December 17 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 17

0

Today Special Historical Events In Tamil | 17-12 | December 17

December 17 Today Special | December 17 What Happened Today In History. December 17 Today Whose Birthday (born) | December-17th Important Famous Deaths In History On This Day 17/12 | Today Events In History December 17th | Today Important Incident In History | மார்கழி 17 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 17-12 | மார்கழி மாதம் 17ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 17.12 Varalatril Indru Nadanthathu Enna| December 17 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 17/12 | Famous People Born Today 17.12 | Famous People died Today 17-12.

Today Special in Tamil 17-12
Today Events in Tamil 17-12
Famous People Born Today 17-12
Famous People died Today 17-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 17-12 | December 17

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு நாளாக கொண்டாடப்படுகிறது.
ஓய்வூதியர் நாளாக கொண்டாடப்படுகிறது.(இந்தியா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 17-12 | December 17

942ல் நோர்மண்டியின் முதலாம் வில்லியம் படுகொலை செய்யப்பட்டான்.
1398ல் தில்லியில் சுல்தான் நசீருதின் மெகுமூதின் படையினர் பேரரசர் தைமூரினால் தோற்கடிக்கப்பட்டனர்.
1538ல் பாப்பரசர் மூன்றாம் பவுல் இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னரை திருச்சபைத் தொடர்புகளில் இருந்து விலக்கினார்.
1577ல் பிரித்தானிய அரசி முதலாம் எலிசபெத்துக்காக அமெரிக்காக்களின் பசிபிக் பெருங்கடல் பகுதியை ஆராய்வதற்காக பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்து, பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டார்.
1586ல் கோ-யோசெய் சப்பானின் பேரரசராக முடிசூடினார்.
1718ல் பெரிய பிரித்தானியா எசுப்பானியா மீது போரை அறிவித்தது.
1777ல் அமெரிக்கப் புரட்சி: பிரான்சு ஐக்கிய அமெரிக்காவை அங்கீகரித்தது.
1819ல் சிமோன் பொலிவார் பெரிய கொலம்பியாவின் விடுதலையை அறிவித்தார்.
1835ல் நியூயார்க் நகரில் இடம்பெற்ற பெரும் தீயில் 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்தது.
1837ல் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் உள்ள குளிர்கால அரண்மனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 காவலாளர்கள் உயிரிழந்தனர்.
1862ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் டென்னசி, மிசிசிப்பி, கென்டக்கி ஆகிய மாநிலங்களில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1903ல் ரைட் சகோதரர்கள் வடக்கு கரொலைனாவில் முதன்முதலில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ரைட் பிளையர் ஊர்தியில் பறந்தனர்.
1907ல் யூஜியன் வாங்சுக் பூட்டானின் முதலாவது மன்னராக முடிசூடினார்.
1918ல் ஆத்திரேலியாவின் டார்வின் நகரில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.
1926ல் லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானசு சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.
1928ல் காவல்துறையினரின் பாதுகாப்பிலிருந்த லாலா லஜபதி ராய் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் முகமாக இந்தியப் புரட்சியாளர்கள் பகத் சிங், சுக்தேவ் தபார், சிவராம் ராஜகுரு ஆகியோர் பிரித்தானியக் காவல்துறை அதிகாரி ஜேம்சு சோண்டர்சு என்பவரை பஞ்சாப், லாகூரில் படுகொலை செய்தனர்.
1938ல் ஓட்டோ ஹான் யுரேனியத்தின் அணுக்கருப் பிளவைக் கண்டுபிடித்தார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படைகள் வடக்கு போர்னியோவில் இறங்கினர்.
1943ல் ஐக்கிய அமெரிக்காவில் சீனர்கள் குடியுரிமை பெறுவதகு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
1944ல் இரண்டாம் உலகப் போர்: பல்ஜ் சண்டை: மால்மெடி படுகொலை: அமெரிக்கப் போர்க்கைதிகள் 84 பேர் செருமனியப் படைகளினால் பெல்ஜியத்தில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1947ல் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1957ல் அமெரிக்கா முதலாவது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் அட்லசு ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது.
1960ல் எத்தியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசியின் படையினர் டிசம்பர் 13 இல் ஆரம்பமான ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை முறியடித்தனர்.
1960ல் செருமனியின் மியூனிக் நகரில் விமானம் ஒன்று தரையில் வீழ்ந்ததில் 20 பயணிகளும், தரையில் 32 பேரும் உயிரிழந்தனர்.
1961ல் பிரேசில், இரியோ டி செனீரோ நகரில் வட்டரங்கு களியாட்ட நிகழ்வில் தீப்பிடித்ததில் 500 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1967ல் ஆத்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் விக்டோரியா மாநிலத்தில் கடலில் நீந்தும்போது காணாமல் போனார். இவர் கடலில் மூழ்கி இறந்து விட்டதாகப் பின்னர் அறிவிக்கப்பட்டது.
1969ல் ஐக்கிய அமெரிக்க வான் படை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள் பற்றிய ஆய்வை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.
1970ல் போலந்தில் கிதீனியா நகரில் தொடருந்துகளில் இருந்து இறங்கிய தொழிலாளர்களை நோக்கிப் படையினர் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர்.
1973ல் ரோம் நகர விமான நிலையத்தை பாலத்தீனப் போராளிகள் தாக்கியதில் 30 பயணிகள் கொல்லப்பட்டனர்.
1983ல் லண்டனில் ஹரட்ஸ் பல்பொருள் அங்காடியில் ஐரியக் குடியரசுப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
1989ல் உருமேனியாவில் கம்யூனிச அரசுக்கு எதிரான ஆர்பபட்டங்கள் தொடர்ந்தன. கம்யூனிஸ்டுக் கட்சியின் மாவட்ட செயலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
1989ல் 25 ஆண்டுகளின் பின்னர் பிரேசிலில் முதலாவது பொதுத்தேர்தல் இடம்பெற்றது.
2005ல் பூட்டான் மன்னர் ஜிக்மே சிங்கே வாங்சுக் முடிதுறந்தார்.
2009ல் லெபனானில் டானி எஃப்11 என்ற கப்பல் கவிழ்ந்ததில் 44 பேர் உயிரிழந்தனர். அத்துடன் 28,000 மிருகங்களும் உயிரிழந்தன.
2010ல் முகம்மது பொசீசி என்பவர் தீக்குளித்து இறந்தார். இந்நிகழ்வு துனீசியப் புரட்சி, மற்றும் அரேபிய வசந்தம் ஆகியவற்றிற்கு வழிவகுத்தது.
2014ல் ஐக்கிய அமெரிக்காவும் கியூபாவும் 1960 ஆம் ஆண்டிற்குப் பின்னர் முதற்தடவையாக தூதரக உறவைப் புதுப்பித்துக் கொண்டன.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 17-12 | December 17

1556ல் பாக்கித்தானிய-இந்தியக் கவிஞரான‌ அப்துல் ரஹீம் கான்-இ-கானா பிறந்த நாள். (இறப்பு-1627)
1778ல் ஆங்கிலேய வேதியியலாளரும் இயற்பியலாளருமான‌ ஹம்பிரி டேவி பிறந்த நாள். (இறப்பு-1829)
1797ல் அமெரிக்க இயற்பியலாளரும் பொறியியலாளருமான‌ ஜோசப் ஹென்றி பிறந்த நாள். (இறப்பு-1878)
1905ல் 11வது இந்தியத் தலைமை நீதிபதியும் அரசியல்வாதியுமான‌ முகம்மது இதயத்துல்லா பிறந்த நாள். (இறப்பு-1992)
1908ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளரான‌ வில்லார்ட் ஃபிராங்க் லிப்பி பிறந்த நாள். (இறப்பு-1980)
1935ல் தமிழக மிருதங்கக் கலைஞரான‌ உமையாள்புரம் கே. சிவராமன் பிறந்த நாள்.
1936ல் திருத்தந்தையான‌ பிரான்சிசு பிறந்த நாள்.
1942ல் நைஜீரியாவின் 7வது அரசுத்தலைவரான‌ முகம்மது புகாரி பிறந்த நாள்.
1956ல் கிர்கித்தான் அரசியல்வாதியான‌ அல்மாஸ்பெக் அத்தம்பாயெவ் பிறந்த நாள்.
1958ல் தென்னிந்திய நடிகையும் அரசியல்வாதியுமான‌ ஜெயசுதா பிறந்த நாள்.
1959ல் இலங்கைத் தொழிற்சங்கத் தலைவரும் அரசியல்வாதியுமான‌ மனோ கணேசன் பிறந்த நாள்.
1959ல் இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் எழுத்தாளரான‌ ரஞ்சகுமார் பிறந்த நாள்.
1972ல் இந்திய நடிகரும் தயாரிப்பாளருமான‌ ஜான் ஆபிரகாம் பிறந்த நாள்.
1975ல் இலங்கை ஓட்ட வீராங்கனையான‌ சுசந்திகா ஜயசிங்க பிறந்த நாள்.
1975ல் உக்ரைனிய-அமெரிக்க நடிகையான‌ மில்லா ஜோவோவிச் பிறந்த நாள்.
1978ல் இந்தியத் திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான‌ ரித்தேஷ் தேஷ்முக் பிறந்த நாள்.
1992ல் தென்னாப்பிரிக்கத் துடுப்பாளரான‌ குவின்டன் டி கொக் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 17-12 | December 17

1273ல் பாரசீகக் கவிஞர் இறையியலாளரான‌ ரூமி இறப்பு நாள். (பிறப்பு-1207)
1830ல் வெனிசுவேலாவின் 2வது அரசுத்தலைவரான‌ சிமோன் பொலிவார் இறப்பு நாள். (பிறப்பு-1783)
1907ல் ஐரிய-இசுக்கொட்டிய இயற்பியலாளரான‌ வில்லியம் தாம்சன் இறப்பு நாள். (பிறப்பு-1824)
1946ல் உருசிய வானியலாளரான‌ கிரிகொரி நியூயிமின் இறப்பு நாள். (பிறப்பு-1885)
1947ல் தென்மார்க்கு வேதியியலாளரான‌ ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட் இறப்பு நாள். (பிறப்பு-1879)
1967ல் ஆத்திரேலியாவின் 17வது பிரதமரான‌ ஹரல்ட் ஹோல்ட் இறப்பு நாள். (பிறப்பு-1908)
1975ல் ஈழத்துப் புலவரான‌ சோ. இளமுருகனார் இறப்பு நாள். (பிறப்பு-1908)
2002ல் இலங்கை அரசியல்வாதியான‌ கே. டபிள்யூ. தேவநாயகம் இறப்பு நாள். (பிறப்பு-1910)
2011ல் வடகொரியாவின் 2வது அரசுத்தலைவரான‌ கிம் ஜொங்‍இல் இறப்பு நாள். (பிறப்பு-1941)
2016ல் செருமானிய-யூத எழுத்தாளரான‌ ஆன் றணசிங்க இறப்பு நாள். (பிறப்பு-1925)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 16 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 16
Next articleDecember 18 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 18