March 04 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 04

0

Today Special Historical Events In Tamil | 04-03 | March 04

March 04 Today Special | March 04 What Happened Today In History. March 04 Today Whose Birthday (born) | March-4th Important Famous Deaths In History On This Day 04/03 | Today Events In History March 4th | Today Important Incident In History | பங்குனி 04 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 04-03 | பங்குனி மாதம் 04ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 04.03 Varalatril Indru Nadanthathu Enna| March 04 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 04/03 | Famous People Born Today 04.03 | Famous People died Today 04-03.

Today Special in Tamil 04-03
Today Events in Tamil 04-03
Famous People Born Today 04-03
Famous People died Today 04-03

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 04-03 | March 04

விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (இலங்கை)
உலகப் புற்றுநோய் நாளாக‌ கொண்டாடப்படுகிறது.
ஆயுதப் போராட்ட நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (அங்கோலா)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 04-03 | March 04

51ல் பின்னாளைய உரோமைப் பேரரசர் நீரோவிற்கு இளைஞர்களின் தலைவன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.
1152ல் பிரெடெரிக் பர்பரோசா செருமனியின் மன்னராக முடிசூடினார்.
1275ல் சீன வானியலாளர்கள் முழுமையான சூரிய கிரகணத்தை அவதானித்தனர்.
1351ல் சியாமின் மன்னராக முதலாம் இராமாதிபோதி முடி சூடினார்.
1461ல் ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1493ல் கடலோடி கொலம்பசு கரிபியன் தீவுகளுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு லிஸ்பன் திரும்பினார்.
1519ல் எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு அசுட்டெக்குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி மெக்சிகோவில் தரையிறங்கினார்.
1591ல் முதலாவது ஆங்கிலேயர் ரால்ஃப் பிட்ச் என்பவர் இலங்கையில் தரையிறங்கினார்.
1665ல் இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: இங்கிலாந்து மன்னன் இரண்டாம் சார்ல்சு நெதர்லாந்து மீது போரை அறிவித்தான்.
1776ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: அமெரிக்க விடுதலைப் படையின் பீரங்கித் தாக்குதலை அடுத்து, பிரித்தானியப் படைகள் பாஸ்டன் முற்றுகையைக் கைவிட்டன.
1789ல் நியூயார்க்கில் அமெரிக்க சட்டமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றது. அமெரிக்க அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1790ல் பிரான்சு 83 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டன.
1791ல் பிரித்தானிய மக்களவையில் கனடாவை கீழ் கனடா, மேல் கனடா என இரண்டாகப் பிரிக்கும் சட்டமூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1791ல் வெர்மான்ட் அமெரிக்காவின் 14-வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1804ல் நியூ சவுத் வேல்ஸ் குடியேற்ற நாட்டில் (இன்றைய ஆத்திரேலியாவில்) அயர்லாந்து குற்றவாளிகள் பிரித்தானிய குடியேற்ற அதிகாரிகள் மீது கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
1810ல் பிரெஞ்சு இராணுவம் போர்த்துக்கல்லில் இருந்து வெளியேற்றப்பட்டது..
1813ல் நெப்போலியனுடன் போரிட்ட உருசியப் படைகள் செருமனியின் பெர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.
1837ல் சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது.
1877ல் பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கியின் சுவான் லேக் பலே நடனம் மாஸ்கோவில் முதற் தடவையாக மேடையேறியது.
1882ல் பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
1890ல் பிரித்தானியாவின் மிக நீளமான “போர்த் பாலம்” இசுக்கொட்லாந்தில் திறக்கப்பட்டது.
1899ல் குயின்சுலாந்து குக்டவுன் என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 300 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.
1908ல் அமெரிக்காவின் கிளீவ்லாந்து நகரில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் உயிரிழந்தனர்.
1931ல் இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியாவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் லொஃபோர்ட்டன் தீவுகள் மீது கிளேமோர் நடவடிக்கையை ஆரம்பித்தது.
1945ல் இரண்டாம் உலகப் போர்] பின்லாந்து நாட்சி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.
1959ல் ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.
1960ல் பிரெஞ்சு சரக்குக் கப்பல் கியூபாவின் அவானா துறைமுகத்தில் வெடித்ததில் 100 பேர் உயிரிழந்தனர்.
1962ல் கமரூனில் இருந்து புறப்பட்ட கலிடோனியன் ஏர்வேய்சு விமானம் வீழ்ந்து நொருங்கியதில் 111 பேர் உயிரிழந்தனர்.
1966ல் கனடாவின் பசிபிக் ஏர்லைன்சின் டிசி-8-43 விமானம் தோக்கியோ பன்னாட்டு விமான நிலையத்தில் தரையிறங்குகையில் வெடித்ததில் 64 பேர் உயிரிழந்தனர்.
1970ல் பிரான்சின் நீர்மூழ்கிக் கப்பல் யூரிடைசு கடலடியில் வெடித்ததில், அதிலிருந்த அனைத்து 547 பேரும் உயிரிழந்தனர்.
1976ல் வடக்கு அயர்லாந்தின் அரசியலமைப்பு சபை கலைக்கப்பட்டது. வட அயர்லாந்து இலண்டன் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் நேரடியாக நிர்வாகத்தின்கீழ் வந்தது.
1977ல் உருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,570 பேர் உயிரிழந்தனர்.
1980ல் தேசியவாதி ராபர்ட் முகாபே சிம்பாப்வேயின் முதலாவது கருப்பின பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1985ல் அமெரிக்காவில் தரப்படும் குருதிக் கொடைகள் அனைத்துக்கும் எயிட்சுக்கான குருதிப் பரிசோதனை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரம் அளித்தது.
1986ல் சோவியத் வேகா 1 விண்கலம் ஏலியின் வாள்வெள்ளியின் கருவின் படிமங்களை முதன் முதலாக புவிக்கு அனுப்பியது.
1994ல் கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
1996ல் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதை அடுத்து, 2,300 பயணிகளை வெளியேற்ற 16 நாட்கள் பிடித்தன.
2001ல் லண்டனில் பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
2006ல் பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
2009ல் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் சூடான் அரசுத்தலைவர் உமர் அல்-பஷீர் மீது போர்க்குற்றங்களும், மானுடத்துக்கு எதிரான குற்றங்களும் சுமத்தி பிடி ஆணை பிறப்பித்தது.
2012ல் கொங்கோ தலைநகர் பிராசவில்லியில் வெடிபொருள் களஞ்சியம் ஒன்று வெடித்ததில் 250 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 04-03 | March 04

