February 20 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 20

0

Today Special Historical Events In Tamil | 20-02 | February 20

February 20 Today Special | February 20 What Happened Today In History. February 20 Today Whose Birthday (born) | February-20th Important Famous Deaths In History On This Day 20/02 | Today Events In History February 20th | Today Important Incident In History | மாசி 20 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 20-02 | மாசி மாதம் 20ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 20.02 Varalatril Indru Nadanthathu Enna| February 20 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 20/02 | Famous People Born Today 20.02 | Famous People died Today 20-02.

Today Special in Tamil 20-02
Today Events in Tamil 20-02
Famous People Born Today 20-02
Famous People died Today 20-02

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 20-02 | February 20

சமூக நீதிக்கான உலக நாளாக கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 20-02 | February 20

1472ல் இசுக்கொட்லாந்தின் அரசியும், டென்மார்க்கின் இளவரசியுமான மார்கரெட்டுக்காக ஓர்க்னி, செட்லாந்து ஆகிய பகுதிகளை நோர்வே இசுக்கொட்லாந்துக்கு வரதட்சணையாக வழங்கியது.
1547ல் ஆறாம் எட்வர்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினார்.
1627ல் யாழ்ப்பாணத்தைத் தாக்கிய சூறாவளியில் சிக்கி பலர் இறந்தனர்.
1798ல் திருத்தந்தை ஆறாம் பயஸ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1810ல் பிரான்சின் முதலாம் நெப்போலியனுக்கு எதிரான கிளர்ச்சிப் படையின் தலைவர் அந்திரயாசு ஓஃபர் தூக்கிலிடப்பட்டார்.
1818ல் இலங்கையின் கண்டிப் பிரதேசத்தில் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
1835ல் சிலியின் கன்செப்சியான் நகரம் நிலநடுக்கத்தில் அழிந்தது.
1846ல் தேசிய விடுதலைக்கான போராட்டமாக போலந்துக் கிளர்ச்சிவாதிகள் கிராக்கோவ் நகரில் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
1865ல் உருகுவைப் போர் முடிவுக்கு வந்தது. அரசுத்தலைவர் தொமாசு விலால்பாவுக்கும் கிளர்ச்சித் தலைவர் வெனான்சியோ புளோரெசிற்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1877ல் சாய்கோவ்சுக்கியின் பாலே அன்ன ஏரி மாஸ்கோவின் பல்சோய் அரங்கில் முதல்தடவையாக மேடையேறியது.
1933ல் நாட்சி கட்சிக்கு தேர்தல் நிதி சேர்ப்பதற்காக இட்லர் செருமானியத் தொழிலதிபர்களை இரகசியமாகச் சந்தித்தார்.
1935ல் அந்தாட்டிக்காவுக்குச் சென்ற முதல் பெண் என்ற சாதனையை டென்மார்க்கைச் சேர்ந்த கரொலைன் மிக்கெல்சன் ஏற்படுத்தினார்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கப் போர் விமானங்கள் செருமனியின் வானூர்தி தயாரிப்பு நிலையங்கள் மீது தாக்குதல்களை நிகழ்த்தின.
1946ல் இலங்கைக்கு முதன் முதலாக இரட்டைத் தட்டுப் பேருந்து கொண்டு வரப்பட்டது.
1962ல் மேர்க்குரித் திட்டம்: ஜோன் கிளென் பூமியை மூன்று முறை சுற்றி பூமியைச் சுற்றிய முதலாவது அமெரிக்கர் என்ற புகழைப் பெற்றார்.
1965ல் அப்பலோ விண்கலங்கள் சந்திரனில் இறங்குவதற்கான இடங்களை வெற்றிகரமாகப் படங்கள் எடுத்த ரேஞ்சர் 8 விண்கலம் சந்திரனுடன் மோதியது.
1979ல் நிலநடுக்கம் காரணமாக H2S நச்சு வாயு பரவியதில் இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் 149 பேர் உயிரிழந்தனர்.
1986ல் சோவியத் ஒன்றியம் மீர் விண்கலத்தை ஏவியது. 15 ஆண்டுகள் புவியின் சுற்றுவட்டத்தில் இவ்விண்கலம் நிலைகொண்டிருந்தது.
1987ல் அருணாசலப் பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமாகியது.
1988ல் நகர்னோ-கரபாக் தன்னாட்சி மாவட்டம் அசர்பைசானில் இருந்து பிரிந்து ஆர்மீனியாவுடன் இணைய முடிவு செய்தது. இது நகர்னோ-கரபாக் போருக்கு வழிவகுத்தது.
1991ல் அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில், அந்நாட்டின் நீண்ட நாள் அரசுத்தலைவராக இருந்த என்வர் ஒக்சாவின் மிகப் பெரும் சிலை ஒன்று ஆர்பாட்டக்காரர்களினால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
2003ல் அமெரிக்காவின் றோட் தீவில் இரவு விடுதி ஒன்றில் தீ பரவியதில் 100 பேர் உயிரிழந்தனர். 200 பேர் காயமடைந்தனர்.
2009ல் இலங்கையில் தேசிய வான்படைத் தலைமை அலுவலகத்தைத் தாக்கும் பொருட்டு புறப்பட்ட விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையின் இரண்டு வானூர்திகள் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
2010ல் போர்த்துகல், மடெய்ரா தீவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, மண்சரிவினால் 43 பேர் உயிரிழந்தனர்.
2015ல் சுவிட்சர்லாந்து, ராஃப்சு நகரில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 49 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 20-02 | February 20

1844ல் ஆத்திரிய இயற்பியலாளரும் மெய்யியலாளருமான‌ லுட்விக் போல்ட்ஸ்மான் பிறந்த நாள். (இறப்பு-1906)
1876ல் தமிழகத் தமிழறிஞரும் பேராசிரியருமான‌ கா. நமச்சிவாய முதலியார் பிறந்த நாள். (இறப்பு-1936)
1878ல் தமிழறிஞரும் உரையாசிரியருமான‌ சி. கே. சுப்பிரமணிய முதலியார் பிறந்த நாள். (இறப்பு-1961)
1901ல் சென்னை மாகாணத்தின் 6வது முதலமைச்சரான‌ பொபிலி அரசர் பிறந்த நாள். (இறப்பு-1978)
1923ல் அமெரிக்க வேதியியலாளரான‌ ஹெலன் மர்ரே பிரீ பிறந்த நாள். (இறப்பு-2021)
1925ல் நேபாளப் பிரதமரான‌ கிரிஜா பிரசாத் கொய்ராலா பிறந்த நாள். (இறப்பு-2010)
1941ல் மலேசிய அரசியல்வாதியான‌ லிம் கிட் சியாங் பிறந்த நாள்.
1944ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் இயக்குநருமான‌ விஜய நிர்மலா பிறந்த நாள். (இறப்பு-2019)
1945ல் அமெரிக்க விண்ணியல் அறிஞரான‌ ஜியார்ஜ் ஸ்மூட் பிறந்த நாள்.
1948ல் நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய-சைப்பிரசு பொருளியலாளரான‌ கிறிஸ்டோபர் அந்தோனி பிசாரைட்ஸ் பிறந்த நாள்.
1951ல் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரான‌ கார்டன் பிரவுன் பிறந்த நாள்.
1967ல் அமெரிக்கப் பாடகரான‌ கர்ட் கோபேன் பிறந்த நாள். (இறப்பு-1994)
1986ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ கலையரசன் பிறந்த நாள்.
1987ல் அமெரிக்க நடிகரான‌ மைல்ஸ் டெல்லர் பிறந்த நாள்.
1988ல் அமெரிக்க-இந்திய நடிகையும் பாடகியுமான‌ ஜியா கான் பிறந்த நாள். (இறப்பு-2013)
1990ல் இந்தியத் தமிழ் இசைக்கலைஞரான‌ ஆதி வேங்கடபதி பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 20-02 | February 20

1762ல் செருமானிய வானியலாளரான‌ டோபியாஸ் மேயர் இறப்பு நாள். (பிறப்பு-1723)
1778ல் இத்தாலிய இயற்பியலாளரான‌ லாரா மரியா இறப்பு நாள். (பிறப்பு-1711)
1862ல் பிலிப்பீனிய எழுத்தாளரான‌ பிரான்சிஸ்கோ பலக்டாஸ் இறப்பு நாள். (பிறப்பு-1788)
1896ல் ஈழத்துத் தமிழறிஞரான‌ புலவரான‌ ஆணல்ட் சதாசிவம்பிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1820)
1907ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளரான‌ ஆன்றி முவாசான் இறப்பு நாள். (பிறப்பு-1852)
1920ல் போர்த்துக்கீசப் புனிதரான‌ ஜெசிந்தா மார்த்தோ இறப்பு நாள். (பிறப்பு-1910)
1950ல் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான‌ சரத் சந்திர போசு இறப்பு நாள். (பிறப்பு-1889)
1972ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளரான‌ மரியா கோயெப்பெர்ட் மேயர் இறப்பு நாள். (பிறப்பு-1906)
1960ல் தமிழகப் புதின எழுத்தாளரான‌ வை. மு. கோதைநாயகி இறப்பு நாள். (பிறப்பு-1901)
1987ல் கத்தோலிக்கத் திருச்சபை கர்தினாலான‌ ஜோசப் பாறேக்காட்டில் இறப்பு நாள். (பிறப்பு-1912)
2001ல் இந்திய இடதுசாரி அரசியல்வாதியான‌ இந்திரஜித் குப்தா இறப்பு நாள். (பிறப்பு-1919)
2001ல் இந்திய ஆன்மிகத் துறவியான‌ யோகி ராம்சுரத்குமார் இறப்பு நாள். (பிறப்பு-1918)
2008ல் கிறித்தவ மறைபரப்புனரான‌ டி. ஜி. எஸ். தினகரன் இறப்பு நாள். (பிறப்பு-1935)
2010ல் இலங்கை வானொலி மற்றும் மேடை நாடகக் கலைஞரான‌ ஸ்ரீதர் பிச்சையப்பா இறப்பு நாள். (பிறப்பு-1962)
2011ல் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகருமான‌ மலேசியா வாசுதேவன் இறப்பு நாள். (பிறப்பு-1944)
2012ல் தமிழக ஆன்மிக எழுத்தாளரான‌ தமிழறிஞரான‌ ரா. கணபதி இறப்பு நாள்.
2012ல் தமிழ்த் திரைப்பட மற்றும் நாடக நடிகையான‌ எஸ். என். லட்சுமி இறப்பு நாள். (பிறப்பு-1934)
2014ல் இந்திய அரசியல்வாதியான‌ பார்வதி கிருஷ்ணன் இறப்பு நாள். (பிறப்பு-1919)
2015ல் இந்திய எழுத்தாளரான‌ கோவிந்த் பன்சாரே இறப்பு நாள். (பிறப்பு-1933)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleFebruary 19 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 19
Next articleFebruary 21 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil February 21