December 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 10

0

Today Special Historical Events In Tamil | 10-12 | December 10

December 10 Today Special | December 10 What Happened Today In History. December 10 Today Whose Birthday (born) | December-10th Important Famous Deaths In History On This Day 10/12 | Today Events In History December 10th | Today Important Incident In History | மார்கழி 10 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 10-12 | மார்கழி மாதம் 10ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 10.12 Varalatril Indru Nadanthathu Enna| December 10 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 10/12 | Famous People Born Today 10.12 | Famous People died Today 10-12.

Today Special in Tamil 10-12
Today Events in Tamil 10-12
Famous People Born Today 10-12
Famous People died Today 10-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 10-12 | December 10

மனித உரிமைகள் நாளாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 10-12 | December 10

220ல் சீனப் பேரரசர் சியான் முடி துறந்ததை அடுத்து ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது.
1041ல் பைசாந்தியப் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கேல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள்.
1317ல் சுவீடன் மன்னன் பிர்கர் தனது இரண்டு சகோதரர்கள் வால்திமார், எரிக் ஆகியோரைக் கைது செய்து நிக்கோப்பிங் கோட்டை நிலவறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினியால் இறக்க வைத்தான்.
1520ல் மார்ட்டின் லூதர் தனது திருத்தந்தையின் ஆணை ஓலையின் பிரதியைத் தீயிட்டுக் கொளுத்தினார்.
1541ல் இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியின் மனைவியும் அரசியுமான கேத்தரீன் உடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தோமசு கல்பெப்பர், கோடரியால் வெட்டப்பட்டும் ,பிரான்சிசு டெரெகம் தூக்கிலிடப்பட்டும் இறந்தனர்
1655ல் யாழ்ப்பாணத்தின் போர்த்துக்கேய ஆளுநர் அன்டோனியோ டி மெனேசா மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் டச்சுப் படைகளினால் சிறைப் பிடிக்கப்பட்டார்.
1684ல் ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் அரச கழகத்தில் எட்மண்டு ஏலியினால் படிக்கப்பட்டது.
1768ல் முதலாவது பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.
1799ல் பிரான்சு மீட்டரை அதிகாரபூர்வ நீள அலகாக அறிவித்தது.
1817ல் மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்காவின் 20வது மாநிலமாக இணைந்தது.
1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கென்டக்கியை அக்கூட்டமைப்பின் 13-வது மாநிலமாக ஏற்றுக் கொண்டது.
1868ல் உலகின் முதலாவது சைகை விளக்குகள் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு வெளியே நிறுவப்பட்டன.
1877ல் உருசிய-துருக்கி போர்: உருசிய இராணுவம் பிளெவ்னா நகரைக் கைப்பற்றியது. மீதமிருந்த 25,000 துருக்கியப் படைகள் சரணடைந்தன.
1898ல் பாரிசு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதை அடுத்து எசுப்பானிய அமெரிக்கப் போர் முடிவுக்கு வந்தது..
1901ல் முதலாவது நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்றது.
1902ல் எகிப்தில் அஸ்வான் அணை திறக்கப்பட்டது.
1902ல் தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
1906ல் அமெரிக்க அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் உருசிய-சப்பானியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தமைக்காக [[அமைதிக்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
1909ல் செல்மா லோவிசா லேகர்லாவ் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1932ல் தாய்லாந்து அரசியல்சட்ட முடியாட்சி அரசானது.
1936ல் இங்கிலாந்தின் எட்டாம் எட்வர்டு முடிதுறப்பதாக அறிவித்தார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: மலாயாவுக்குக் கிட்டவாக பிரித்தானியாவின் இரண்டு அரச கடற்படைக் கப்பல்கள் சப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டன.
1941ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் பிலிப்பீன்சில் லூசோன் நகரை அடைந்தனர்.
1948ல் மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.
1949ல் சீன உள்நாட்டுப் போர்: மக்கள் விடுதலை இராணுவம் செங்டூ மீதான தாக்குதலை ஆரம்பித்தது. சங் கை செக்கும் அவரது அரசும் சீனக் குடியரசுக்குப் பின்வாங்கினர்.
1953ல் பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.
1963ல் சான்சிபார் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று, சுல்தான் சாம்சிதுய் பின் அப்துல்லாவின் கீழ் அரசியல்சட்ட முடியாட்சி அரசைப் பெற்றது.
1978ல் அரபு-இசுரேல் முரண்பாடு: இசுரேல் பிரதமர் பெகின், எகிப்தியத் தலைவர் அன்வர் சாதாத் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.
1983ல் அர்கெந்தீனாவில் அரசுத்தலைவர் அராவூஃப் அல்போன்சின் தலைமையில் மக்களாட்சி அமைக்கப்பட்டது.
1984ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது.
1989ல் மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.
2006ல் ஈழப்போர்: வாகரை, மாங்கேணியில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2016ல் துருக்கி, இசுதான்புல் நகரில் உதைபந்தாட்ட அரங்கில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர், 166 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 10-12 | December 10

