February 25 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 25

0

Today Special Historical Events In Tamil | 25-02 | February 25

February 25 Today Special | February 25 What Happened Today In History. February 25 Today Whose Birthday (born) | February-25th Important Famous Deaths In History On This Day 25/02 | Today Events In History February 25th | Today Important Incident In History | மாசி 25 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 25-02 | மாசி மாதம் 25ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 25.02 Varalatril Indru Nadanthathu Enna| February 25 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 25/02 | Famous People Born Today 25.02 | Famous People died Today 25-02.

Today Special in Tamil 25-02
Today Events in Tamil 25-02
Famous People Born Today 25-02
Famous People died Today 25-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 25-02 | February 25

மக்கள் சக்தி நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (பிலிப்பீன்சு)
சோவியத் ஆக்கிரமிப்பு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (ஜோர்ஜியா)
புரட்சி நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (சுரிநாம்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 25-02 | February 25

138ல் உரோமைப் பேரரசர் ஏட்ரியான் தனது வாரிசாக அந்தோனியசு பயசு என்பவனை அறிவித்தார்.
628ல் சாசானியப் பேரரசசின் கடைசி மன்னர் இரண்டாம் கொசுரோவை அவரது மகன் இரண்டாம் கவாத் பதவியில் இருந்து அகற்றினான்.
1797ல் வில்லியம் டேட் தலைமையிலான 1000-1500 போர்வீரர்களைக் கொண்ட படைகள் தமது பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பை அடுத்து சரணடைந்தனர்.
1831ல் உருசியப் பேரரசுக்கு எதிரான போலந்து மக்களின் நவம்பர் எழுச்சியின் ஒரு பகுதியாக ஓல்சின்கா கிரச்சோவ்சுக்கா சமர் இடம்பெற்றது.
1835ல் இந்திய இராணுவத்தில் உடலொறுப்புத் தண்டனை இல்லாதொழிக்கப்பட்டது
1836ல் சாமுவேல் கோல்ட் சுழல் துப்பாக்கிக்கான அமெரிக்கக் காப்புரிமத்தைப் பெற்றார்.
1843ல் பெரிய பிரித்தானியாவின் பேரில் சியார்ச் பவுலெட் பிரபு அவாய் இராச்சியத்தை ஆக்கிரமித்தார்.
1848ல் பிரான்சின் இடைக்கால அரசு தொழிலாளர்களுக்கான உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்தது.
1856ல் கிரிமியப் போரை அடுத்து பாரிசு நகரில் அமைதி மாநாடு நடைபெற்றது.
1875ல் பேரரசி டோவாகர் சிக்சியின் தலைமையில் சீனாவில் சிங் அரசமரபு ஆரம்பமானது.
1918ல் முதலாம் உலகப் போர்: செருமனியப் படைகள் தாலின் நகரைக் கைப்பற்றின.
1919ல் அமெரிக்காவின் முதல் மாநிலமாக ஓரிகன் பெட்ரோலுக்கு வரி (கலனுக்கு ஒரு சதம்) அறவிட்டது.
1921ல் ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலீசி உருசியாவின் கம்யூனிசப் படைகளினால் கைப்பற்றப்பட்டது.
1925ல் சோவியத் ஒன்றியத்திற்கும் சப்பானுக்கும் இடையில் தூதரக உறவு ஆரம்பிக்கப்பட்டது.
1932ல் இட்லர் செருமனியின் குடியுரிமையைப் பெற்றார். இதன் மூலம் 1932 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றார்.
1933ல் ரேஞ்சர் என்ற அமெரிக்கக் கடற்படையின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
1941ல் நாட்சிகளால் ஆரம்பிக்கப்பட்ட யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராக செருமனியினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஆம்ஸ்டர்டம் நகரில் பொதுப் பணி நிறுத்தம் இடம்பெற்றது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: துருக்கி செருமனி மீது போரை அறிவித்தது.
1947ல் புருசியா கலைக்கப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் புருசிய அரசு 1932 இல் கலைக்கப்பட்டு விட்டது.
1948ல் பனிப்போர்: செக்கோசிலவாக்கியாவின் ஆட்சியை அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது.
1954ல் ஜமால் அப்துல் நாசிர் எகிப்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1956ல் பனிப்போர்: சோவியத் தலைவர் நிக்கிட்டா குருசேவ் ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்கால நிர்வாகத்தை விமர்சனம் செய்தார்.
1964ல் வட கொரியாவின் பிரதமர் கிம் இல்-சுங் நிலமானிய நில உரிமையை நீக்குவதாக அறிவித்தார், இதன் மூலம் அனைத்துக் கூட்டுறவுப் பண்ணைகளும் அரசின் நிருவாகத்தின் கீழ் வந்தது.
1968ல் வியட்நாம் போர்: வியட்நாமில் 135 ஆ மை கிராம மக்கள் தென் கொரியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.
1980ல் சூரினாமில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசு கவிழ்க்கப்பட்டது.
1986ல் பிலிப்பீன்சு தலைவர் பேர்டினன்ட் மார்க்கோஸ் மக்கள் புரட்சியை அடுத்து தமது 20-ஆண்டு ஆட்சியைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியேறினார். கொரசோன் அக்கீனோ அரசுத்தலைவர் ஆனார்.
1988ல் மாதிரி அணுவாயுதத்தைச் சுமந்து சென்ற இந்தியாவின் முதல் ஏவுகணை பிரித்வி ஏவப்பட்டது.
1991ல் வளைகுடாப் போர்: ஈராக்கிய ஸ்கட் ஏவுகணை ஒன்று சவூதி அரேபியாவின் டாகுரான் நகரில்ல் அமெரிக்க இராணுவத்தளத்தில் வீழ்ந்து வெடித்ததில் 28 அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
1991ல் பனிப்போர்: வார்சா ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.
1992ல் அசர்பைஜானின் நகர்னோ-கரபாக் பகுதியில் ஆர்மேனிய இராணுவத்தினர் 613 குடிமக்களைப் படுகொலை செய்தனர்.
1994ல் மேற்குக் கரை நகரான எபிரோனில் பிதாப்பிதாக்களின் குகை மசூதியில் இசுரேலியர் ஒருவர் சுட்டதில் 29 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டு 125 பேர் காயமடைந்தனர். ஆத்திரமடைந்த பாலத்தீனர்கள் கொலையாளியை அடித்துக் கொன்றனர். இதனையடுத்து நிகழ்ந்த வன்முறைகளில் 26 பாலத்தீனர்களும் 9 இசுரேலியர்களும் கொல்லப்பட்டனர்.
2006ல் உலகின் மக்கள் தொகை 6.5 பில்லியனைத் தாண்டியது.
2007ல் ஈசாவின் ரோசெட்டா விண்ணுளவி முதன் முதலாகச் செவ்வாய்க் கோளை 150 மைல் உயரத்தில் மிக அருகே சுற்றிவந்து அதன் சுழல்வீச்சிற்கு அப்பால் எறியப்பட்டது.
2009ல் வங்காளதேசம், டாக்கா நகரில் இராணுவ வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டதில் 57 இராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் கொல்லப்பட்டனர்.
2009ல் துருக்கி ஏர்லைன்சு விமானம் ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் வீழ்ந்ததில் ஒன்பது பயணிகளும், மற்றும் ஊழியர்களும் உயிரிழந்தனர்.
2015ல் ஆப்கானித்தானின் வடகிழக்கில் இடம்பெற்ற பனிச்சரிவில் 310 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 25-02 | February 25

