Today Special Historical Events In Tamil | 19-12 | December 19
December 19 Today Special | December 19 What Happened Today In History. December 19 Today Whose Birthday (born) | December-19th Important Famous Deaths In History On This Day 19/12 | Today Events In History December 19th | Today Important Incident In History | மார்கழி 19 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 19-12 | மார்கழி மாதம் 19ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 19.12 Varalatril Indru Nadanthathu Enna| December 19 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 19/12 | Famous People Born Today 19.12 | Famous People died Today 19-12.
Today Special in Tamil 19-12
Today Events in Tamil 19-12
Famous People Born Today 19-12
Famous People died Today 19-12
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 19-12 | December 19
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (கோவா)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 19-12 | December 19
324ல் லிசீனியசு உரோமைப் பேரரசர் பதவியைத் துறந்தார்.
1154ல் இங்கிலாந்தின் இரண்டாம் என்றி முடிசூடினார்.
1187ல் மூன்றாம் கிளெமெண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1606ல் ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வர்ஜீனியாவின் யேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.
1796ல் பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஒராசியோ நெல்சன் தலைமையில் இரண்டு பிரித்தானியப் படைப்பிரிவுகள் இன்றைய எசுப்பானியாவின் மூரிசியா நகரில் எசுப்பானியப் படைகளுடன் போரில் ஈடுபட்டன.
1852ல் இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியர் பர்மாவின் பெகு பிராந்தியத்தைக் கைப்பற்றினர்.
1871ல் யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் வழங்கப்பட்டன.
1877ல் யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வாந்திபேதி, மற்றும் சின்னம்மை நோய் பரவியதில் பலர் இறந்தனர்.
1879ல் நியூசிலாந்தில் ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
1907ல் அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1916ல் முதலாம் உலகப் போர்: பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் செருமனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.
1920ல் முதலாம் கான்சுடண்டைன் கிரேக்கத்தின் மன்னராக முடிசூடினார்.
1927ல் கக்கோரி தொடருந்துக் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ராம் பிரசாத் பிசுமில், அஷ்பகுல்லா கான், ரொசான் சிங் ஆகிய விடுதலைப் போராளிகள் பிரித்தானிய இந்திய அரசினால் தூக்கிலிடப்பட்டனர்.
1929ல் இந்திய தேசிய காங்கிரசு இந்தியாவின் விடுதலையை அறிவித்தது.
1932ல் பிபிசி உலக சேவை ஆரம்பமானது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: இட்லர் தன்னை செருமனியின் இராணுவத் தலைவராகத் தன்னை அறிவித்தார்.
1946ல் முதலாவது இந்தோசீனப் போர் ஆரம்பமானது.
1961ல் போர்த்துக்கேயக் குடியேற்ற நாடான தமன் தியூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
1967ல் இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன ஆத்திரேலியப் பிரதமர் அரல்ட் ஓல்ட் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1972ல் அப்பல்லோ திட்டம்: சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.
1983ல் உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.
1984ல் ஆங்காங்கின் ஆட்சியை 1997 சூலை 1 இல் சீனாவிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டங் சியாவுபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.
1986ல் சோவியத் எதிர்ப்பாளி ஆந்திரே சாகரவ் அவரது கோர்க்கி வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1997ல் சில்க் ஏர் விமானம் இந்தோனேசியாவில் பலெம்பாங் அருகே மூசி ஆற்றில் வீழ்ந்ததில் 104 பேர் உயிரிழந்தனர்.
1998ல் அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் மீது கீழவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2001ல் அதியுயர் வளிமண்டல அழுத்தம் (1085.6 hPa) மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்டது.
2013ல் கையா விண்கலத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஏவியது.
