January 02 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 02

0

Today Special Historical Events In Tamil | 02-01 | January 02

January 02 Today Special | January 02 What Happened Today In History. January 02 Today Whose Birthday (born) | January-02nd Important Famous Deaths In History On This Day 02/01 | Today Events In History January-02nd | Today Important Incident In History | தை 02 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 02-01 | தை மாதம் 02ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 02.01 Varalatril Indru Nadanthathu Enna| January 02 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 02/01 | Famous People Born Today January 02 | Famous People died Today 02-01.

January 02
 • Today Special in Tamil 02-01
 • Today Events in Tamil 02-01
 • Famous People Born Today 02-01
 • Famous People died Today 02-01
 • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 02-01 | January 02

  மூதாதையர் நாளாக கொண்டாடப்படுகிறது. (எயிட்டி)
  படைத்துறையினரின் வெற்றி நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (கியூபா)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 02-01 | January 02

  366ல் அலமானி எனப்படும் செருமனிய ஆதிகுடிகள் முற்றாக உறைந்திருந்த ரைன் ஆற்றைக் கடந்து உரோமை முற்றுகையிட்டனர்.
  533ல் மெர்க்கூரியசு மூன்றாம் ஜான் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் புதிய பெயர் ஒன்றைப் பெற்றது இதுவே முதல் தடவையாகும்.
  1492ல் எசுப்பானியாவில் முசுலிம்களின் ஆளுகைக்குட்பட்ட கடைசி நகரமான கிரனாதா சரணடைந்தது.
  1757ல் கல்கத்தாவை பிரித்தானியர் கைப்பற்றினர்.
  1777ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்கப் படைகள் சியார்ச் வாசிங்டன் தலைமையில் இட்ரென்டன் அருகே நடந்த சமரில் பிரித்தானியப் படைகளை பின்வாங்கச் செய்தன.
  1782ல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி அட்மிரல் எட்வர்ட் ஹியூஸ் தலைமையில் இந்தியாவில் இருந்து திருகோணமலை நோக்கிப் புறப்பட்டது.
  1788ல் ஜோர்ஜியா ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு அதன் 4வது மாநிலமாக இணைந்தது.
  1791ல் வடமேற்கு இந்தியப் போர்: ஒகைய்யோ மாநிலத்தில் குழந்தைகள் உட்பட குடியேற்றவாசிகள் 14 பேரை அமெரிக்க இந்தியப் பழங்குடிகள் படுகொலை செய்தனர்.
  1793ல் உருசியாவும் புரூசியாவும் போலந்தை பங்கிட்டன.
  1818ல் பிரித்தானியக் குடிசார் பொறியாளர்கள் நிறுவனம் நிறுவப்பட்டது.
  1893ல் வட அமெரிக்காவில் தொடருந்துப் பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  1905ல் உருசிய-சப்பானியப் போர்: உருசியக் கடற்படையினர் சீனாவின் போர்ட் ஆதரில் சப்பானியரிடம் சரணடைந்தனர்.
  1920ல் ஐக்கிய அமெரிக்காவின் பல நகரங்களில் 6,000 இற்கும் அதிகமான கம்யூனிஸ்டுகள் என சந்தேகிக்கப்படுவோர் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறை வைக்கப்பட்டனர்.
  1921ல் எசுப்பானியாவின் சாண்டா இசபெல் கப்பல் மூழ்கியதில் 244 பேர் கொல்லப்பட்டனர்.
  1941ல் இரண்டாம் உலகப் போர்: வேல்ஸில் கார்டிஃப் என்ற இடத்தில் லாண்டாஃப் தேவாலய ஜெர்மனியரின் குண்டுவீச்சில் பலத்த சேதம் அடைந்தது.
  1942ல் இரண்டாம் உலகப் போர்: மணிலா சப்பானியப் படைகளால் கைப்பற்றப்பட்டது.
  1945ல் இரண்டாம் உலகப் போர்: செருமனியில் நியூரம்பெர்க் நகரத்தின் மீது கூட்டுப் படைகள் குண்டுகளை வீசின.
  1954ல் பத்மசிறீ, பத்மபூசண், பத்மவிபூசன் விருதுகளை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது.
  1955ல் பனாமாவின் அரசுத்தலைவர் ஒசே அன்ரோனியோ ரெமோன் படுகொலை செய்யப்பட்டார்.
  1959ல் சந்திரனை நோக்கிய முதலாவது விண்கலம் லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது.
  1963ல் வியட்நாம் போர்: வியட் கொங் படைகள் தமது முதலாவது முக்கிய வெற்றியைப் பெற்றது.
  1971ல் கிளாஸ்கோவில் காற்பந்தாட்ட அரங்கு ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் சிறுவர்கள் உட்பட 66 பேர் உயிரிழந்தனர்.
  1974ல் ஓப்பெக் தடையை அடுத்து, பெட்ரோல் சேமிப்புக்காக, வாகனங்களுக்கான 55 மை/மணி என்ற உச்ச வேகத்தை அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் அறிவித்தார்.
  1975ல் பீகார், சமஸ்திபூர் நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் ரெயில்வே அமைச்சர் லலித் நாராயண் மிசுரா படுகாயமடைந்தார்.
  1976ல் தெற்கு வடகடல் கரைகளில் பலத்த காற்று வீசியதில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 82 பேர் உயிரிழந்தனர்.
  1978ல் பாக்கித்தான், முல்தான் நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சுட்டதில் 200 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
  1982ல் சோமாலிய அரசுக்கு எதிரான தமது முதலாவது இராணுவ நடவடிக்கையை சோமாலிய தேசிய இயக்கம் தொடங்கியது. சோமாலியாவின் வடபகுதியில் அரசியல் கைதிகளை விடுவித்தனர்.
  1992ல் சியார்சியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அரசுத்தலைவர் சிவியாத் கம்சக்கூர்தியா பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக இராணுவம் அறிவித்தது.
  1993ல் யாழ்ப்பாணக் கடல் நீரேரிப் படுகொலை: கிளாலி நீரேரியில் 35-100 பயணிகள் இலங்கைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
  1999ல் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் இடம்பெற்ற பலத்த பனிப்புயலில் சிக்கி 68 பேர் உயிரிழந்தனர்.
  2004ல் ஸ்டார்டஸ்ட் விண்கலம் வைல்டு 2 என்ற வால்வெள்ளியை வெற்றிகரமாகத் தாண்டியது.
  2006ல் திருகோணமலை மாணவர்கள் படுகொலை: இலங்கையின் கிழக்கே திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் 5 தமிழ் மாணவர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
  2006ல் மன்னாரில் இலுப்பைக்கடவையில் இடம்பெற்ற இலங்கைப் படையினரின் வான் தாக்குதலில் 8 சிறுவர்கள் உட்பட 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயமடைந்தனர்.
  2008ல் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு அறிவித்தது.

  வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 02-01 | January 02

  1873ல் பிரான்சியக் கத்தோலிக்கப் புனிதரான‌ லிசியே நகரின் தெரேசா பிறந்த நாள். (இறப்பு-1897)
  1888ல் தமிழக அரசியல்வாதியான‌ எம். ஆர். சேதுரத்தினம் பிறந்த நாள்.
  1914ல் உருசிய-ஆங்கிலேய உளவாளியான நூர் இனாயத் கான் பிறந்த நாள். (இறப்பு-1944)
  1920ல் உருசிய-அமெரிக்க வேதியியலாளரும் எழுத்தாளருமான‌ ஐசாக் அசிமோவ் பிறந்த நாள். (இறப்பு-1992)
  1920ல் அமெரிக்க வானியலாளரான‌ ஜார்ஜ் எர்பிக் பிறந்த நாள். (இறப்பு-2013)
  1935ல் இலங்கை அரசியல்வாதியான‌ க. நவரத்தினம் பிறந்த நாள்.
  1940ல் இந்திய-அமெரிக்கக் கணிதவியலாளரான‌ எஸ். ஆர். ஸ்ரீனிவாச வரதன் பிறந்த நாள்.
  1940ல் இலங்கை கல்வியாளரும் தமிழறிஞருமான‌ அ. சண்முகதாஸ் பிறந்த நாள்.
  1943ல் துருக்கிய-அமெரிக்க வானியலாளரான‌ ஜேனட் அக்கியூழ்சு மத்தேய் பிறந்த நாள். (இறப்பு-2004)
  1943ல் துருக்கிய பாடகரும் தயாரிப்பாளருமான‌ பாரிசு மான்கோ பிறந்த நாள். (இறப்பு-1999)
  1960ல் இந்தியத் துடுப்பாட்ட வீரரான‌ ராமன் லம்பா பிறந்த நாள். (இறப்பு-1998)
  1961ல் விடுதலைப் புலிகளின் தளபதியான‌ கேணல் கிட்டு பிறந்த நாள். (இறப்பு-1993)
  1964ல் இலங்கைத் துடுப்பாளரான‌ ருமேஸ் ரத்னாயக்க பிறந்த நாள்.

  வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 02-01 | January 02

  1782 கண்டியின் கடைசி அரசனான கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் இறப்பு நாள்.
  1892 ஆங்கிலேய கணிதவியலாளரும் வானியலாளருமான‌ ஜார்ஜ் பிடெல் ஏரி இறப்பு நாள். (பிறப்பு-1801)
  1960 தமிழக வரலாற்று அறிஞரான‌ தி. வை. சதாசிவ பண்டாரத்தார் இறப்பு நாள். (பிறப்பு-பி.1892)
  1960 இந்திய விலங்கியல் மருத்துவரும் ஊர்வனவியலாளருமான‌ சி. ஆர். நாராயண் ராவ் இறப்பு நாள். (பிறப்பு-1882)
  1984 சோவியத்-உருசிய வானியலாளரும் புவியியலாளருமான‌ யெவ்கேனி கிரினோவ் இறப்பு நாள். (பிறப்பு-1906)
  1988 இந்தியக் கொள்ளை, கடத்தல் காரரான‌ வரதராஜன் முதலியார் இறப்பு நாள். (பிறப்பு-1926)
  1989 இந்திய நடிகரும் இயக்குநருமான‌ சப்தர் ஆசுமி இறப்பு நாள். (பிறப்பு-1954)
  2012 தமிழ்நாட்டின் பரத நாட்டிய ஆசிரியையும் முதலாவது பெண் நட்டுவனாருமான‌ கே. ஜே. சரசா இறப்பு நாள்.
  2013 ஆத்திரிய-அமெரிக்க வரலாற்றாளரும் எழுத்தாளருமான கெர்டா லெர்னர் இறப்பு நாள். (பிறப்பு-1920)
  2016 இந்திய அரசியல்வாதியான அ. பூ. பர்தன் இறப்பு நாள். (பிறப்பு‍‍‍‍‍‍‍-1924) ‍

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

  உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

  Previous articleJanuary 01 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 01
  Next articleJanuary 03 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil January 03