1811ல் பிரான்சிய கத்தோலிக்க குருவும் புனிதருமான‌ பீட்டர் ஜூலியன் ஐமார்ட் பிறந்த நாள். (இறப்பு-1868)
1875ல் செருமானிய இயற்பியலாளரும் பொறியியலாளருமான‌ லுட்விக் பிராண்டில் பிறந்த நாள். (இறப்பு-1953)
1891ல் இந்திய அரசியல்வாதியும் 2வது இந்திய மக்களவைத் தலைவருமான‌ மடபூஷிய அனந்தசயனம் அய்யங்கர் பிறந்த நாள். (இறப்பு-1978)
1893ல் ஆத்திரேலியத் தொல்லியலாளரும் புதை படிவ ஆய்வாளரும் உடற்கூறியலாளருமான‌ ரேமாண்ட் டார்ட் பிறந்த நாள். (இறப்பு-1988)
1895ல் தமிழக நாடக மற்றும் திரைப்பட நடிகரான‌ பி. ஏ. சுப்பையா பிள்ளை பிறந்த நாள்.
1906ல் புளூட்டோவைக் கண்டுபிடித்த அமெரிக்க வானியலாளரான‌ கிளைட் டோம்பா பிறந்த நாள். (இறப்பு-1997)
1913ல் அமெரிக்க மனித உரிமை செயற்பாட்டாளரான‌ றோசா பாக்ஸ் பிறந்த நாள். (இறப்பு-2005)
1921ல் அமெரிக்க எழுத்தாளரான‌ பெட்டி ஃப்ரீடன் பிறந்த நாள். (இறப்பு-2006)
1922ல் இந்துஸ்தானி இசைப் பாடகரான‌ பீம்சென் ஜோஷி பிறந்த நாள். (இறப்பு-2011)
1943ல் தமிழக பரத நாட்டியக் கலைஞரான‌ பத்மா சுப்ரமணியம் பிறந்த நாள்.
1943ல் பி நிரலாக்க மொழியைக் கண்டுபிடித்த அமெரிக்கரான‌ கென் தாம்ப்சன் பிறந்த நாள்.
1948ல் நேபாளத்தின் 1வது குடியரசுத் தலைவரான‌ ராம் பரன் யாதவ் பிறந்த நாள்.
1962ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரான‌ ராஜசேகர் பிறந்த நாள்.
1971ல் அமெரிக்க நடிகரான‌ ரோப் கோர்ட்றி பிறந்த நாள்.
1974ல் இந்திய நடிகையான‌ ஊர்மிளா மடோண்த்கர் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 04-03 | March 04

