுவிட்சர்லாந்து இறையியலாளரான ல்ரிச் ஸ்விங்ளி பிறந்த நாள். (இறப்பு-1531)
    1548ல் இத்தாலியக் கணிதவியலாளரும் கவிஞருமான‌ கியோர்டானோ புரூணோ பிறந்த நாள். (இறப்பு-1600)
    1697ல் இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுநரான‌ யோசப் பிரான்சுவா தூப்ளே பிறந்த நாள். (இறப்பு- 1763)
    1852ல் பிரான்சிய வேதியியலாளரான‌ உசான்-அனத்தோல் தெமார்சே பிறந்த நாள். (இறப்பு-1904)
    1863ல் பிரான்சிய வரலாற்றாளரும் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவை அமைத்தவருமான‌ பியர் தெ குபர்த்தென் பிறந்த நாள். (இறப்பு. 1937)
    1867ல் பிரித்தானிய வானியலாளரான‌ மேரி அக்வர்த் எவர்ழ்செடு பிறந்த நாள். (இறப்பு-1949)
    1879ல் ஆங்கிலேய எக்ழுத்தாளரான‌ இ. எம். பிராஸ்டர் பிறந்த நாள். (இறப்பு-1970)
    1890ல் இலங்கை கல்வியாளரும் அரசியல்வாதியுமான‌ ரி. பி. ஜாயா பிறந்த நாள். (இறப்பு-1960)
    1891ல் இராசத்தானின் 3வது ஆளுநரான‌ சம்பூர்ணாநந்தர் பிறந்த நாள். (இறப்பு-1969)
    1892ல் இந்திய செயற்பாட்டாளரான‌ மகாதேவ தேசாய் பிறந்த நாள். (இறப்பு-1942)
    1894ல் இந்திய இயற்பியலாளரும் கணிதவியலாளரான‌ சத்தியேந்திர நாத் போசு பிறந்த நாள். (இறப்பு-1974)
    1914ல் பிரித்தானிய உளவாளியான‌ நூர் இனாயத் கான் பிறந்த நாள். (இறப்பு-1944)
    1919ல் அமெரிக்க எழுத்தாளரான‌ ஜே. டி. சாலிஞ்சர் பிறந்த நாள். (இறப்பு-2010)
    1925ல் தமிழ்த் திரைப்பட நாடக நடிகரான‌ வி. எஸ். ராகவன் பிறந்த நாள். (இறப்பு-2015)
    1925ல் இந்திய செயற்பாட்டாளரான‌ மௌலானா வஹிதூதீன் கான் பிறந்த நாள்.
    1932ல் இலங்கை முசுலிம் அரசியல்வாதியான‌ அலவி மௌலானா பிறந்த நாள். (இறப்பு-2016)
    1935ல் இந்தித் திரைப்பட நடிகையான‌ ஷகிலா பிறந்த நாள். (இறப்பு-2017)
    1935ல் இந்திய அரசியல்வாதியான‌ ஓம்பிரகாஷ் சௌதாலா பிறந்த நாள்.
    1940ல் இலங்கை எழுத்தாளரான‌ பண்ணாமத்துக் கவிராயர் பிறந்த நாள்.
    1942ல் ஐவரி கோஸ்டின் அரசுத்தலைவரான அலசான் வட்டாரா பிறந்த நாள்.
    1943ல் ஈழத்து எழுத்தாளரான‌ செம்பியன் செல்வன் பிறந்த நாள்.
    1944ல் சூடானின் 7வது அரசுத்தலைவரான‌ உமர் அல்-பஷீர் பிறந்த நாள்.
    1944ல் ஈழத்துக் கவிஞர் கல்வியாளரான‌ கல்வயல் வே. குமாரசாமி பிறந்த நாள். (இறப்பு-2016)
    1951ல் இந்திய நடிகரான நானா படேகர் பிறந்த நாள்.
    1951ல் அமெரிக்க வானியலாளரான‌ மார்த்தா பி. கேனசு பிறந்த நாள்.
    1952ல் கத்தார் ஆட்சியாளரான சேக் அமத் பின் கலீபா அல் தானி பிறந்த நாள்.
    1952ல் இந்திய இயக்குநர் ஒளிப்பதிவாளரான‌ ஷாஜி என். கருண் பிறந்த நாள்.
    1956ல் பிரான்சிய அரசியல்வாதியான‌ கிறிஸ்டைன் லகார்டே பிறந்த நாள்.
    1957ல் இலங்கை அரசியல்வாதியான‌ நஜீப் அப்துல் மஜீத் பிறந்த நாள்.
    1966ல் முதல் கரும்புலியான மில்லர் பிறந்த நாள். (இறப்பு-1987)
    1971ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் பாடகருமான‌ கலாபவன் மணி பிறந்த நாள். (இறப்பு-2016)
    1971ல் இந்திய அரசியல்வாதியான ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா பிறந்த நாள்.
    1975ல் இந்திய நடிகையான‌ சோனாலி பேந்திரே பிறந்த நாள்.
    1977ல் தமிழகத் திரைப்பட இயக்குநரான‌ தாமிரா பிறந்த நாள். (இறப்பு-2021)
    1979ல் இந்திய நடிகையான‌ வித்யா பாலன் பிறந்த நாள்.
    1979ல் மலேசியத் தமிழ்த் திரைப்பட நடிகையான‌ சுஜாதா கிருஷ்ணன் பிறந்த நாள். (இறப்பு-2007)

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 01-01 | January 01

    1894ல் செருமானிய இயற்பியலாளரான‌ ஐன்ரிக் ஏர்ட்சு இறப்பு நாள். (பிறப்பு-857)
    1901ல் ஈழத்து வரலாற்றாளரும் பதிப்பாளருமான‌ சி. வை. தாமோதரம்பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1832)
    1910ல் தமிழறிஞரும் ஈழத்துப் புலவருமான வே. அகிலேசபிள்ளை இறப்பு நாள். (பிறப்பு‍‍‍‍‍-1853)
    1944ல் ஆங்கிலேய கட்டிடக் கலைஞரும் தியெப்வால் நினைவுச்சின்னத்தை வடிவமைத்தவருமான எட்வின் லூட்டியன்சு இறப்பு நாள். (பிறப்பு 1869)
    1945ல் ஆங்கிலிக்கத் திருச்சபையின் முதல் இந்திய ஆயரான வேதநாயகம் சாமுவேல் அசரியா இறப்பு நாள். (பிறப்பு-1874)
    1955ல் இந்திய வேதியியலாளரான சாந்தி சுவரூப் பட்நாகர் இறப்பு நாள். (பிறப்பு-1894)
    1992ல் கோபோல் நிரலாக்க மொழியை உருவாக்கிய அமெரிக்கரான கிரேசு ஹாப்பர் இறப்பு நாள் (பிறப்பு-1906)
    2008ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான தியாகராஜா மகேஸ்வரன் இறப்பு நாள். (பிறப்பு-1960)
    2010ல் இலங்கை மலையக அரசியல்வாதியும் தொழிற்சங்கத் தலைவருமான‌ பெரியசாமி சந்திரசேகரன் இறப்பு நாள். (பிறப்பு-1957)
    2016ல் அங்கேரிய-அமெரிக்க ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான வில்மோஸ் சிக்மண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1930)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleஇன்றைய ராசி பலன் 19.08.2022 Today Rasi Palan 19-08-2022 Today Tamil Calendar Indraya Rasi Palan!
    Next articleJanuary 02 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 02