December 20 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 20

0

Today Special Historical Events In Tamil | 20-12 | December 20

December 20 Today Special | December 20 What Happened Today In History. December 20 Today Whose Birthday (born) | December-20th Important Famous Deaths In History On This Day 20/12 | Today Events In History December 20th | Today Important Incident In History | மார்கழி 20 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 20-12 | மார்கழி மாதம் 20ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 20.12 Varalatril Indru Nadanthathu Enna| December 20 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 20/12 | Famous People Born Today 20.12 | Famous People died Today 20-12.

Today Special in Tamil 20-12
Today Events in Tamil 20-12
Famous People Born Today 20-12
Famous People died Today 20-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 20-12 | December 20

அடிமை ஒழிப்பு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (ரீயூனியன், பிரெஞ்சு கயானா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 20-12 | December 20

69ல் நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெசுப்பாசியான் உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு உரோம் நகரை அடைந்தான்.
217ல் முதலாம் கலிஸ்டசு 16-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் உடனடியாகவே இப்போலிட்டசு எதிர்-திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார்.
1192ல் மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் இளவரசன் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான்.
1334ல் பன்னிரண்டாம் பெனடிக்ட்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1606ல் வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.
1803ல் பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
1808ல் இலண்டனில் கோவெண்ட் பூங்கா நாடக அரங்கு தீக்கிரையானது.
1832ல் போக்லாந்து தீவுகளைக் கைப்பற்றும் பொருட்டு கப்டன் ஓன்சுலோ தலைமையில் பிரித்தானியப் படைக்கப்பல் எமொண்ட் துறைமுகத்தை வந்தடைந்தது.
1844ல் இலங்கையில் அடிமை முறையை முற்றாக ஒழிக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
1860ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.
1915ல் முதலாம் உலகப் போர்: கடைசி ஆத்திரேலியப் படையினர் கலிப்பொலியில் இருந்து வெளியேறினர்.
1917ல் சோவியத் ஒன்றியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை “சேக்கா” அமைக்கப்பட்டது.
1924ல் இட்லர் லான்ட்சுபெர்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தன்னார்வப் படை “பறக்கும் புலிகள்” சீனாவில் குன்மிங் நகரில் முதலாவது சமரை நிகழ்த்தியது.
1942ல் இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா சப்பானியர்களின் வான் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
1943ல் பொலிவியாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1948ல் புதிதாக உருவாக்கப்பட்ட இந்தோனேசியக் குடியரசின் தற்காலிகத் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுப் படைகள் கைப்பற்றின.
1951ல் அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக அமெரிக்காவில் ஐடஹோ மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.
1952ல் ஐக்கிய அமெரிக்க வான்படை விமானம் வாசிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் உயிரிழந்தனர்.
1955ல் கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
1957ல் போயிங் 707 விமானம் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
1971ல் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தன்னார்வ அமைப்பு பாரிசு நகரில் தொடங்கப்பட்டது.
1973ல் எசுப்பானியப் பிரதமர் “லூயிஸ் கரேரோ பிளாங்கோ” மத்ரித் நகரில் வாகனக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
1984ல் இங்கிலாந்தில் பெனைன்சு மலைத்தொடர் சுரங்கத் தொடருந்துப் பாதையில் 1 மில்லியன் பெற்றோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1985ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் உலக இளையோர் நாளை ஆரம்பித்து வைத்தார்.
1987ல் பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் உயிரிழந்தனர்.
1988ல் போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கையெழுத்திடப்பட்டது.
1989ல் பனாமாவின் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.
1995ல் நேட்டோ பொசுனியாவில் அமைதி காக்கும் பணியைத் தொடங்கியது.
1995ல் அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 159 பேர் உயிரிழந்தனர்.
1999ல் மக்காவு போர்த்துகலிடம் இருந்து சீனாவிடம் கைமாறியது.
2000ல் மிருசுவில் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
2004ல் வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து £26.5 மில்லியன் பணம் கொள்ளையிடப்பட்டது.
2007ல் இரண்டாம் எலிசபெத் அதிக காலம் ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியாளராக இருந்த பெருமையைப் பெற்றார்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 20-12 | December 20

1876ல் அமெரிக்க வானியியலாளரான‌ வால்ட்டர் சிட்னி ஆடம்சு பிறந்த நாள். (இறப்பு-1956)
1886ல் தமிழகத் தமிழறிஞரான‌ அ. வேங்கடாசலம் பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1953)
1901ல் அமெரிக்க இயற்பியலாளரும் வான் டி கிராப் நிலை மின்னியற்றியைக் கண்டுபிடித்தவருமான‌ ராபர்ட் ஜெ. வான் டி கிராப் பிறந்த நாள். (இறப்பு-1967)
1920ல் இலங்கை எழுத்தாளரும் சமூக சேவையாளருமான‌ கனகசபை சிவகுருநாதன் பிறந்த நாள். (இறப்பு-2003)
1923ல் இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளரும் சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளருமான‌ அ. சிவானந்தன் பிறந்த நாள். (இறப்பு-2018)
1937ல் தமிழ்ப் பேச்சாளரும் இதழாசிரியருமான‌ வேலா அரசமாணிக்கம் பிறந்த நாள். (இறப்பு-1991)
1940ல் பரதநாட்டிய மற்றும் குச்சிப்புடி நடனக் கலைஞரான‌ யாமினி கிருஷ்ணமூர்த்தி பிறந்த நாள்.
1941ல் தமிழக எழுத்தாளரும் தமிழறிஞருமான‌ பா. ரா. சுப்பிரமணியன் பிறந்த நாள்.
1949ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ ராஜேஷ் பிறந்த நாள்.
1960ல் ஈழத்து மெல்லிசைப் பாடகரும் நாடகக் கலைஞருமான‌ எஸ். ஜி. சாந்தன் பிறந்த நாள். (இறப்பு-2017)
1976ல் தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகருமான‌ யுகேந்திரன் பிறந்த நாள்.
1987ல் இந்திய மற்றும் மலையாள நடிகையான‌ பார்வதி ஓமனகுட்டன் பிறந்த நாள்.
1994ல் பின்னணிப் பாடகியும் பின்னணிக் குரல் வழங்குனருமான‌ ஹரிணி ரவி பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 20-12 | December 20

217ல் திருத்தந்தையான‌ செஃபிரீனுஸ் இறப்பு நாள். (பிறப்பு-
1921ல் செருமானிய நுண்ணுயிரியலாளரான‌ ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி இறப்பு நாள். (பிறப்பு-1852)
1969ல் பெண்ணியவாதியும் சமூக சீர்திருத்தவாதியுமான‌ ஆர். எஸ். சுபலட்சுமி இறப்பு நாள். (பிறப்பு-1886)
1993ல் அமெரிக்க புள்ளிவிபரவியலாளரும் நூலாசிரியருமான‌ வில்லியம் எட்வர்ட்சு டெமிங் இறப்பு நாள். (பிறப்பு-1900)
1994ல் இலங்கை அறிவியலாளரான‌ சிறில் பொன்னம்பெரும இறப்பு நாள். (பிறப்பு-1923)
1996ல் அமெரிக்க வானியற்பியலாளரும் அண்டவியலாளருமான‌ கார்ல் சேகன் இறப்பு நாள். (பிறப்பு-1934)
2002ல் ஆத்திரேலிய-அமெரிக்க கதிர்வீச்சு வானியலாளரான‌ குரோட் இரெபெர் இறப்பு நாள். (பிறப்பு-1911)
2010ல் இலங்கைத் தமிழ்க் கல்வியாளரும் அரசியல்வாதியுமான‌ கா. பொ. இரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு-1914)
2019ல் தமிழக எழுத்தாளரான‌ டி. செல்வராஜ் இறப்பு நாள். (பிறப்பு-1938)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 19 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 19
Next articleDecember 21 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 21