1693ல் போர்த்துக்கீச இயேசு சபை குருவான‌ ஜான் டி பிரிட்டோ இறப்பு நாள். (பிறப்பு-1647)
1747ல் இத்தாலியத் தமிழறிஞரும் கிறித்தவ மதப் பரப்புனருமான‌ வீரமாமுனிவர் இறப்பு நாள். (பிறப்பு-1680)
1817ல் செச்சினிய முஸ்லிம் அரசியல் மற்றும் சமயத் தலைவருமான‌ இமாம் ஷாமில் இறப்பு நாள். (பிறப்பு-1797)
1894ல் சாக்சபோனைக் கண்டுபிடித்த பெல்ஜியரான‌ அடோல்ப் சக்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1814)
1928ல் நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளரான‌ என்ட்ரிக் லொரன்சு இறப்பு நாள். (பிறப்பு-1853)
1934ல் ஒடிசா கவிஞரும் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமான‌ மதுசூதன் தாசு இறப்பு நாள். (பிறப்பு-1848)
1946ல் தென்னாப்பிரிக்க கட்டிடக் கலைஞரான‌ எர்பெர்ட்டு பேக்கர் இறப்பு நாள். (பிறப்பு-1862)
1957ல் இலங்கை மலையக அரசியல்வாதியும் கல்வியாளரும் தொழிற்சங்கத் தலைவருமான‌ பெரி. சுந்தரம் இறப்பு நாள். (பிறப்பு-1890)
1974ல் இந்திய இயற்பியலாளரும் கணிதவியலாளருமான‌ சத்தியேந்திர நாத் போசு இறப்பு நாள். (பிறப்பு-1894)
1985ல் தமிழகப் பதிப்பாசிரியரும் நூலாசிரியருமான‌ மே. வீ. வேணுகோபாலன் இறப்பு நாள். (பிறப்பு-1896)
1987ல் அமெரிக்க உளவியலாளரான‌ கார்ல் ரோஜர்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1902)
2006ல் அமெரிக்க எழுத்தாளரான‌ பெட்டி ஃப்ரீடன் இறப்பு நாள். (பிறப்பு-1921)
2007ல் தமிழக அரசியல்வாதியும் பேச்சாளருமான‌ புளியங்குடி க. பழனிச்சாமி இறப்பு நாள். (பிறப்பு-1938)
2014ல் இந்திய பொருளியலாளரான‌ அனிருத் லால் நகர் இறப்பு நாள். (பிறப்பு-1930)
2015ல் ஈழத்து வில்லிசைக் கலைஞரான‌ சின்னமணி இறப்பு நாள். (பிறப்பு-1936)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleMarch 03 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 03
Next articleMarch 05 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil March 05