Today Special Historical Events In Tamil | 21-02 | February 21
February 21 Today Special | February 21 What Happened Today In History. February 21 Today Whose Birthday (born) | February-21th Important Famous Deaths In History On This Day 21/02 | Today Events In History February 21th | Today Important Incident In History | மாசி 21 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 21-02 | மாசி மாதம் 21ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 21.02 Varalatril Indru Nadanthathu Enna| February 21 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 21/02 | Famous People Born Today 21.02 | Famous People died Today 21-02.
Today Special in Tamil 21-02
Today Events in Tamil 21-02
Famous People Born Today 21-02
Famous People died Today 21-02
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 21-02 | February 21
பன்னாட்டுத் தாய்மொழி நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 21-02 | February 21
362ல் புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார்.
1437ல் இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார்.
1440ல் புருசியக் கூட்டமைப்பு உருவானது.
1543ல் எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது கிரான் தலைமையிலான முசுலிம் படைகளைத் தோற்கடித்தன.
1613ல் முதலாம் மிக்கையில் உருசியப் பேரரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரொமானொவ் அரச வம்சம் ஆரம்பமானது.
1803ல் கண்டிப் போர்கள்: கண்டி மீது பிரித்தானியர் போர் தொடுத்தனர்.
1804ல் நீராவியால் இயங்கிய முதல் தொடருந்து இயந்திரம் வேல்சில் இயக்கி சோதித்துப் பார்க்கப்பட்டது.
1808ல் உருசியப் படை பின்லாந்து எல்லையைத் தாண்டி சுவீடனை அடைந்தது. பின்லாந்துப் போர் ஆரம்பமானது. இப்போரில் சுவீடன் பின்லாந்தை உருசியாவுக்கு இழந்தது.
1842ல் தையல் இயந்திரத்துக்கான 1-வது அமெரிக்கக் காப்புரிமத்தை யோன் கிரீனா பெற்றார்.
1848ல் கார்ல் மார்க்சும் பிரெட்ரிக் எங்கெல்சும் பொதுவுடைமை அறிக்கையை வெளியிட்டனர்.
1878ல் முதலாவது தொலைபேசி விபரக்கொத்து அமெரிக்காவில் கனெடிகட்டில் வெளியிடப்பட்டது.
1885ல் வாசிங்டன் நினைவுச் சின்னம் திறந்து வைக்கப்பட்டது.
1907ல் நெதர்லாந்தில் பெர்லின் என்ற கப்பல் மூழ்கியதில் 125 பேர் உயிரிழந்தனர்.
1919ல் செருமனிய சோசலிசவாதி கூர்ட் ஐசுனர் கொல்லப்பட்டார்.
1921ல் ஈரானில் இடம்பெற்ற புரட்சியில் ரெசா ஷா தெகுரானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
1937ல் எசுப்பானிய உள்நாட்டுப் போரில் வெளிநாட்டு தேசிய தன்னார்வலர்களை உலக நாடுகள் சங்கம் தடை செய்தது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டையின் போது, சப்பானிய கமிக்காசு வானூர்திகள் அமெரிக்காவின் பிசுமார்க் சீ என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தன. சரட்டோகா கப்பல் சேதமடைந்தது.
1945ல் இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய முனையில் பிரேசிலிய[ படைகள் செருமனியப் படைகளை மொண்டே காசுட்டெல்லோ சமரில் தோற்கடித்தன.
1947ல் எட்வின் லாண்ட் பொலராய்டு என்ற முதலாவது உடனடி படம்பிடிகருவியை நியூயோர்க் நகரில் காட்சிப்படுத்தினார்.
1952ல் வின்ஸ்டன் சர்ச்சிலின் பிரித்தானிய அரசு ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் அடையாள அட்டை முறையை நீக்கியது.
1952ல் வங்காள மொழி இயக்கம்: கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியை அதிகாரபூர்வ மொழியாக்கக் கோரி டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய எழுச்சிப் போராட்டம் ஒன்றின் போது காவற்துறையினர் சுட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நாள் பின்னர் யுனெஸ்கோவினால் அனைத்துலக தாய்மொழி நாள் என அறிவிக்கப்பட்டது.
1960ல் பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்.
1965ல் மல்கம் எக்ஸ் நியூயோர்க் நகரில் இசுலாமியத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1972ல் சீன-அமெரிக்க உறவுகளை சீர் செய்யும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் சீனா சென்றார்.
1972ல் சோவியத்தின் ஆளில்லா லூனா 20 சந்திரனில் இறங்கியது.
