December 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 09

0

Today Special Historical Events In Tamil | 09-12 | December 09

December 09 Today Special | December 09 What Happened Today In History. December 09 Today Whose Birthday (born) | December-9th Important Famous Deaths In History On This Day 09/12 | Today Events In History December 9th | Today Important Incident In History | மார்கழி 09 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 09-12 | மார்கழி மாதம் 09ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 09.12 Varalatril Indru Nadanthathu Enna| December 09 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 09/12 | Famous People Born Today 09.12 | Famous People died Today 09-12.

Today Special in Tamil 09-12
Today Events in Tamil 09-12
Famous People Born Today 09-12
Famous People died Today 09-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 09-12 | December 09

விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது.(தன்சானியா, பிரித்தானியாவிடம் இருந்து 1961)
பன்னாட்டு ஊழலுக்கு எதிரான நாளாக‌ கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 09-12 | December 09

536ல் பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின.
1582ல் பிரான்சில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர் 20 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
1688ல் மாண்புமிகு புரட்சி: ரெடிங் சமரில் வில்லியமின் படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு நாட்டை விட்டு வெளியேறினான்.
1775ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் பெரும் பாலத்தில் நடந்த சமரில் தோல்வியடைந்தன. பிரித்தானியா விரைவில் வர்ஜீனியாவில் இருந்து வெளியேறியது.
1793ல் நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் “தி அமெரிக்கன் மினெர்வா” நோவா வெப்சுடரினால் வெளியிடப்பட்டது.
1828ல் இலங்கையில் கண்டி வீதி சுரங்கப் பாதை கட்டி முடிக்கப்பட்டது.
1835ல் டெக்சசு இராணுவம் சான் அந்தோனியோவைக் கைப்பற்றியது.
1856ல் ஈரானிய நகரம் புசேகர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
1905ல் பிரான்சில் அரசையும் கிறித்தவத் தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
1911ல் அமெரிக்காவில், டென்னிசி மாநிலத்தில், சுரங்க வெடிப்பில் 84 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1917ல் முதலாம் உலகப் போர்: எருசலேம் போர் (1917): பிரித்தானியர் பாலத்தீனத்தின் எருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
1922ல் போலந்தின் முதலாவது அரசுத்தலைவராக கேப்ரியல் நருத்தோவிட்சு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1931ல் இரண்டாவது எசுப்பானியக் குடியரசு அமைக்கப்பட்டது.
1937ல் இரண்டாம் சீன-சப்பானியப் போர்: யப்பானியப் படைகள் சீன நகரான நாஞ்சிங்கைத் தாக்கின.
1940ல் இரண்டாம் உலகப் போர்: காம்ப்பசு நடவடிக்கை: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பீன்சு ஆகியன செருமனி, யப்பான் மீது போரை அறிவித்தன.
1946ல் இந்திய அரசியலமைப்பை வரைய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் முதல் தடவையாகக் கூடியது.
1948ல் இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை ஐநா அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1950ல் பனிப்போர்: மன்காட்டன் திட்டம் குறித்த தகவலை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கிய குற்றத்திற்காக அரி கோல்டு என்பவருக்கு 30 ஆண்டுகால சிறைத்தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் வழங்கியது.
1953ல் ஜெனரல் எலக்ட்ரிக் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்டுகள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
1956ல் கனடாவின் விமானம் ஒன்று பிரிட்டிசு கொலம்பியாவில் வீழ்ந்ததில் 62 பேர் உயிரிழந்தனர்.
1961ல் பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.
1971ல் 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய பாதுகாப்பை மீறி இந்திய வான்படை இந்தியத் தரைப்படைத் தொகுதியினரைத் தரையிறக்கியது.
1973ல் வட அயர்லாந்து அதிகாரப் பகிர்வு தொடர்பான ஒப்பந்தம் பிரித்தானிய, அயர்லாந்து அதிகாரிகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டது.
1979ல் பெரியம்மை தீ நுண்மம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
1986ல் இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
1987ல் இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: முதலாவது பாலத்தீன எழுச்சி காசாக்கரை, மேற்குக் கரை பகுதிகளில் ஆரம்பமானது.
1992ல் அமெரிக்கப் படைகள் சோமாலியாவில் தரையிறங்கின.
1992ல் வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.
2003ல் மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், பல காயமடைந்தனர்.
2006ல் மாஸ்கோவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.
2016ல் மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள்: வடகிழக்கு நைஜீரியாவில் சந்தை ஒன்றில் பள்ளி மாணவிகள் இருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர், 177 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 09-12 | December 09

1579ல் பெருவின் புனிதரான‌ மார்டின் தெ போரஸ் பிறந்த நாள். (இறப்பு-1639)
1594ல் சுவீடனின் கஸ்டாவஸ் அடால்பஸ் பிறந்த நாள். (இறப்பு-1632)
1608ல் ஆங்கிலேயக் கவிஞரும் மெய்யியலாளருமான‌ ஜான் மில்டன் பிறந்த நாள். (இறப்பு-1674)
1742ல் சுவீடன்-செருமானிய வேதியியலாளரான‌ காரல் வில்லெம் சீலெ பிறந்த நாள்.
1868ல் நோபல் பரிசு பெற்ற போலந்து-செருமானிய வேதியியலாளரான‌ பிரிட்சு ஏபர் பிறந்த நாள். (இறப்பு-1934)
1870ல் இந்திய மருத்துவரும் மதப்பரப்புனருமான‌ ஐடா இசுகட்டர் பிறந்த நாள். (இறப்பு-1960)
1881ல் இலங்கை மருத்துவரும் எழுத்தாளருமான‌ ரிச்சர்ட் லயனல் ஸ்பிட்டெல் பிறந்த நாள். (இறப்பு-1969)
1906ல் அமெரிக்க கணினியியலாளரும் கோபால் நிரலாக்க மொழியை உருவாக்கியவருமான‌ கிரேசு ஹாப்பர் பிறந்த நாள். (இறப்பு-1992)
1913ல் இந்தியப் புகைப்படக் கலைஞரான‌ ஓமாயி வியாரவாலா பிறந்த நாள். (இறப்பு-2012)
1917ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் அரசியல்வாதியுமான‌ கே. பி. ஜானகி அம்மாள் பிறந்த நாள். (இறப்பு-1992)
1919ல் இந்திய திரைப்பட இசையமைப்பாளரான‌ வெ. தட்சிணாமூர்த்தி பிறந்த நாள். (இறப்பு-2013)
1919ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியான‌ எ. கி. நாயனார் பிறந்த நாள். (இறப்பு-2004)
1927ல் இந்தியக் கல்வியாளரும் கணினி அறிவியலாளருமான‌ பி. எஸ். மணிசுந்தரம் பிறந்த நாள். (இறப்பு-2013)
1929ல் ஆத்திரேலியாவின் 23-வது பிரதமரான‌ பாப் ஹாக் பிறந்த நாள். (இறப்பு-2019)
1930ல் தமிழக எழுத்தாளரான‌ சுப. சதாசிவம் பிறந்த நாள்.
1934ல் ஆங்கிலேய நடிகையான‌ சூடி டென்ச் பிறந்த நாள்.
1936ல் இலங்கை கத்தோலிக்க ஆயரான‌ கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பிறந்த நாள்.
1943ல் மலேசிய எழுத்தாளரான‌ நேசமணி ஜோன் பிறந்த நாள்.
1946ல் இத்தாலிய-இந்திய அரசியல்வாதியான‌ சோனியா காந்தி பிறந்த நாள்.
1954ல் லக்ச்ம்பர்க் பிரதமரான‌ ழான்-குளோடு சுன்கர் பிறந்த நாள்.
1978ல் அமெரிக்க நடிகரான‌ ஜெசி மெட்காஃப் பிறந்த நாள்.
1981ல் அமெரிக்க டென்னிசு வீரரான‌ மார்டி ஃபிஷ் பிறந்த நாள்.
1981ல் இந்திய நடிகையான‌ தியா மிர்சா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 09-12 | December 09

1048ல் பாரசீகக் கணிதவியலாளரான‌ அல்-பிருனி இறப்பு நாள். (பிறப்பு-973)
1669ல் திருத்தந்தையான‌ ஒன்பதாம் கிளமெண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1600)
1761ல் மராட்டிய அரசியான‌ தாராபாய் இறப்பு நாள். (பிறப்பு-1675)
1937ல் நோபல் பரிசு பெற்ற சுவீடிய இயற்பியலாளரான‌ நில்சு குஸ்டாப் டேலன் இறப்பு நாள். (பிறப்பு-1869)
1932ல் வங்காளதேச சமூகப் பணியாளரும் நூலாசிரியருமான‌ பேகம் ரோக்கியா இறப்பு நாள். (பிறப்பு-1880)
1937ல் நோபல் பரிசு பெற்ற சுவீடன் இயற்பியலாளரான‌ நில்சு குஸ்டாப் டேலன் இறப்பு நாள். (பிறப்பு-1869)
1979ல் அமெரிக்கப் பேராயரான‌ ஃபுல்டன் ஜான் ஷீன் இறப்பு நாள். (பிறப்பு-1895)
1989ல் தமிழகக் கருநாடக இசைப் பாடகரான‌ மதுரை சோமு இறப்பு நாள். (பிறப்பு-1919)
1991ல் அமெரிக்கப் புகைப்படக் கலைஞரான‌ பெரினிசு ஆபாட் இறப்பு நாள். (பிறப்பு-1898)
1997ல் கன்னட எழுத்தாளரான‌ சிவராம காரந்த் இறப்பு நாள். (பிறப்பு-1902)
2006ல் ஈழத்துக் கவிஞரான‌ சு. வில்வரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு-1950)
2018ல் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய-அமெரிக்க இயற்பியலாளரும் வானியலாளருமான‌ இரிக்கார்டோ ஜியாக்கோனி இறப்பு நாள். (பிறப்பு-1931)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 08 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 08
Next articleDecember 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 10