1815ல் ஆங்கிலேய கணிதவியலாளரான‌ அடா லவ்லேஸ் பிறந்த நாள். (இறப்பு-1852)
1830ல் அமெரிக்கக் கவிஞரான‌ எமிலி டிக்கின்சன் பிறந்த நாள். (இறப்பு-1886)
1851ல் அமெரிக்க நூலகவியலாளரும் தூவி வகைப்படுத்தலை உருவாக்கியவருமான‌ மெல்வில் தூவி பிறந்த நாள். (இறப்பு-1931)
1878ல் இந்திய அரசியல்வாதியும் இந்தியாவின் 45வது ஆளுநரும் எழுத்தாளருமான‌ சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி பிறந்த நாள். (இறப்பு-1972)
1891ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய-சுவீடிய எழுத்தாளரான‌ நெல்லி சாக்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1970)
1902ல் இந்திய அரசியல்வாதியான எஸ். நிஜலிங்கப்பா பிறந்த நாள். (இறப்பு-2000)
1943ல் தமிழகப் பின்னணிப் பாடகரும் நடிகருமான‌ மாணிக்க விநாயகம் பிறந்த நாள்.
1952ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ சுஜாதா பிறந்த நாள். (இறப்பு-2011)
1960ல் ஆங்கிலேய நடிகரும் இயக்குநருமான‌ கென்னத் பிரனா பிறந்த நாள்.
1960ல் இந்தியத் திரைப்பட நடிகையான‌ ரதி அக்னிகோத்ரி பிறந்த நாள்.
1964ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான‌ ஜெயராம் பிறந்த நாள்.
1969ல் ஆங்கிலேய நடிகரான‌ ஸ்டீபன் பில்லிங்டன் பிறந்த நாள்.
1983ல் ஆத்திரேலிய நடிகரான‌ சேவியர் சாமுவேல் பிறந்த நாள்.
1986ல் இந்தியக் குத்துச்சண்டை வீரரான‌ மனோஜ் குமார் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 10-12 | December 10

1198ல் எசுப்பானிய வானியலாளரும் இயற்பியலாளரும் மெய்யியலாளருமான‌ இப்னு றுஷ்து இறப்பு நாள். (பிறப்பு-1126)
1896ல் சுவீடிய வேதியியலாளரும் டைனமைட்டு கண்டுபிடித்தவரும் நோபல் பரிசை தோற்றுவித்தவருமான‌ ஆல்பிரட் நோபல் இறப்பு நாள். (பிறப்பு-1833)
1909ல் அமெரிக்க பழங்குடித் தலைவரான‌ சிகப்பு மேகம் இறப்பு நாள். (பிறப்பு-1822)
1960ல் இலங்கைத் தொழிலதிபரும் தயாரிப்பாளருமான‌ சிற்றம்பலம் கார்டினர் இறப்பு நாள். (பிறப்பு-1899)
1995ல் இந்திய அமெரிக்கக் கணிதவியலாளரான‌ எஸ். டீ. சௌலா இறப்பு நாள். (பிறப்பு-1907)
2001ல் இந்திய நடிகரும் பாடகரும் தயாரிப்பாளருமான‌ அசோக் குமார் இறப்பு நாள். (பிறப்பு-1911)
2006ல் சிலியின் 30வது அரசுத்தலைவரான‌ அகஸ்தோ பினோசெட் இறப்பு நாள். (பிறப்பு-1915)
2006ல் இந்திய இயற்பியலாளரான‌ மதன் லால் மேத்தா இறப்பு நாள். (பிறப்பு-1932)
2013ல் இந்திய அரசியல்வாதியான‌ ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் இறப்பு நாள். (பிறப்பு-1946)
2016ல் ஈழத்துக் கவிஞரும் கல்வியாளருமான‌ கல்வயல் வே. குமாரசுவாமி இறப்பு நாள். (பிறப்பு-1944)
2016ல் இந்தியப் பொறியியல் அறிஞரும் கவிஞருமான‌ வா. செ. குழந்தைசாமி இறப்பு நாள். (பிறப்பு-1929)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 09 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 09
Next articleDecember 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 11