1973ல் சினாய் பாலைவனத்தில் இசுரேல் போர் விமானம் லிபியாவின் பயணிகள் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தியதில் 108 பேர் கொல்லப்பட்டனர்.
1974ல் சூயெஸ் கால்வாயின் மேற்குக் கரையில் இருந்து கடைசி இசுரேலியப் படைகள் வெளியேறின.
1995ல் இசுட்டீவ் பொசெட் என்பவர் அமைதிப் பெருங்கடலின் குறுக்கே வெப்பக்காற்று வாயுக்கூண்டில் பயணம் செய்த முதல் மனிதராக கனடாவின் லீடர் நகரில் தரையிறங்கினார்.
2013ல் 2013 ஐதராபாத் குண்டு வெடிப்புக்கள்: இந்தியாவின் ஐதராபாத் நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 20 மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 21-02 | February 21
1728ல் உருசியப் பேரரசரான மூன்றாம் பீட்டர் பிறந்த நாள். (இறப்பு-1762)
1801ல் ஆங்கிலேயக் கருதினாலான ஜான் ஹென்றி நியூமன் பிறந்த நாள். (இறப்பு-1890)
1878ல் பிரான்சிய-இந்திய மதத் தலைவரான மிரா அல்பாசா பிறந்த நாள். (இறப்பு-1973)
1894ல் இந்திய வேதியியலாளரான சாந்தி சுவரூப் பட்நாகர் பிறந்த நாள். (இறப்பு-1955)
1895ல் டென்மார்க்கிய உயிர் வேதியியலாளரான என்ரிக் டாம் பிறந்த நாள். (இறப்பு-1976)
1896ல் இந்தியக் கவிஞரான நிராலா பிறந்த நாள். (இறப்பு-1961)
1910ல் ஆங்கிலேய விமானியான டக்ளஸ் பேடர் பிறந்த நாள். (இறப்பு-1982)
1921ல் அமெரிக்க மெய்யியலாளரான ஜான் ரால்ஸ் பிறந்த நாள். (இறப்பு-2002)
1924ல் சிம்பாப்வேயின் 2வது அரசுத்தலைவரான இராபர்ட் முகாபே பிறந்த நாள். (இறப்பு-2019)
1946ல் ஆங்கிலேய நடிகரும் இயக்குநருமான அலன் ரிக்மான் பிறந்த நாள். (இறப்பு-2016)
1958ல் கனடிய நடிகரான கிம் கோட்ஸ் பிறந்த நாள்.
1964ல் அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்காட் கெல்லி பிறந்த நாள்.
1970ல் தமிழக நடிகரும் அரசியல்வாதியுமான கருணாஸ் பிறந்த நாள்.
1980ல் பூட்டான் மன்னரான ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் பிறந்த நாள்.
1987ல் கனடிய நடிகையான எலன் பேஜ் பிறந்த நாள்.
1988ல் தென்னிந்திய நடிகையான வேதிகா குமார் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 21-02 | February 21
1829ல் இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனையான ராணி சென்னம்மா இறப்பு நாள். (பிறப்பு-1778)
1906ல் ஈழத்து-தமிழகத் தமிழறிஞரான வி. கனகசபைப் பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1855)
1926ல் நோபல் பரிசு பெற்ற இடச்சு இயற்பியலாளரான ஹெய்க் காமர்லிங் ஆன்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1853)
1938ல் அமெரிக்க வானியலாளரான ஜார்ஜ் எல்லேரி ஏல் இறப்பு நாள். (பிறப்பு-1868)
1965ல் அமெரிக்க செயற்பாட்டாளரான மல்கம் எக்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1925)
1981ல் இலங்கைத் திரைப்பட மற்றும் நாடக நடிகரான ஏ. எஸ். ராஜா இறப்பு நாள்.
1984ல் நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளரான மிகயில் ஷோலகவ் இறப்பு நாள். (பிறப்பு-1905)
2001ல் இந்திய மொழியியலாளரான நரேன் சந்து பரசார் இறப்பு நாள். (பிறப்பு-1934)
2001ல் உருசிய வானியலாளரான செர்கேய் அலெக்சாந்திரோவிச் செவாகின் இறப்பு நாள். (பிறப்பு-1916)
2011ல் சர்ச்சைக்குரிய இந்திய மதகுருவான திருச்சி பிரேமானந்தா இறப்பு நாள். (பிறப்பு-1951)
2012ல் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரான முத்துராஜா இறப்பு நாள்.
2018ல் அமெரிக்க கிறித்தவ நற்செய்தியாளரான பில்லி கிரகாம் இறப்பு நாள். (பிறப்பு-1918)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan