December 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 28

0

Today Special Historical Events In Tamil | 28-12 | December 28

December 28 Today Special | December 28 What Happened Today In History. December 28 Today Whose Birthday (born) | December-28th Important Famous Deaths In History On This Day 28/12 | Today Events In History December 28th | Today Important Incident In History | மார்கழி 28 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 28-12 | மார்கழி மாதம் 28ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 28.12 Varalatril Indru Nadanthathu Enna| December 28 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 28/12 | Famous People Born Today 28.12 | Famous People died Today 28-12.

Today Special in Tamil 28-12
Today Events in Tamil 28-12
Famous People Born Today 28-12
Famous People died Today 28-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 28-12 | December 28

புனித மாசில்லாதோர் திருவிழாவாக‌ கொண்டாடப்படுகிறது. (கத்தோலிக்க திருச்சபை, இங்கிலாந்து திருச்சபை, லூதரனியம்)
குடியரசு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (தெற்கு சூடான்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 28-12 | December 28

கிமு 169ல் இரண்டு நூற்றாண்டுகள் வெளியார் ஆட்சியின் பின்னரும், ஏழாண்டுகள் கிளர்ச்சியை அடுத்தும், எருசலேம் கோவில் மீண்டும் அர்ப்பணிக்கப்பட்டதன் அறிகுறியாக மெனோரா விளக்கு எரிக்கப்பட்டது. மெனோரா எட்டு நாட்கள் எரிந்து, யூதர்களின் அனுக்கா என்ற எட்டு நாள் கொண்டாட்டம் ஆரம்பமாகியது.
418ல் முதலாம் போனிபாசு 42-வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
457ல் மஜோரியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
893ல் ஆர்மீனியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் துவின் என்ற பண்டைய நகரம் அழிந்தது.
1065ல் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மடம் திறந்துவைக்கப்பட்டது.
1308ல் சப்பானில் அனசோனோ பேரரசரின் ஆட்சி தொடங்கியது.
1659ல் மராட்டியர்கள் பிஜப்பூர் படைகளை கோலாப்பூர் சமரில் வென்றன.
1768ல் தாய்லாந்து மன்னராக தக்சின் முடிசூடினார். தோன்புரி தாய்லாந்தின் தலைநகரமானது.
1835ல் ஒசியோலா தனது செமினோலே படையினருடன் புளோரிடாவில் அமெரிக்க இராணுவத்திற்கெதிரான இரண்டாம் செமினோலே போரை ஆரம்பித்தார்.
1836ல் தெற்கு அவுஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன.
1836ல் மெக்சிகோவின் விடுதலையை எசுப்பானியா அங்கீகரித்தது.
1846ல் அயோவா அமெரிக்காவின் 29வது மாநிலமாக இணைந்தது.
1867ல் ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவுகளுக்கு உரிமை கோரியது.
1879ல் இசுக்காட்லாந்தில் டண்டீ என்ற இடத்தில் மேம்பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் அதில் சென்றுகொண்டிருந்த தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 75 பேர் உயிரிழந்தனர்.
1885ல் இந்தியாவின் வழக்கறிஞர்கள், அறிவியலாளர்கள், ஊடகவியலாளர்கள் 72 பேர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை மும்பை மாகாணத்தில் ஆரம்பித்தனர்.
1891ல் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் கோயிலில் 30,000 ரூபாய் பெறுமதியான நகைகள் களவாடப்பட்டன.
1895ல் பிரான்சின் லூமியேர் சகோதரர்கள் பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படத்தை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குக் கட்டணத்துடன் திரையிட்டனர்.
1895ல் எக்சு-கதிர்கள் பற்றிய கண்டுபிடிப்பை வில்லெம் ரோண்ட்கன் வெளியிட்டார்.
1908ல் இத்தாலி, சிசிலியில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 75,000 பேர் உயிரிழந்தனர்..
1929ல் சமோவாவில் நியூசிலாந்து குடியேற்றக் காவற்துறையினர் ஆயுதமின்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேரைச் சுட்டுக் கொன்றனர். இது சமோவாவின் விடுதலை இயக்கத்துக்கு தூண்டுதலாக அமைந்தது.
1930ல் மகாத்மா காந்தி பேச்சுவார்த்தைகளுக்காக பிரித்தானியா சென்றார்.
1943ல் சோவியத் அதிகாரிகள் கால்மீக்கிய இனத்தவரை சைபீரியாவுக்கும், மத்திய ஆசியாவுக்கும் நாடு கடத்தினர்.
1948ல் அமெரிக்காவின் டிசி-3 விமானம் ஒன்று 32 பேருடன் மயாமியில் இருந்து 50 மைல்கள் தெற்கே காணாமல் போனது.
1956ல் கம்யூனிஸ்டு தலைவர் சின் பெங், துங்கு அப்துல் ரகுமான் ஆகியோர் மலாயா அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு மலாயா, பாலிங் நகரில் கூடினர்.
1958ல் கியூபாவின் சாண்டா கிளாரா நகர் மீது சே குவேரா போர் தொடுத்தார்.
1989ல் அவுஸ்திரேலியா, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நியூகாசில் நகரில் இடம்பெற்ற 5.6 அளவை நிலநடுக்கம் காரணமாக 13 பேர் உயிரிழந்தனர்.
1994ல் விடுதலைப் புலிகளின் உப தலைவர்களில் ஒருவரான கோபாலசாமி மகேந்திரராஜா இந்திய அமைதிப்படையுடன் இணைந்து புலிகளுக்கெதிராக சதி செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவருக்கு புலிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1999ல் இலங்கை, புங்குடுதீவில் சாரதாம்பாள் சரவணபவானந்தக் குருக்கள் (29) என்ற பெண் இலங்கைக் கடற்படையினரால் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
2006ல் எதியோப்பிய மற்றும் சோமாலிய அரசுப் படைகள் சோமாலியா தலைநகர் மொகதிசுவைக் கைப்பற்றியதை அடுத்து இசுலாமியப் போராளிகள் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினர்.
2014ல் இத்தாலி, ஏட்ரியாட்டிக் கடலில் நார்மன் அத்திலாந்திக் என்ற கப்பல் தீப்பற்றியதில் 9 பேர் உயிரிழந்தனர், 19 பேர் காணாமல் போயினர்.
2014ல் சிங்கப்பூர் நோக்கிச் சென்ற இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 கரிமட்டா நீரிணையில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 162 பேரும் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 28-12 | December 28

1713ல் பிரான்சிய வானியலாளரான‌ பாதிரியார் இலாகைல்லே பிறந்த நாள். (இறப்பு-1762)
1798ல் இசுக்கொட்டிய வானியலாளரும் கணிதவியலாளருமான‌ தாமசு ஜேம்சு எண்டர்சன் பிறந்த நாள். (இறப்பு-1844)
1856ல் அமெரிக்காவின் 28வது அரசுத்தலைவரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரும் ஊட்ரோ வில்சன் பிறந்த நாள். (இறப்பு-1924)
1882ல் ஆங்கிலேய வானியலாளரும் ஆர்த்தர் எடிங்டன் பிறந்த நாள். (இறப்பு-1944)
1903ல் அங்கேரிய-அமெரிக்க கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ ஜான் வான் நியுமேன் பிறந்த நாள். (இறப்பு-1957)
1927ல் தமிழக மார்க்சிய சிந்தனையாளரான‌ எஸ். என். நாகராசன் பிறந்த நாள். (இறப்பு-2021)
1932ல் இந்தியத் தொழிலதிபரான‌ திருபாய் அம்பானி பிறந்த நாள். (இறப்பு-2002)
1934ல் ஆங்கிலேய நடிகையான‌ மேகி ஸ்மித் பிறந்த நாள்.
1936ல் திரைப்பட தயாரிப்பாளரும் விகடன் குழும உரிமையாளருமான‌ எஸ். பாலசுப்பிரமணியன் பிறந்த நாள். (இறப்பு-2014)
1937ல் இந்தியத் தொழிலதிபரான‌ ரத்தன் டாடா பிறந்த நாள்.
1940ல் இந்திய அரசியல்வாதியான‌ அ. கு. ஆன்டனி பிறந்த நாள்.
1944ல் அமெரிக்க வானியலாளரான‌ சாந்திரா மூர் பேபர் பிறந்த நாள்.
1945ல் நேப்பாள மன்னரான‌ பிரேந்திரா பிறந்த நாள். (இறப்பு-2001)
1946ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ ச. கனகரத்தினம் பிறந்த நாள்.
1947ல் தமிழக எழுத்தாளரான‌ நாஞ்சில் நாடன் பிறந்த நாள்.
1952ல் இந்திய அரசியல்வாதியான‌ அருண் ஜெட்லி பிறந்த நாள்.
1954ல் அமெரிக்க நடிகரான‌ டென்செல் வாஷிங்டன் பிறந்த நாள்.
1955ல் அமைதிக்கான நோபல் பரிசு நோபல் பரிசு பெற்ற சீன செயற்பாட்டாளரான‌ லியூ சியாபோ பிறந்த நாள்.
1964ல் தமிழக அரசியல்வாதியான‌ ஜி. கே. வாசன் பிறந்த நாள்.
1969ல் லினக்சு கருனியை வடிவமைத்த பின்லாந்து-அமெரிகக் கணினி அறிவியலாளரான‌ லினசு டோர்வால்டுசு பிறந்த நாள்.
1981ல் பிரித்தானிய நடிகையான‌ சியென்னா மில்லர் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 28-12 | December 28

1622ல் பிரான்சிய ஆயரும் புனிதருமான‌ பிரான்சிசு டி சேலசு இறப்பு நாள். (பிறப்பு-1567)
1663ல் இத்தாலியக் கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ பிரான்சிஸ்கோ மரியா கிரிமால்டி இறப்பு நாள். (பிறப்பு-1618)
1694ல் இங்கிலாந்தின் இரண்டாம் மேரி இறப்பு நாள். (பிறப்பு-1662)
1708ல் பிரான்சிய உயிரியலாளரான‌ யோசப் பிட்டன் டீ டொர்னபோர்டு இறப்பு நாள். (பிறப்பு-1656)
1894ல் மைசூர் அரசரான‌ பத்தாம் சாமராச உடையார் இறப்பு நாள். (பிறப்பு-1863)
1994ல் விடுதலைப் புலிகளின் முன்னாள் உப தலைவரான‌ கோபாலசாமி மகேந்திரராஜா இறப்பு நாள்.
1999ல் இலங்கைக் கடற்படையினரால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணான‌ சாரதாம்பாள் இறப்பு நாள். (பிறப்பு-1970)
2003ல் இந்திய அரசியல்வாதியான‌ குஷபாவு தாக்கரே இறப்பு நாள். (பிறப்பு-1922)
2007ல் இந்திய சிற்பியும் ஓவியரும் கவிஞருமான‌ அமர்நாத் சேகல் இறப்பு நாள். (பிறப்பு-1922)
2012ல் இலங்கை மேடை, வானொலி மற்றும் திரைப்பட நடிகருமான‌ எஸ். செல்வசேகரன் இறப்பு நாள்.
2013ல் அமெரிக்க-செருமானிய வானியலாளரான‌ ஆல்ட்டன் ஆர்ப் இறப்பு நாள். (பிறப்பு-1927)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 29
Next articleDecember 30 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 30