1304ல் மொரோக்கோ கல்வியாளரும் நாடுகாண் பயணியுமான‌ இப்னு பதூதா பிறந்த நாள்.
1670ல் செருமனிய வானியலாளரும் கணிதவியலாளருமான‌ மரியா மார்கரெதா கிர்ச்சு பிறந்த நாள். (இறப்பு-1720)
1778ல் பெருவின் 1வது அரசுத்தலைவரான‌ ஜோஸ் டெ சான் மார்ட்டின் பிறந்த நாள். (இறப்பு-1850)
1866ல் இத்தாலிய இலக்கியவாதியும் வரலாற்றாசிரியரும் அரசியல்வாதியுமான‌ பெனிடெட்டோ குரோசே பிறந்த நாள். (இறப்பு-1952)
1869ல் உருசிய-அமெரிக்க உயிரிவேதியியலாளரும் மருத்துவருமான‌ போபஸ் ஆரன் தியோடர் லெவினி பிறந்த நாள். (இறப்பு-1940)
1885ல் பாட்டன்பேர்க்கின் இளவரசியான‌ அலிஸ் பிறந்த நாள். (இறப்பு-1969)
1894ல் இந்திய ஆன்மிகவாதியான‌ மெகர் பாபா பிறந்த நாள். (இறப்பு-1969)
1897ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான‌ வேதரத்தினம் பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1961)
1901ல் ஈழத்து எழுத்தாளரும் வழக்கறிஞருமான‌ அ. நாகலிங்கம் பிறந்த நாள். (இறப்பு-1979)
1915ல் சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான‌ எஸ். ராஜரத்தினம் பிறந்த நாள். (இறப்பு-2006)
1925ல் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான‌ ஜானகி ஆதி நாகப்பன் பிறந்த நாள். (இறப்பு-2014)
1938ல் இந்தியத் துடுப்பாட்ட வீரரான‌ பாரூக் இஞ்சினியர் பிறந்த நாள்.
1971ல் அமெரிக்க நடிகரும் இயக்குநருமான‌ சீன் ஆஸ்டின் பிறந்த நாள்.
1973ல் தமிழ்த் திரைப்பட இயக்குநரான‌ கௌதம் மேனன் பிறந்த நாள்.
1974ல் இந்திய நடிகையான‌ திவ்யா பாரதி பிறந்த நாள். (இறப்பு-1993)
1979ல் தமிழ்த் திரைப்பட நடிகரும் பின்னணிப் பாடகருமான‌ பிரேம்ஜி அமரன் பிறந்த நாள்.
1982ல் இத்தாலிய தென்னிசு வீராங்கனையான‌ பிளாவியா பென்னட்டா பிறந்த நாள்.
1994ல் கனடிய தென்னிசு வீரரான‌ யூஜினீ பூஷார்டு பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 25-02 | February 25

1723ல் புனித பவுல் தேவாலயத்தை வடிவமைத்த ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞரான‌ கிறிஸ்டோபர் ரென் இறப்பு நாள். (பிறப்பு-1632)
1877ல் நேபாள ஆட்சியாளரான‌ ஜங் பகதூர் ராணா இறப்பு நாள். (பிறப்பு-1816)
1932ல் இத்தாலிய அர்கெந்தீன மருத்துவரும் கட்டற்ற சிந்தனையாளருமான‌ யூலியெத்தா லாந்தேரி இறப்பு நாள். (பிறப்பு-1873)
1936ல் பெல்சிய ஓவியரான‌ அன்னா பொச் இறப்பு நாள். (பிறப்பு-1848)
1942ல் உருசிய சோவியத் ஓவியரான‌ அலெக்சாண்டர் சவீனொவ் இறப்பு நாள். (பிறப்பு-1881)
1950ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவரான‌ ஜார்ஜ் மினாட் இறப்பு நாள். (பிறப்பு-1885)
1965ல் இந்தி எதிர்ப்புப் போராட்ட செயற்பாட்டாளரான‌ விராலிமலை சண்முகம் இறப்பு நாள். (பிறப்பு-1943)
2001ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான‌ டான் பிராட்மன் இறப்பு நாள். (பிறப்பு-1908)
2004ல் இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான‌ பி. நாகிரெட்டி இறப்பு நாள். (பிறப்பு-1912)
2014ல் எசுப்பானிய இசை அமைப்பாளரும் கித்தார் கலைஞருமான‌ பாக்கோ தே லூசீயா இறப்பு நாள். (பிறப்பு-1947)
2015ல் தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான‌ அ. வின்சென்ட் இறப்பு நாள். (பிறப்பு-1928)
2015ல் அமெரிக்க உயிரியலாளரான‌ யுஜினி கிளார்க் இறப்பு நாள். (பிறப்பு-1922)
2015ல் தமிழக கருநாடக இசைப் பாடகரான‌ சுகுணா புருசோத்தமன் இறப்பு நாள். (பிறப்பு-1941)
2016ல் அமெரிக்கத் தொழிலதிபரான‌ ஆல்பிரட் இ மான் இறப்பு நாள். (பிறப்பு-1925)
2017ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ தவக்களை இறப்பு நாள்.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 24 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 24
Next articleFebruary 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 26