December 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 06

0

Today Special Historical Events In Tamil | 06-12 | December 06

December 06 Today Special | December 06 What Happened Today In History. December 06 Today Whose Birthday (born) | December-6th Important Famous Deaths In History On This Day 06/12 | Today Events In History December 6th | Today Important Incident In History | மார்கழி 06 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 06-12 | மார்கழி மாதம் 06ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 06.12 Varalatril Indru Nadanthathu Enna| December 06 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 06/12 | Famous People Born Today 06.12 | Famous People died Today 06-12.

Today Special in Tamil 06-12
Today Events in Tamil 06-12
Famous People Born Today 06-12
Famous People died Today 06-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 06-12 | December 06

விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (பின்லாந்து, உருசியாவிடம் இருந்து 1917)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 06-12 | December 06

1060ல் முதலாம் பேலா அங்கேரியின் மன்னனாக முடிசூடினார்.
1240ல் உக்ரைனின் கீவ் நகரம் படு கான் தலைமையிலான மங்கோலியரிடம் வீழ்ந்தது.
1704ல் முகாலய-சீக்கியப் போரில், சீக்கிய கால்சாக்கள் முகாலய இராணுவத்தினரைத் தோற்கடித்தனர்.
1768ல் பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் முதற் பதிப்பு வெளியிடப்பட்டது.
1790ல் ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் நியூயோர்க் நகரில் இருந்து பிலடெல்பியாவுக்கு இடம்பெயர்ந்தது.
1857ல் இந்தியப் பிரித்தானிய அதிகாரிகளுக்கு எதிரான குவாலியர் கிளர்ச்சியை சர் கொலின் கேம்பல் தலைமையிலான பிரித்தானிய இராணுவம் முறியடித்தது.
1877ல் தி வாசிங்டன் போஸ்ட் செய்திப்பத்திரிகையின் முதலாவது இதழ் வெளிவந்தது.
1884ல் வாசிங்டன் நினவுச்சின்ன அமைப்பு வேலைகள் முடிவடைந்தது.
1897ல் வாடகை வாகனங்கள் உலகில் முதற்தடவையாக லண்டனில் சேவைக்கு விடப்பட்டன.
1907ல் மேற்கு வர்ஜீனியாவில் மொனொங்கா என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1916ல் முதலாம் உலகப் போர்: மைய சக்தி நாடுகள் புக்கரெஸ்ட் நகரைக் கைப்பற்றின.
1917ல் முதலாம் உலகப் போர்: அமெரிக்காவின் யாக்கோப் யோன்சு என்ற போர்க் கப்பல் செருமனி நீர்மூழ்கிக் குண்டு வைத்துத் தகர்த்தூ மூழ்கடித்தது.
1917ல் பின்லாந்து சோவியத் உருசியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1917ல் கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஆலிபாக்சு துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வெடித்ததில் 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.
1921ல் இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் இலண்டனில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
1922ல் ஐரிய சுதந்திர நாடு உருவானது.
1928ல் கொலம்பியாவில் ஒரு மாத கால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியமும் கனடாவும் பின்லாந்து மீது போரை அறிவித்தன..
1957ல் வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
1971ல் இந்தியா வங்காள தேசத்தை அங்கீகரித்ததைத் தொடர்ந்து பாக்கித்தான் இந்தியாவுடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது. 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் வெடித்தது.
1977ல் தென்னாபிரிக்கா “பொப்புதட்சுவானா”வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.
1989ல் மொண்ட்ரியாலில் ஏக்கோல் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 14 இளம் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1991ல் குரோவாசியாவில் துப்ரோவ்னிக் நகர் மீது யுகொசுலாவிய மக்கள் இராணுவம் குண்டுத் தாக்குதல்களை நடத்தியது.
1992ல் அயோத்தியாவில் இராமர் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.
1997ல் சைபீரியாவில் உருசிய சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர்.
2005ல் ஈரானின் இராணுவ சரக்கு விமானம் ஒன்று தெகுரானில் பத்து-மாடி குடிமனைக் கட்டடம் ஒன்றில் மோதியதில் விமானத்தில் இருந்த அனைத்து 84 பேரும் தரையில் 44 பேரும் உயிரிழந்தனர்.
2005ல் சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2006ல் செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.
2017ல் எருசலேம் நகரை இசுரேலின் தலைநகராக அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பின் நிருவாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 06-12 | December 06

1698ல் ஒல்லாந்த இலங்கையில் யாழ்ப்பாணத்தின் கட்டளை அதிகாரியான‌ அந்தனி மூயார்ட் பிறந்த நாள். (இறப்பு-1767)
173ல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1818)
1792ல் நெதர்லாந்து மன்னரான‌ இரண்டாம் வில்லியம் பிறந்த நாள். (இறப்பு-1849)
1823ல் செருமானிய-ஆங்கிலேய மொழியியலாளரான‌ மாக்ஸ் முல்லர் பிறந்த நாள். (இறப்பு-1900)
1863ல் அமெரிக்க வேதியியலாளரும் பொறியியலாளருமான‌ சார்லஸ் மார்ட்டின் ஹால் பிறந்த நாள். (இறப்பு-1914)
1892ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ ருக்மிணி லட்சுமிபதி பிறந்த நாள். (இறப்பு-1951)
1918ல் தமிழக எழுத்தாளரான‌ ஆர்வி பிறந்த நாள். (இறப்பு-2008)
1928ல் இந்தியப் பரத நாட்டியக் கலைஞரான‌ சந்திரலேகா பிறந்த நாள். (இறப்பு-2006)
1935ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ சாவித்திரி பிறந்த நாள். (இறப்பு-1981)
1937ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ டி. டி. குசலகுமாரி பிறந்த நாள்.
1988ல் இந்தியத் துடுப்பாட்ட வீரரான‌ ரவீந்திர ஜடேஜா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 06-12 | December 06

343ல் கிரேக்க ஆயரும் புனிதருமான‌ நிக்கலசு இறப்பு நாள். (பிறப்பு-270)
1788ல் பிரான்சிய வானியலாளரும் கணிதவியலாளருமான‌ நிக்கோல்-ரெயின் லெப்பாட் இறப்பு நாள். (பிறப்பு-1723)
1868ல் செருமானிய மொழியியலாளரான‌ ஆகஸ்ட் சிலெய்ச்சர் இறப்பு நாள். (பிறப்பு-1821)
1889ல் அமெரிக்க அரசியல்வாதியும் அமெரிக்கக் கூட்டமைப்பின் தலைவருமான‌ ஜெபர்சன் டேவிஸ் இறப்பு நாள். (பிறப்பு-1808)
1892ல் செருமானியப் பொறியியலாலரான‌ வெர்னர் வொன் சீமன்சு இறப்பு நாள். (பிறப்பு-1816)
1956ல் இந்தியப் பொருளியலாலரும் அரசியல்வாதியுமான‌ அம்பேத்கர் இறப்பு நாள். (பிறப்பு-1891)
1961ல் பிரான்சிய மருத்துவரான‌ பிரன்சு ஃபனோன் இறப்பு நாள். (பிறப்பு-1925)
1982ல் இலங்கைத் தமிழறிஞரும் திறனாய்வாளரும் கல்வியாளருமான‌ க. கைலாசபதி இறப்பு நாள். (பிறப்பு-1933)
1990ல் 1வது மலேசியப் பிரதமரான‌ துங்கு அப்துல் ரகுமான் இறப்பு நாள். (பிறப்பு-1903)
2001ல் தமிழக அரசியல்வாதியான‌ எஸ். டி. சோமசுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1930)
2005ல் சிங்கப்பூரின் 3வது குடியரசுத் தலைவரான‌ தேவன் நாயர் இறப்பு நாள். (பிறப்பு-1923)
2009ல் பிரபல இந்தி நடிகையான‌ பினா ராய் இறப்பு நாள்.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் கறிவேப்பிலை டீ தயாரிக்கும் முறை!
Next articleDecember 07 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 07