February 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 24

0

Today Special Historical Events In Tamil | 24-02 | February 24

February 24 Today Special | February 24 What Happened Today In History. February 24 Today Whose Birthday (born) | February-24th Important Famous Deaths In History On This Day 24/02 | Today Events In History February 24th | Today Important Incident In History | மாசி 24 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 24-02 | மாசி மாதம் 24ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 24.02 Varalatril Indru Nadanthathu Enna| February 24 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 24/02 | Famous People Born Today 24.02 | Famous People died Today 24-02.

Today Special in Tamil 24-02
Today Events in Tamil 24-02
Famous People Born Today 24-02
Famous People died Today 24-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 24-02 | February 24

விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (எசுத்தோனியா, உருசியாவிடம் இருந்து 1918)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 24-02 | February 24

1386ல் நேப்பில்சு மற்றும் அங்கேரி மன்னன் மூன்றாம் சார்லசு கொல்லப்பட்டான்.
1525ல் எசுப்பானிய-ஆசுத்திரிய இராணுவம் பாவியா நகர சமரில் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தது.
1582ல் கிரெகொரியின் நாட்காட்டி திருத்தந்தை 13வது கிரெகோரியினால் ஆணை ஓலை மூலம் அறிவிக்கப்பட்டது.
1739ல் கர்னால் சமரில், ஈரானிய ஆட்சியாளர் நாதிர் ஷா இந்திய முகலாயப் பேரசர் முகம்மது ஷாவின் படைகளைத் தோற்கடித்தார்.
1809ல் இலண்டன் ரோயல் நாடக அரங்கு தீக்கிரையானது.
1822ல் உலகின் முதலாவது சுவாமிநாராயண் கோயில் அகமதாபாத்தில் திறக்கப்பட்டது.
1826ல் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னர் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட யாந்தபு உடன்பாட்டினை அடுத்து முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.
1848ல் பிரான்சின் லூயி-பிலிப் மன்னர் முடிதுறந்தார்.
1854ல் முதற்தடவையாக சிவப்புப் பென்னி என அழைக்கப்படும் துளைகளிடப்பட்ட அஞ்சல் தலை பிரித்தானியாவில் வெளியிடப்பட்டது.
1863ல் அரிசோனா ஐக்கிய அமெரிக்காவின் பிராந்தியமாக அமைக்கப்பட்டது.
1875ல் ஆத்திரேலியக் கிழக்குக் கரையில் கோத்தன்பேர்க் என்ற கப்பல் பவளத்திட்டு ஒன்றில் மோதி முழ்கியதில் 102 பேர் உயிரிழந்தனர்.
1881ல் இலி ஆற்றுப் படுகையின் கிழக்குப் பகுதியை சீனாவுக்குக் கையளிக்கும் உடன்பாடு சீனாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் எட்டப்பட்டது.
1895ல் கியூபாவில் புரட்சி வெடித்ததை அடுத்து விடுதலைக்கான கியூபா போர் ஆரம்பமானது. இது 1898 இல் எசுப்பானிய அமெரிக்கப் போருடன் முடிவுக்கு வந்தது.
1916ல் கொரிய ஆளுநர் தொழு நோயாளிகளுக்கான மருத்துவமனையை ஆரம்பித்தார்.
1918ல் எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.
1920ல் நாட்சி கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1945ல் எகிப்தியப் பிரதமர் அகமது மாகிர் பாசா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.
1949ல் 1948 அரபு – இசுரேல் போர்: போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது.
1969ல் மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.
1971ல் மூன்று நாட்களுக்கு முன்னர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் தலைவர் ஏமந்தகுமார் போசு கொல்லப்பட்டதை அடுத்து பா. கா. மூக்கைய்யாத்தேவர் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1981ல் கிரேக்கத்தில் நிகழ்ந்த 6.7 ரிக்டர் நிலநடுக்கத்தினால் 16 பேர் உயிரிழந்தனர்.
1984ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சிறுவர்கள் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர்.
1989ல் ஒனலுலுவில் இருந்து நியூசிலாந்து நோக்கிச் சென்ற யுனைட்டட் ஏர்லைன்சு விமானத்தின் சரக்கு வழிக் கதவு திடீரெனத் திறந்ததில் ஒன்பது பயணிகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.
1991ல் வளைகுடாப் போர் ஆரம்பம்: தரைப் படைகள் சவூதி அரேபிய எல்லையைக் கடந்து ஈராக்கை அடைந்தன.
1999ல் கிழக்கு சீனாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 61 பேர் உயிரிழந்தனர்.
2004ல் வடக்கு மொரோக்கோவில் 6.3 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 628 பேர் உயிரிழந்தனர்.
2006ல் பிலிப்பீன்சு அரசுத்தலைவர் குளோரியா மகபகல்-அர்ரொயோ நாட்டில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
2007ல் மணிப்பூர் தமெல்லாங் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
2008ல் 32 ஆண்டுகளாக கியூபாவின் அரசுத்தலைவராக இருந்த பிடல் காஸ்ட்ரோ அப்பதவியில் இருந்து இளைப்பாறினார். இவர் கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவியில் இருந்தார்.
2009ல் வாட்சப் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
2016ல் கனடாவில் டாரா ஏர் விமானம் ஒன்று வீழ்ந்ததில், 23 பேர் உயிரிழ்ந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 24-02 | February 24