2016ல் துருக்கிக்கான உருசியத் தூதர் அதிரேய் கார்லொவ் அங்காராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 19-12 | December 19
1683ல் எசுப்பானியாவின் ஐந்தாம் பிலிப்பு பிறந்த நாள். (இறப்பு-1746)
1852ல் நோபல் பரிசு பெற்ற புரூசிய-அமெரிக்க இயற்பியலாளரும் ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் பிறந்த நாள். (இறப்பு-1931)
1901ல் செருமானியப் பொறியியலாளருமான ருடால்ப் ஹெல் பிறந்த நாள். (இறப்பு-2002)
1904ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியான பி. டி. ரணதிவே பிறந்த நாள். (இறப்பு-1990)
1906ல் சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவரான லியோனிட் பிரெஷ்னெவ் பிறந்த நாள். (இறப்பு-1982)
1915ல் பிரான்சியப் பாடகியும் நடிகையுமான எடித் பியாஃப் பிறந்த நாள். (இறப்பு-1963)
1922ல் தமிழக அரசியல்வாதியான கே. அன்பழகன் பிறந்த நாள்.
1933ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான அ. விநாயகமூர்த்தி பிறந்த நாள்.
1934ல் 12வது இந்தியக் குடியரசுத் தலைவரான பிரதிபா பாட்டில் பிறந்த நாள்.
1936ல் ஈழத்துக் கவிஞரான சண்முகம் சிவலிங்கம் பிறந்த நாள். (இறப்பு-2012)
1943ல் தமிழக வரலாற்றாசிரியரும் நூலாசிரியருமான அ. இராமசாமி பிறந்த நாள்.
1951ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான ஆல்வின் ரோத் பிறந்த நாள்.
1953ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் பிறந்த நாள். (இறப்பு-1868)
1974ல் ஆத்திரேலியத் துடுப்பாளரான ரிக்கி பாண்டிங் பிறந்த நாள்.
1980ல் அமெரிக்க நடிகரான ஜேக் கிலென்ஹால் பிறந்த நாள்.
1982ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான பாலா பிறந்த நாள்.
1987ல் பிரான்சியக் காற்பந்து வீரரான கரீம் பென்சிமா பிறந்த நாள்.
1988ல் சிலியக் காற்பந்து வீரரான அலெக்சிசு சான்சேசு பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 19-12 | December 19
401ல் திருத்தந்தையான முதலாம் அனஸ்தாசியுஸ் இறப்பு நாள்.
1111ல் ஈரானிய மெய்யியலாளரான் அல் கசாலி இறப்பு நாள். (பிறப்பு-1058)
1370ல் திருத்தந்தையான ஐந்தாம் அர்பன் இறப்பு நாள். (பிறப்பு-1310)
1741ல் தென்மார்க்கு-உருசிய கடற்படை அதிகாரியும் நாடுகாண் பயணியுமான விட்டஸ் பெரிங் இறப்பு நாள். (பிறப்பு-1681)
1848ல் ஆங்கிலேய எழுத்தாளரான எமிலி புராண்ட்டி இறப்பு நாள். (பிறப்பு-1818)
1860ல் பிரித்தானிய இந்திய நிர்வாகியான டல்ஹவுசி பிரபு இறப்பு நாள். (பிறப்பு-1812)
1898ல் சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநரான பிரான்சிஸ் நேப்பியர் இறப்பு நாள். (பிறப்பு-1819)
1915ல் செருமானிய உளவியல் நிபுணரான அலாய்ஸ் அல்சீமர் இறப்பு நாள். (பிறப்பு-1864)
1927ல் இந்திய செயற்பாட்டாளரான அஷ்பகுல்லா கான் இறப்பு நாள். (பிறப்பு-1900)
1927ல் இந்தியக் கவிஞரான ராம் பிரசாத் பிசுமில் இறப்பு நாள். (பிறப்பு-1897)
1953ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளரான இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் இறப்பு நாள். (பிறப்பு-1868)
1994ல் தமிழ் உணர்வாளரும் தமிழறிஞருமான கி. ஆ. பெ. விசுவநாதம் இறப்பு நாள். (பிறப்பு-1899)
2013ல் ஈழத்து வானொலி மற்றும் மேடை நாடகக் கலைஞருமான டேவிட் ராஜேந்திரன் இறப்பு நாள். (பிறப்பு-1945)
2014ல் தமிழக பத்திரிகையாளரும் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான எஸ். பாலசுப்பிரமணியன் இறப்பு நாள். (பிறப்பு-1936)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan