Today Special Historical Events In Tamil | 22-02 | February 22
February 22 Today Special | February 22 What Happened Today In History. February 22 Today Whose Birthday (born) | February-22th Important Famous Deaths In History On This Day 22/02 | Today Events In History February 22th | Today Important Incident In History | மாசி 22 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 22-02 | மாசி மாதம் 22ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 22.02 Varalatril Indru Nadanthathu Enna| February 22 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 22/02 | Famous People Born Today 22.02 | Famous People died Today 22-02.
Today Special in Tamil 22-02
Today Events in Tamil 22-02
Famous People Born Today 22-02
Famous People died Today 22-02
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 22-02 | February 22
விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (செயிண்ட் லூசியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1979)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 22-02 | February 22
705ல் பேரரசி வூசெத்தியான் முடிதுறந்தார், சீனாவில் தாங் அரசாட்சி ஆரம்பமானது.
1371ல் இரண்டாம் இராபர்ட் இசுக்கொட்லாந்தின் அரசனாக முடி சூடினார்.
1495ல் பிரான்சு மன்னர் எட்டாம் சார்லசு நாப்பொலியை அடைந்து அந்நகரைக் கைப்பற்றினார்.
1651ல் செருமனியின் பிரீசியக் கரை வெள்ளப்பெருக்கினால் அழிந்தது. 15,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1658ல் இடச்சுக்காரரினால் இலங்கையின் மன்னார் நகரம் கைப்பற்றப்பட்டது.
1797ல் பிரித்தானியா மீதான கடைசிப் படையெடுப்பு வேல்சின் பிசுகார்டு நகரில் பிரெஞ்சுப் படைகளால் மேற்கொள்ளப்பட்டது.
1819ல் எசுப்பானியா புளோரிடாவை ஐக்கிய அமெரிக்காவுக்கு ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றது.
1847ல் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: புவெனா-விஸ்டா நகரில் இடம்பெற்ற போரில் 15,000 மெக்சிக்கர்களை 5,000 அமெரிக்கப் படைகள் தோற்கடித்தன.
1848ல் பாரிசில் லூயி பிலிப் மன்னனுக்கெதிரான பிரெஞ்சுப் புரட்சி வெடித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அவன் முடி துறந்தான்.
1853ல் வாசிங்டன் பல்கலைக்கழகம் எலியட் செமினறி என்ற பெயரில் மிசூரி, செயின்ட் லூயிசில்| ஆரம்பிக்கப்பட்டது.
1862ல் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் அரசுத்தலைவராக அதிகாரபூர்வமாக வர்ஜீனியா, ரிச்மண்ட் நகரில் பொறுப்பேற்றார்.
1882ல் சேர்பிய பேரரசு மீள உருவாக்கப்பட்டது.
1889ல் அமெரிக்க அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் வடக்கு டகோட்டா, தெற்கு டகோட்டா, மொன்ட்டானா, வாசிங்டன் ஆகியவற்றை அமெரிக்காவின் மாநிலங்களாக அறிவிக்கும் சட்டமூலத்தில் கையெழுத்திட்டார்.
1899ல் பிலிப்பைன்-அமெரிக்கப் போர்: பிலிப்பீனியப் படைகள் அமெரிக்கப் படைகளுக்கு எதிராக முதன் முதலாகத் தாக்குதலைத் தொடுத்தன. ஆனாலும், மணிலா நகரை அமெரிக்கர்களிடம் இருந்து கைப்பற்றத் தவறியது.
1907ல் பேடன் பவல் முதலாவது சாரணிய முகாமை இங்கிலாந்தில் பிரவுன்சி என்ற இடத்தில் அமைத்தார்.
1909ல் கனெடிக்கட் கப்பலின் தலைமையிலான 16 அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தமது உலகப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா திரும்பின.
1921ல் உருசியப் படையினர் மங்கோலியாவில் இருந்து சீனர்களை வெளியேற்றி, போகடு கானை மங்கோலியாவின் பேரரசனாக அறிவித்தனர்.
1924ல் கால்வின் கூலிஜ் வெள்ளை மாளிகையில் இருந்து வானொலி மூலம் உரையாற்றிய முதலாவது அமெரிக்கத் தலைவர் ஆனார்.
1942ல் இரண்டாம் உலகப் போர்: பிலிப்பீன்சில் ஐக்கிய அமெரிக்காவின் தோல்வியைத் தொடர்ந்து அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மக்கார்த்தரை வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் பணித்தார்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியில் சோபி சோல் உட்பட வெள்ளை ரோசா இயக்க உறுப்பினர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டனர்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க வான்படையினர் தவறுதலாக நான்கு இடச்சு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 800 இற்கும் அதிகமானோர் இறந்தனர்.
1958ல் எகிப்தும் சிரியாவும் இணைந்து ஐக்கிய அரபுக் குடியரசை அமைத்தன.
1961ல் உருசிய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகத்திற்கு கொங்கோவில் கொல்லப்பட்ட கறுப்பினத் தலைவர் பத்திரிசு லுமும்பாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.
1969ல் பீட்டில்சின் அனைத்து அங்கத்தவர்களும் கடைசித் தடவையாக சேர்ந்து பாடல் பதிவில் ஈடுபட்டனர்.
1972ல் அதிகாரபூர்வ ஐரியக் குடியரசு இராணுவம் இங்கிலாந்து, ஆம்ப்சயரில் உள்ள ஆல்டர்சொட் இராணுவப் பாசறையில் வாகனக் குண்டுவெடிப்பை நடத்தியது. ஏழு பேர் கொல்லப்பட்டு, 19 பேர் காயமடைந்தனர்.
1974ல் பாக்கித்தான், லாகூரில், நடைபெற்ற இசுலாமியக் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் 37 நாடுகளும், 22 அரசுத்தலைவர்களும் பங்குபற்றினர். இம்மாநாட்டில் வங்காளதேசம் அங்கீகரிக்கப்பட்டது.
1974ல் ரிச்சார்ட் நிக்சனைப் படுகொலை செய்யும் நோக்கில் வெள்ளை மாளிகை மீது மோதுவதற்காக வாசிங்டன் பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் ஒன்றைக் கடத்த முற்பட்ட சாமுவேல் பிக் என்பவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
1979ல் சென் லூசியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1986ல் பிலிப்பீன்சில் மக்கள் புரட்சி வெடித்தது.
1997ல் டோலி என்ற ஆடு வெற்றிகரமாக படியெடுக்கப்பட்டதாக பிரித்தானிய அறிவியலாளர்கள் அறிவித்தனர்.
2002ல் அங்கோலாவின் அரசியல் தலைவர் ஜொனாசு சவிம்பி இராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.
2002ல் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் வவுனியாவில் கையெழுத்திடப்பட்டது.
2005ல் ஈரானில் கெர்மான் மாகாணத்தில் 6.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 612 பேர் உயிரிழந்தனர்.
2006ல் பிரித்தானியாவின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை கெண்ட் நகரில் இடம்பெற்றது. £53 மில்லியன் பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.
2011ல் நியூசிலாந்தில் கிறைஸ்ட்சேர்ச்சில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 185 பேர் உயிரிழந்தனர்.
2012ல் அர்கெந்தீனா, புவெனஸ் ஐரிஸ் நகரில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 51 பேர் உயிரிழந்தனர், 700 பேர் காயமடைந்தனர்.
2014ல் உக்ரைன் அரசுத்தலைவர் விக்டர் யானுக்கோவிச்சுக்கெதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் 328–0 வாக்குகளால் வெற்றியடைந்தது.
2015ல் பத்மா நதியில் பயணிகள் படகு ஒன்று மூழ்கியதில் 70 பேர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 22-02 | February 22
1302ல் சீன யுவான் வம்சப் பேரரசரான ஜெஜீன் கான் பிறந்த நாள். (இறப்பு-1323)
1732ல் ஐக்கிய அமெரிக்காவின் 1வது அரசுத்தலைவரான சியார்ச் வாசிங்டன் பிறந்த நாள். (இறப்பு-1799)
1785ல் பிரான்சிய இயற்பியலாளரான சான் சார்லசு அத்தனாசு பெல்த்தியே பிறந்த நாள். (இறப்பு-1845)
1796ல் பெல்சிய கணிதவியலாளரும் வானியலாளருமான அடால்ப் குவெட்லெட் பிறந்த நாள். (இறப்பு-1874)
1810ல் போலந்து இசையமைப்பாளரான பிரடெரிக் சொப்பின் பிறந்த நாள். (இறப்பு-1849)
1824ல் பிரான்சிய வானியலாளரும் கணிதவியலாளருமான பியேர் ஜான்சென் பிறந்த நாள். (இறப்பு-1907)
1857ல் சாரணர் இயக்கத்தை ஆரம்பித்த ஆங்கிலேயரான பேடன் பவல் பிறந்த நாள். (இறப்பு-1941)
1857ல் செருமானிய இயற்பியலாளரும் மெய்யியலாளருமான ஐன்ரிக் ஏர்ட்சு பிறந்த நாள். (இறப்பு-1894)
1879ல் தென்மார்க்கு வேதியியலாளரான ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட் பிறந்த நாள். (இறப்பு-1947)
1892ல் அமெரிக்கக் கவிஞரான எட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய் பிறந்த நாள். (இறப்பு-1950)
1898ல் இந்திய விடுதலைப் போராட்டப் பெண் போராளியான தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள். (இறப்பு-1914)
1923ல் இலங்கைத் தமிழ் நீதிபதியும் வழக்கறிஞரும் மேல்மாகாணத்தின் 1வது ஆளுநருமான சுப்பையா சர்வானந்தா பிறந்த நாள். (இறப்பு-2007)
1932ல் அமெரிக்க அரசியல்வாதியான எட்வர்ட் கென்னடி பிறந்த நாள். (இறப்பு-2009)
1936ல் தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவரும் பேச்சாளருமான சாலமன் பாப்பையா பிறந்த நாள்.
1951ல் இலங்கைத் தமிழ்க் கல்வியாளரான சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பிறந்த நாள்.
1953ல் தமிழகத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான ஊ. பு. அ. சௌந்திரபாண்டியன் பிறந்த நாள். (இறப்பு-1893)
1956ல் தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளரும் டென்னிசு வீரருமான அசோக் அமிர்தராஜ் பிறந்த நாள்.
1962ல் ஆத்தியேலிய விலங்கியலாலரும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான இசுடீவ் இர்வின் பிறந்த நாள். (இறப்பு-2006)
1963ல் பிஜி-அமெரிக்க குழிப்பந்தாட்ட வீரரான விஜய் சிங் பிறந்த நாள்.
1974ல் ஆங்கிலேயப் பாடகரும் கித்தார் இசைக்கலைஞருமான ஜேம்ஸ் பிளண்ட் பிறந்த நாள்.
1975ல் அமெரிக்க நடிகையான டுரூ பேரிமோர் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 22-02 | February 22
1072ல் இத்தாலியப் புனிதரான பீட்டர் தமியான் இறப்பு நாள்.
1512ல் இத்தாலிய நாடுகாண் பயணியான அமெரிகோ வெஸ்புச்சி இறப்பு நாள். (பிறப்பு-1454)
1600ல் போர்த்துக்கீச இயேசு சபை போதகரும் மதப்பரப்புனருமான என்றிக்கே என்றீக்கசு இறப்பு நாள். (பிறப்பு-1520)
1913ல் சுவிட்சர்லாந்து மொழியியலாளரான பேர்டினண்ட் டி சோசர் இறப்பு நாள். (பிறப்பு-1857)
1943ல் செருமானிய செயற்பாட்டாளரான சோபி சோல் இறப்பு நாள். (பிறப்பு-1921)
1944ல் மகாத்மா காந்தியின் மனைவியான கஸ்தூரிபாய் காந்தி இறப்பு நாள். (பிறப்பு-1869)
1958ல் இந்திய அரசியல்வாதியான அபுல் கலாம் ஆசாத் இறப்பு நாள். (பிறப்பு-1888)
1987ல் அமெரிக்க ஓவியரும் புகைப்படக் கலைஞருமான அன்டி வார்ஹால் இறப்பு நாள். (பிறப்பு-1928)
2001ல் ஈழத்து எழுத்தாளரான வ. அ. இராசரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு-1925)
2006ல் சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சரான எஸ். ராஜரத்தினம் இறப்பு நாள். (பிறப்பு-1915)
2012ல் அமெரிக்க ஊடகவியலாளரான மரீ கோல்வின் இறப்பு நாள். (பிறப்பு-1956)
2012ல் பிரான்சிய ஊடகவியலாளரான இரெமி ஓக்லிக்கு இறப்பு நாள். (பிறப்பு-1983)
2019ல் ஈழத்து-கனடிய ஓவியரான கருணா இறப்பு நாள்.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan