December 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 27

0

Today Special Historical Events In Tamil | 27-12 | December 27

December 27 Today Special | December 27 What Happened Today In History. December 27 Today Whose Birthday (born) | December-27th Important Famous Deaths In History On This Day 27/12 | Today Events In History December 27th | Today Important Incident In History | மார்கழி 27 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 27-12 | மார்கழி மாதம் 27ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 27.12 Varalatril Indru Nadanthathu Enna| December 27 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 27/12 | Famous People Born Today 27.12 | Famous People died Today 27-12.

Today Special in Tamil 27-12
Today Events in Tamil 27-12
Famous People Born Today 27-12
Famous People died Today 27-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 27-12 | December 27

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 27-12 | December 27

36ல் பிரிந்து சென்ற செங்சியா பேரரசை கைப்பற்றி இரண்டு நாட்களில் அதன் தலைநகர் செங்டூவைச் சூறியாடுமாறு ஆன் சீனத் தளபதி தனது படைகளுக்கு உத்தரவிட்டான்.
537ல் துருக்கியின் கிறித்தவப் பெருங்கோயில் ஹேகியா சோபியா கட்டி முடிக்கப்பட்டது.
1703ல் இங்கிலாந்துக்கு வைன்களை இறக்குமதி செய்வதற்கு போர்த்துக்கீசருக்கு தனியுரிமை வழங்கும் ஒப்பந்தம் இங்கிலாந்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையில ஏற்பட்டது.
1814ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அமெரிக்கப் பெரும்பாய்க்கப்பல் கரொலைனா அழிக்கப்பட்டது.
1831ல் சார்ல்ஸ் டார்வின் உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுக்காக தென்னமெரிக்கா நோக்கிப் புறப்பட்டார்.
1836ல் இங்கிலாந்தின் வரலாற்றில் மிக மோசமான புயல் சசெக்ஸ் நகரில் இடம்பெற்றது. 8 பேர் உயிரிழந்தனர்.
1845ல் பிள்ளைப் பேறுக்கு ஈதர் மயக்க மருந்தாக முதற் தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் ஜோர்ஜியாவில் பயன்படுத்தப்பட்டது.
1864ல் இலங்கையில் முதலாவது தொடருந்து சேவை கொழும்புக்கும், அம்பேபுசைக்கும் இடையில் ஆரம்பிக்கப்பட்டது.
1911ல் இந்தியாவின் தேசியப் பண் ஜன கண மன முதன்முதலில் கல்கத்தா நகரில் நடந்த இந்திய தேசிய காங்கிரசு மாநாட்டில் இசைக்கப்பட்டது.
1915ல் யாழ்ப்பாணத்தின் முதல் பொது நூலகம் “நகுலேசுவரா நூல்நிலையம்” கீரிமலையில் திறக்கப்பட்டது.
1918ல் செருமனியருக்கெதிரான பெரும் எழுச்சி போலந்தில் ஆரம்பமானது.
1922ல் உலகின் முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் சப்பானின் ஓஷோ சேவைக்கு விடப்பட்டது.
1939ல் துருக்கியில் ஏர்சின்கன் நகரில் 7.8 Mw நிலநடுக்கம் ஏற்பட்டதில் 32,700 பேர் உயிரிழந்தனர்.
1945ல் 29 நாடுகளின் ஒப்புதலுடன் அனைத்துலக நாணய நிதியம் உருவாக்கப்பட்டது.
1949ல் இந்தோனேசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது.
1956ல் தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
1966ல் உலகின் மிகப் பெரும் குகை மெக்சிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
1968ல் சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 வெற்றிகரமாக பசிபிக் கடலில் இறங்கியது.
1978ல் எசுப்பானியா 40 ஆண்டுகால பாசிச சர்வாதிகார ஆட்சியின் பின்னர் சனநாயக நாடானது.
1979ல் சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானைக் கைப்பற்றியது. அதிபர் ஹபிசுல்லா அமீன் சுட்டுக்கொல்லப்பட்டு பப்ராக் கர்மால் தலைவரானார்.
1985ல் உரோம், வியன்னா விமான நிலையங்களில் பாலத்தீனத் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
1989ல் உருமேனியப் புரட்சி முடிவுக்கு வந்தது.
1996ல் தலிபான் படைகள் ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் பக்ராம் வான்படைத் தளத்தைக் மீளக் கைப்பற்றினர்.
1997ல் வடக்கு அயர்லாந்தில் புரட்டஸ்தாந்து துணை இராணுவக்குழுத் தலைவர் பில்லி ரைட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2000ல் யாழ்ப்பாணம், தென்மராட்சி மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற எட்டு பொதுமக்கள் இலங்கைப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
2002ல் செச்சினியாவின் குரோசுனி நகரில் மாஸ்கோ சார்பு அரச தலைமையகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 72 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமடைந்தனர்.
2004ல் எஸ்ஜிஆர் 1806-20 என்ற காந்த விண்மீனில் நிகழ்ந்த வெடிப்பினால் அதன் கதிர்வீச்சு புவியை அடைந்தது.
2007ல் பாக்கித்தான் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ ராவல்பிண்டியில் தற்கொலைக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
2008ல் இசுரேல் காசா மீது மூன்று வாரத் தாக்குதலை ஆரம்பித்தது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 27-12 | December 27