1500ல் புனித உரோமைப் பேரரசரான‌ ஐந்தாம் சார்லசு பிறந்த நாள். (இறப்பு-1558)
1670ல் மராட்டியப் பேரரசரான‌ சத்திரபதி இராஜாராம் பிறந்த நாள். (இறப்பு-1700)
1886ல் தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கிய இலங்கை-சிங்கப்பூர்த் தமிழரான‌ ஆர். முத்தையா பிறந்த நாள்.
1920ல் இந்திய யோகக்கலைப் பயிற்சியாளரான‌ நானம்மாள் பிறந்த நாள். (இறப்பு-2019)
1928ல் தமிழகத் திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளரும் நடிகருமான‌ ஏ. பி. நாகராசன் பிறந்த நாள். (இறப்பு-1977)
1942ல் இந்திய மெய்யியலாளரான‌ காயத்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக் பிறந்த நாள்.
1944ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான‌ டேவிட். ஜே. வைன்லேண்டு பிறந்த நாள்.
1946ல் அமெரிக்கக் கணிப்பொறி அறிவியலாளரும் உளவியலாளருமான‌ டெர்ரி வினோகிராட் பிறந்த நாள்.
1948ல் தென்னிந்திய நடிகையும் அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் 16வது முதலமைச்சருமான‌ செ. செயலலிதா பிறந்த நாள். (இறப்பு-2016)
1950ல் அமெரிக்க ஊடகவியலாளரான‌ ஸ்டீவ் மெக்குரி பிறந்த நாள்.
1955ல் ஆப்பிள் நிறுவனத்தை ஆரம்பித்த அமெரிக்கத் தொழிலதிபரான‌ ஸ்டீவ் ஜொப்ஸ் பிறந்த நாள். (இறப்பு-2011)
1956ல் அமெரிக்க மெய்யியலாளரான‌ ஜூடித் பட்லர் பிறந்த நாள்.
1967ல் நோபல் பரிசு பெற்ற ஆத்திரேலிய இயற்பியலாளரான‌ பிறையன் சிமித் பிறந்த நாள்.
1977ல் அமெரிக்க குத்துச்சண்டை வீரரான‌ பிளாய்ட் மேவெதர் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 24-02 | February 24

1810ல் பிரான்சிய-ஆங்கிலேய இயற்பியலாளரும் வேதியியலாளருமான‌ என்றி கேவண்டிசு இறப்பு நாள். (பிறப்பு-1731)
1815ல் அமெரிக்கப் பொறியாளரும் கண்டுபிடிப்பாளருமான‌ ராபர்ட் ஃபுல்டன் இறப்பு நாள். (பிறப்பு-1765)
1969ல் தமிழகப் பத்திரிகையாளரும் எழுத்தாளரும் சொற்பொழிவாளருமான‌ பா. தாவூத்ஷா இறப்பு நாள். (பிறப்பு-1885)
1983ல் தமிழக சமூக ஆர்வலரும் கொடை வள்ளலுமான‌ ச. வெள்ளைச்சாமி இறப்பு நாள். (பிறப்பு-1897)
1986ல் தமிழக நடனக் கலைஞரும் கலாசேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவருமான‌ ருக்மிணி தேவி அருண்டேல் இறப்பு நாள். (பிறப்பு-1904)
1990ல் அமெரிக்கப் பதிப்பாளரான‌ மால்கம் போர்ப்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1917)
1996ல் உருசியப் புரட்சியாளரும் எழுத்தாளருமான‌ அன்னா லாறினா இறப்பு நாள். (பிறப்பு-1914)
2001ல் அமெரிக்கக் கணிதவியலாளரும் பொறியாளருமான‌ கிளாடு சேனன் இறப்பு நாள். (பிறப்பு-1916)
2011ல் இந்திய எழுத்தாளரான‌ அனந்து பை இறப்பு நாள். (பிறப்பு-1929)
2015ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் பொதுவுடமையாளரும் இதழாளருமான‌ மாயாண்டி பாரதி இறப்பு நாள். (பிறப்பு-1917)
2018ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ ஸ்ரீதேவி இறப்பு நாள். (பிறப்பு-1963)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 23 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 23
Next articleFebruary 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 25