December 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 29

0

Today Special Historical Events In Tamil | 29-12 | December 29

December 29 Today Special | December 29 What Happened Today In History. December 29 Today Whose Birthday (born) | December-29th Important Famous Deaths In History On This Day 29/12 | Today Events In History December 29th | Today Important Incident In History | மார்கழி 29 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 29-12 | மார்கழி மாதம் 29ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 29.12 Varalatril Indru Nadanthathu Enna| December 29 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 29/12 | Famous People Born Today 29.12 | Famous People died Today 29-12.

Today Special in Tamil 29-12
Today Events in Tamil 29-12
Famous People Born Today 29-12
Famous People died Today 29-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 29-12 | December 29

விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது. (மங்கோலியா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 29-12 | December 29

875ல் இரண்டாம் சார்லசு புனித உரோமைப் பேரரசராக முடி சூடினார்.
1170ல் கேன்டர்பரி ஆயர் தாமஸ் பெக்கெட் இங்கிலாந்து மன்னர் இரண்டாம் என்றியின் ஆட்களால் கேன்டர்பரி ஆலயத்தினுள் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார். இவர் பின்னர் ஆங்கிலக்க, கத்தோலிக்கப் புனிதராக ஏற்கப்பட்டார்..
1427ல் மிங் சீன இராணுவம் அனோயில் இருந்து விலகியது.
1778ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: 3,500 பிரித்தானியப் போர்வீரர்கள் ஜோர்ஜியா மாநிலத்தின் சவான்னா நகரைக் கைப்பற்றினர்.
1835ல் மிசிசிப்பி ஆற்றின் கிழக்கேயுள்ள செரோக்கீ இன மக்களின் நிலங்கள் அனைத்தையும் ஐக்கிய அமெரிக்காவுக்குக் கொடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1845ல் டெக்சஸ் ஐக்கிய அமெரிக்காவின் 28வது மாநிலமாக இணைந்தது.
1851ல் அமெரிக்காவின் முதலாவது இளைய கிறித்தவர்களின் அமைப்பு (வை.எம்.சி.ஏ) பாஸ்டனில் அமைக்கப்பட்டது.
1874ல் எசுப்பானியாவில் இராணுவப் புரட்சி தோல்வியடைந்ததை அடுத்து அங்கு மன்னராட்சி மீண்டும் கொண்டுவரப்பட்டது. பன்னிரண்டாம் அல்போன்சோ புதிய மன்னராக முடிசூடினார்.
1876ல் ஐக்கிய அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தில் தொடருந்துப் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 92 பேர் உயிரிழந்தனர்.
1890ல் வூண்டட் நீ படுகொலை: தென் டகோட்டாவில் அமெரிக்கப் படைகள் பெண்கள் குழந்தைகள் உட்பட 300 ஆதிகுடிகளை படுகொலை செய்தனர்.
1911ல் மங்கோலியா சிங் சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது. போகடு கான் மங்கோலியாவின் பேரரசரானார்.
1930ல் அலகாபாத் நகரில் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய கவிஞரும், மெய்யியலாளருமான முகமது இக்பால் முஸ்லிம்களுக்கென தனிநாடு கோரிக்கையைக் கொண்ட தனது இரு-நாடுகள் கொள்கையை முன்வைத்தார்.
1937ல் ஐரிய சுதந்திர நாடு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது.
1940ல் இரண்டாம் உலகப் போர்: லண்டன் நகரின் மேல் நாட்சி ஜெர்மனியின் வான்படைகள் தீக்குண்டுகளை வீசியதில் 200 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1972ல் புளோரிடாவில் மயாமி விமான நிலையத்தில் அமெரிக்க விமானம் ஒன்று வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.
1975ல் நியூயோர்க் நகர லாகோர்தியா விமான நிலையத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டு 74 பேர் காயமடைந்தனர்.
1987ல் 326 நாட்கள் விண்வெளியில் பயணித்த சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்.
1993ல் உலகின் மிகப்பெரிய செம்பினாலான புத்தர் சிலை ஆங்காங்கில் அமைக்கப்பட்டது.
1996ல் குவாத்தமாலாவில் அந்நாட்டு அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதில் 36-ஆண்டு கால உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்தது.
1997ல் ஆங்காங்கில் கோழிகளுக்கு தொற்றுநோய் பரவியதை அடுத்து அங்கிருந்த அனைத்து 1.25 மில்லியன் கோழிகளும் கொல்லப்பட்டன.
1998ல் கம்போடியாவில் 1970களில் ஒரு மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டமைக்கு கெமர் ரூச் தலைவர்கள் மன்னிப்புக் கேட்டனர்.
2001ல் பெருவின் தலைநகர் லீமாவில் பெரும் தீ பரவியதில் 274 பேர் உயிரிழந்தனர்.
2011ல் சமோவா, டோக்கெலாவ் ஆகிய நாடுகள் புதிய நாள்காட்டியை அறிமுகப்படுத்தின. இதன்படி, டிசம்பர் 29 இற்கு அடுத்தநாள் டிசம்பர் 31 ஆக அறிவித்தன.
2013ல் உருசியா, வோல்கோகிராட் தொடருந்து நிலையம் ஒன்றில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் 18 பேர் கொல்லபட்டனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 29-12 | December 29

1709ல் உருசிய அரசியான‌ எலிசவேத்தா பெட்ரோவ்னா பிறந்த நாள். (இறப்பு-1762)
1766ல் இசுக்கொட்டிய வேதியியலாளரான‌ சார்லசு மேகிண்டோச் பிறந்த நாள். (இறப்பு-1843)
1809ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான‌ வில்லியம் கிளாட்ஸ்டோன் பிறந்த நாள். (இறப்பு-1898)
1844ல் இந்திய தேசிய காங்கிரசின் 1-வது தலைவரான‌ உமேஷ் சந்திர பானர்ஜி பிறந்த நாள். (இறப்பு-1906)
1893ல் இலங்கை அரசியல்வாதியான‌ ராசிக் பரீத் பிறந்த நாள். (இறப்பு-1984)
1904ல் இந்தியக் கவிஞரான‌ குவெம்பு பிறந்த நாள். (இறப்பு-1994)
1910ல் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய-அமெரிக்கப் பொருளியலாளரான‌ ரொனால்ட் கோஸ் பிறந்த நாள். (இறப்பு-2013)
1914ல் அமெரிக்க பியானோ மற்றும் சாக்சபோன் கலைஞரான‌ பில்லி டிப்டன் பிறந்த நாள். (இறப்பு-1989)
1930ல் இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளரான‌ இயக்குனருமான‌ ரொபின் தம்பு பிறந்த நாள். (இறப்பு-2000)
1937ல் மாலைதீவுகளின் முன்னாள் குடியரசுத் தலைவரான‌ மாமூன் அப்துல் கயூம் பிறந்த நாள்.
1942ல் இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான‌ ராஜேஷ் கன்னா பிறந்த நாள். (இறப்பு-2012)
1945ல் நேப்பாள மன்னரான‌ பிரேந்திரா பிறந்த நாள். (இறப்பு-2001)
1953ல் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் 9வது தலைவரும் செருமானியருமான‌ தாமசு பாக் பிறந்த நாள்.
1953ல் சாம்பியா-ஆங்கிலேய ஊடகவியலாளரான‌ ஆலன் ரஸ்பிரிட்சர் பிறந்த நாள்.
1960ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான‌ டேவிட் பூன் பிறந்த நாள்.
1974ல் இந்திய நடிகையான‌ டுவிங்கிள் கன்னா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 29-12 | December 29

1170ல் ஆங்கிலேயப் பேராயரும் புனிதருமான‌ தாமஸ் பெக்கெட் இறப்பு நாள். (பிறப்பு-1118)
1720ல் செருமனிய வானியலாளரான‌ மரியா மார்கரெதா கிர்ச்சு இறப்பு நாள். (பிறப்பு-1670)
1825ல் பிரான்சிய ஓவியரான‌ ஜாக்-லூயி டேவிட் இறப்பு நாள். (பிறப்பு-1748)
1834ல் ஆங்கிலேய பொருளாதார அறிஞரான‌ தோமஸ் மால்தஸ் இறப்பு நாள். (பிறப்பு-1766)
1890ல் அமெரிக்கப் பழங்குடித் தலைவரான‌ எகாக்கா கிளெசுக்கா இறப்பு நாள். (பிறப்பு-1826)
1912ல் பிரித்தானிய நிலவியலாளரும் தொல்பொருள் ஆய்வாளருமான‌ இராபர்ட் புருசு ஃபூட் இறப்பு நாள். (பிறப்பு-1834)
1926ல் ஆத்திரியக் கவிஞரான‌ ரெய்னர் மரியா ரில்கே இறப்பு நாள். (பிறப்பு-1875)
2009ல் தமிழகப் பாசனப் பொறியியல் வல்லுநரான‌ பழ. கோமதிநாயகம் இறப்பு நாள்.
2012ல் தென்னாப்பிரிக்க-ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரரும் ஊடகவியலாளருமான‌ டோனி கிரெய்க் இறப்பு நாள். (பிறப்பு-1946)
2015ல் தமிழறிஞரான‌ தமிழண்ணல் இறப்பு நாள். (பிறப்பு-1928)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 27
Next articleDecember 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 28