1571ல் செருமானியக் கணிதவியலாளரும் வானியலாளருமான‌ யோகான்னசு கெப்லர் பிறந்த நாள். (இறப்பு-1630)
1773ல் ஆங்கிலேயப் பொறியியலாளரும் அரசியல்வாதியான‌ ஜார்ஜ் கேலி பிறந்த நாள். (இறப்பு-1857)
1797ல் இந்தியப் புலவரான‌ கலிப் பிறந்த நாள். (இறப்பு-1869)
1822ல் பிரான்சிய வேதியியலாளரும் நுண்ணுயிரியலாளருமான‌ லூயி பாஸ்ச்சர் பிறந்த நாள். (இறப்பு-1895)
1895ல் இந்திய அரசியல்வாதியான‌ சர்தார் உஜ்ஜல் சிங் பிறந்த நாள். (இறப்பு-1983)
1901ல் செருமானிய-அமெரிக்க நடிகையும் பாடகியுமான‌ மார்லீன் டீட்ரிக் பிறந்த நாள். (இறப்பு-1992)
1913ல் இந்தி எதிப்புப் போராட்டத்தில் தீக்குளித்து உயிர்விட்டவரான‌ விருகம்பாக்கம் அரங்கநாதன் பிறந்த நாள். (இறப்பு-1965)
1945ல் ஈழத்து வானொலி மற்றும் மேடை நாடகக் கலைஞரான‌ டேவிட் ராஜேந்திரன் பிறந்த நாள். (இறப்பு-2013)
1948ல் பிரான்சிய-உருசிய நடிகரான‌ செரார்டு தெபர்டியு பிறந்த நாள்.
1965ல் இந்திய நடிகரான‌ சல்மான் கான் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 27-12 | December 27

1834ல் ஆங்கிலேயக் கட்டுரையாளரான‌ சார்லஸ் லாம் இறப்பு நாள். (பிறப்பு-1775)
1914ல் அமெரிக்க வேதியியலாளரும் பொறியியலாளருமான‌ சார்லஸ் மார்ட்டின் ஹால் இறப்பு நாள். (பிறப்பு-1863)
1922ல் பிரித்தானிய பாளி அறிஞரான‌ தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1843)
1923ல் ஈபெல் கோபுரத்தை வடிவமைத்த பிரான்சியக் கட்டிடக் கலைஞரான‌ அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் இறப்பு நாள். (பிறப்பு-1832)
1976ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ வ. நல்லையா இறப்பு நாள். (பிறப்பு-1909)
1979ல் ஆப்கானித்தானின் 2வது அரசுத்தலைவரான‌ ஹஃபிசுல்லா அமீன் இறப்பு நாள். (பிறப்பு-1929)
2007ல் பாக்கித்தானின் 11வது பிரதமரான‌ பெனசீர் பூட்டோ இறப்பு நாள். (பிறப்பு-1953)
2016ல் இலங்கை அரசியல்வாதியான‌ இரத்தினசிறி விக்கிரமநாயக்க இறப்பு நாள். (பிறப்பு-1933)
2018ல் தமிழக மேடை மற்றும் திரைப்பட நடிகரான‌ சீனு மோகன் இறப்பு நாள். (பிறப்பு-1956)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 26 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 26
Next articleDecember 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 29