December 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 12

0

Today Special Historical Events In Tamil | 12-12 | December 12

December 12 Today Special | December 12 What Happened Today In History. December 12 Today Whose Birthday (born) | December-12th Important Famous Deaths In History On This Day 12/12 | Today Events In History December 12th | Today Important Incident In History | மார்கழி 12 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 12-12 | மார்கழி மாதம் 12ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 12.12 Varalatril Indru Nadanthathu Enna| December 12 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 12/12 | Famous People Born Today 12.12 | Famous People died Today 12-12.

Today Special in Tamil 12-12
Today Events in Tamil 12-12
Famous People Born Today 12-12
Famous People died Today 12-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 12-12 | December 12

விடுதலை நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (கென்யா, பிரித்தானியாவிடம் இருந்து 1963)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 12-12 | December 12

627ல் பைசாந்திய இராணுவம் எராகிளியசு தலைமையில் நினேவா சமரில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன.
884ல் மேற்கு பிரான்சிய மன்னர் இரண்டாம் கார்லமோன் வேட்டையாடும் போது நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தார்.
1098ல் முதலாம் சிலுவைப் போர்: சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை திருத்தந்தை இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.
1787ல் பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமாக இணைந்தது.
1812ல் உருசியாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.
1815ல் பிரித்தானியப் படைகள் கண்டியை அடைந்தன.
1817ல் நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.
1862ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.
1866ல் இங்கிலாந்தில் ஓக்சு என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க விபத்தில் 361 சுரங்கத் தொழிலாளர்கள், மற்றும் மீட்புப் பணியாளர்கள் இறந்தனர்.
1871ல் யாழ்ப்பாணத்தில் முழுமையான கதிரவ மறைப்பு அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.
1901ல் அத்திலாந்திக் பெருங்கடலூடாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் செயின்ட் ஜான்சு வரையான முதலாவது வானொலி சமிக்கையை (மோர்சு தந்திக்குறிப்பில் “S” [***] எழுத்து) மார்க்கோனி பெற்றார்.
1911ல் இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது.
1911ல் ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடினார்.
1923ல் இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் உயிரிழந்தனர்.
1925ல் ரேசா கான் ஈரானின் புதிய மன்னராக (ஷா) முடிசூடினார். ஈரானில் பகலவி வம்சம் ஆரம்பமானது.
1936ல் சீனக் குடியரசின் படைத்துறைத் தலைவர் சங் கை செக் கடத்தப்பட்டார்.
1937ல் இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சப்பானியப் போர் விமானம் அமெரிக்காவின் பனாய் பீரங்கிப் படகை சீனாவில் யாங்சி ஆற்றில் மூழ்கடித்தது.
1939ல் இசுக்காட்லாந்தில் இரண்டு கப்பல்கள் மோதியதில் 124 பேர் உயிரிழந்தனர்.
1939ல் பனிக்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.
1940ல் இரண்டாம் உலகப் போர்: இங்கிலாந்தின் செபீல்டு நகரில் உணவுவிடுதி ஒன்றின் மீது ஜேர்மனிய விமானக்கள் குண்டு வீசியதில் 70 பேர் கொல்லப்பட்டனர்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், [ஆங்கேரி]], [ஔருமேனியா]] ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, சப்பான் மீதும் போரை அறிவித்தன.
1941ல் யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை இட்லர் அறிவித்தார்.
1942ல் நியூபின்லாந்தில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 100 பேர் உயிரிழந்தனர்.
1948ல் மலாயா அவசரகாலம்: பத்தாங்காலி படுகொலைகள்: மலாயாவில் நிலை கொண்டிருந்த இசுக்கொட்லாந்து படையினர் 14 பேர் பத்தாங்காலி என்ற கிராமத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.
1956ல் யப்பான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.
1963ல் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.
1979ல் சிம்பாப்வே-ரொடீசியா தெற்கு ரொடீசியா என்ற பெயரில் பிரித்தானியாவின் ஆதிக்கத்தில் மீண்டும் வந்தது.
1979ல் கொலம்பியா, எக்குவடோர் நாடுகளில் இடம்பெற்ற 8.2 Mw அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 300–600 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1984ல் மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்’அகமது டாயா புதிய அரசுத்தலைவரானார்.
1985ல் கனடாவின் நியூபின்லாந்தில் ஐக்கிய அமெரிக்காவின் 248 இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற டக்ளஸ் டிசி-8 விமானம் விபத்துக்குள்ளாகியதில் அமெரிக்க இராணுவத்தினர் 236 பேர் உட்பட அதில் பயணஞ்செய்த அனைத்து 256 பேரும் கொல்லப்பட்டனர்.
1988ல் இலண்டனில் இரண்டு தொடருந்துகள் மோதியதில் 35 பேர் உயிரிழந்து 100 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
1991ல் உருசியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1997ல் களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
2012ல் வட கொரியா முதலாவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 12-12 | December 12

1621ல் டச்சு இராணுவத் தளபதியான‌ ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் பிறந்த நாள். (இறப்பு-1656)
1803ல் ஆங்கிலேய வானியலாளரான‌ ஜேம்ஸ் சால்லிஸ் பிறந்த நாள். (இறப்பு-1882)
1863ல் நோர்வே ஓவியரான‌ எட்வர்ட் மண்ச் பிறந்த நாள். (இறப்பு-1944)
1915ல் அமெரிக்கப் பாடகரும் நடிகருமான‌ பிராங்க் சினாட்ரா பிறந்த நாள். (இறப்பு-1998)
1922ல் இந்தியப் பொருளாதார நிபுணரான‌ ராஜா செல்லையா பிறந்த நாள். (இறப்பு-2009)
1927ல் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும் இன்டெல் நிறுவனத்தை ஆரம்பித்தவருமான‌ ராபர்ட் நாய்சு பிறந்த நாள். (இறப்பு-1990)
1928ல் கிர்கித்தான் எழுத்தாளரான‌ சிங்கிஸ் ஐத்மாத்தவ் பிறந்த நாள். (இறப்பு-2008)
1931ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ சௌகார் ஜானகி பிறந்த நாள்.
1932ல் தமிழகத் திரைப்பட பாடலாசிரியரும் தயாரிப்பாளருமான‌ ஆலங்குடி சோமு பிறந்த நாள். (இறப்பு-1990)
1940ல் இந்திய அரசியல்வாதியான‌ சரத் பவார் பிறந்த நாள்.
1941ல் மலையாளத் திரைப்பட நடிகரான‌ ராகவன் பிறந்த நாள்.
1949ல் இந்திய அரசியல்வாதியான‌ கோபிநாத் முண்டே பிறந்த நாள். (இறப்பு-2014)
1949ல் ஆங்கிலேய நடிகரான‌ பில் நை பிறந்த நாள்.
1950ல் தென்னிந்திய நடிகரும் தயாரிப்பாளருமான‌ ரஜினிகாந்த் பிறந்த நாள்.
1950ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ எரிக் மாஸ்க்கின் பிறந்த நாள்.
1962ல் அமெரிக்க தென்னிசு ஆட்ட வீரரான‌ டிரேசி ஆஸ்டின் பிறந்த நாள்.
1969ல் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளரான‌ சுப்பிரமணியம் சுகிர்தராஜன் பிறந்த நாள். (இறப்பு-2006)
1970ல் அமெரிக்க நடிகையான‌ ஜெனிஃபர் கானலி பிறந்த நாள்.
1970ல் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான‌ சேரன் (திரைப்பட இயக்குநர்) பிறந்த நாள்.
1981ல் இந்தியத் துடுப்பாட்ட வீரரான‌ யுவராஜ் சிங் பிறந்த நாள்.
1981ல் தமிழகத் திரைப்பட நடிகரான‌ அசோக் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 12-12 | December 12

1843ல் நெதர்லாந்தின் முதலாம் வில்லியம் இறப்பு நாள். (பிறப்பு-1772)
1921ல் அமெரிக்க வானியலாளரான‌ என்றியேட்டா லீவிட் இறப்பு நாள். (பிறப்பு-1868)
1939ல் அமெரிக்க நடிகரான‌ டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் இறப்பு நாள். (பிறப்பு-1883)
1940ல் நாடக நடிகரும் தேசியவாதியுமான‌ தியாகி விஸ்வநாததாஸ் இறப்பு நாள். (பிறப்பு-1886)
1964ல் இந்தியக் கவிஞரும் விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமான‌ மைதிலி சரண் குப்த் இறப்பு நாள். (பிறப்பு-1866)
1995ல் இந்தியத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான‌ ஆர். ராமநாதன் செட்டியார் இறப்பு நாள். (பிறப்பு-1913)
2004ல் யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடரான‌ ஜேம்ஸ் ராம்ஸ்போதம் இறப்பு நாள். (பிறப்பு-1915)
2006ல் ஈழப்போராட்ட இயக்கங்களில் ஒன்றான ஈரோசு என்ற அமைப்பை ஆரம்பித்தவரான‌ இ.இரத்தினசபாபதி இறப்பு நாள். (பிறப்பு-1938)
2012ல் உத்தராகண்ட மாநிலத்தின் 1-வது முதலமைச்சரான‌ நித்தியானந்த சுவாமி இறப்பு நாள். (பிறப்பு-1927)
2013ல் வங்காளதேச அரசியல்வாதியான‌ அப்துல் காதிர் முல்லா இறப்பு நாள். (பிறப்பு-1948)
2016ல் கயானா-அமெரிக்கப் புதின எழுத்தாளரான‌ ஈ. ஆர். பிரைத்வெயிட் இறப்பு நாள். (பிறப்பு-1912)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

Previous articleபருப்பை ஊறவைக்காமல் சமைக்க கூடாது! ஏன்னு தெரியுமா?
Next articleDecember 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 13