December 11 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 11

0

Today Special Historical Events In Tamil | 11-12 | December 11

December 11 Today Special | December 11 What Happened Today In History. December 11 Today Whose Birthday (born) | December-11th Important Famous Deaths In History On This Day 11/12 | Today Events In History December 11th | Today Important Incident In History | மார்கழி 11 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 11-12 | மார்கழி மாதம் 11ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 11.12 Varalatril Indru Nadanthathu Enna| December 11 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 11/12 | Famous People Born Today 11.12 | Famous People died Today 11-12.

Today Special in Tamil 11-12
Today Events in Tamil 11-12
Famous People Born Today 11-12
Famous People died Today 11-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 11-12 | December 11

பன்னாட்டு மலை நாளாக கொண்டாடப்படுகிறது.
குடியரசு நாளாக கொண்டாடப்படுகிறது. (புர்க்கினா பாசோ, 1958)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 11-12 | December 11

361ல் யூலியன் உரோமையின் தனிப்பெரும் பேரரசராக கான்ஸ்டண்டினோபில் நகர் வந்தார்.
630ல் 10,000 போர்வீரர்களுடன் முகம்மது நபி மக்கா நோக்கிச் சென்றார்.
861ல் அப்பாசியாவின் கலீபா அல்-முத்தவாக்கி துருக்கியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார்.
969ல் பைசாந்தியப் பேரரசர் இரண்டாம் நிக்கபோரசு அவரது மனைவி தியோபானோவினாலும், அவளது காதலனாலும் (பின்னாள் பேரரசர் முதலாம் ஜான்) படுகொலை செய்யப்பட்டார்.
1282ல் வேல்சின் கடைசிப் பழங்குடி இளவரசர் கடைசி லெவெலின் கொல்லப்பட்டார்.
1688ல் மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு, பிரான்சுக்குத் தப்பியோட முயன்ற போது, இங்கிலாந்துப் பேரரசின் இலச்சினையை தேம்சு ஆற்றில் எறிந்து விட்டுச் சென்றார்.
1789ல் ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.
1792ல் பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
1816ல் இந்தியானா அமெரிக்காவின் 19வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
1868ல் பிரேசில் இராணுவம் ஏவாய் சமரில் பரகுவை இராணுவத்தைத் தோற்கடித்தது.
1905ல் உக்ரைன் கீவ் (அன்றைய உருசியப் பேரரசின் ஒரு பகுதி) நகரில் தொழிலாளர்களின் கிளர்ச்சி ஆரம்பமானது. சூலியாவ்க்கா குடியரசு உருவானது.
1907ல் நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் முற்றாகத் தீக்கிரையானது.
1917ல் முதலாம் உலகப் போர்: பிரித்தானியத் தளபதி எட்மண்ட் அலென்பி எருசலேம் நகரை நடந்து சென்றடைந்து அங்கு இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
1925ல் கத்தோலிக்க திருச்சபை கிறிஸ்து அரசர் பெருவிழாவை அறிமுகப்படுத்தியது.
1927ல் கம்யூனிச செம்படையினர் சீனாவின் குவாங்சௌவில் கிளர்ச்சியை ஏற்படுத்தி, நகரின் பெரும் பகுதியைக் கைப்பற்றி குவாங்சௌ சோவியத்தை அறிவித்தார்கள்.
1931ல் ஆத்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய மேலாட்சி அரசுகளுக்குத் தமது முழுமையான அரசியலமைப்புகளைப் பேணும் சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1936ல் ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் எட்டாம் எட்வர்டு முடிதுறந்தார்.
1937ல் இரண்டாம் இத்தாலிய-எத்தியோப்பியப் போர்: இத்தாலி உலக நாடுகள் சங்கத்தில் இருந்து வெளியேறியது.
1937ல் எஸ்தோனியாத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் ஸ்டாலின் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கா சப்பானியப் பேரரசு மீது போரை அறிவித்ததை அடுத்து, செருமனி, இத்தாலி ஆகியன அமெரிக்கா மீது போரை அறிவித்தன.
1941ல் இரண்டாம் உலகப் போர்: போலந்து சப்பானியப் பேரரசு மீது போரை அறிவித்தது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படை வேக் தீவு சமரில் முதலாவது தோல்வியைச் சந்தித்தது.
1946ல் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைக்கப்பட்டது.
1958ல் மேல் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1962ல் கனடாவில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றபட்டது.
1964ல் சே குவேரா ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.
1972ல் அப்பல்லோ 17 நிலாவில் இறங்கியது. இதுவே நிலாவில் இறங்கிய ஆறாவதும், கடைசியுமான அப்பல்லோ திட்டம் ஆகும்.
1981ல் எல் சல்வடோரில் இராணுவத்தினர் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.
1990ல் அல்பேனியாவில் மாணவர்கள், தொழிலாளர்களின் போராட்டங்கள் ஆரம்பமானது. இதுவே காலப்போக்கில் அல்பேனியாவில் பொதுவுடைமை வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது.
1993ல் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் உயர்மாடிக் கட்டடம் ஒன்று வீழ்ந்ததில் 48 பேர் உயிரிழந்தனர்.
1994ல் டோக்கியோ நோக்கிச் சென்ற பிலிப்பீனிய விமானம் ஒன்றில் குண்டு ஒன்று வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
1994ல் உருசியப் படைகள் செச்சினியாவில் ஊடுருவ உருசிய அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் ஆணையிட்டார்.
1998ல் தாய்லாந்தைச் சேர்ந்த விமானம் வீழ்ந்ததில் 101 பேர் உயிரிழந்தனர்.
2001ல் சீனா உலக வணிக அமைப்பில் இணைந்தது.
2005ல் ஆத்திரேலியா, சிட்னியில் குரொனல்லா என்ற இடத்தில் வெள்ளை இன ஆத்திரேலியர்களுக்கும் லெபனானிய ஆத்திரேலியர்களுக்கும் இடையே கலவரம் மூண்டது.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 11-12 | December 11

1781ல் இசுக்கொட்டிய இயற்பியலாளரும் கணிதவியலாளரும் வானியலாளருமான‌ டேவிட் புரூஸ்டர் பிறந்த நாள். (இறப்பு-1868)
1789ல் அமெரிக்க மதப்பரப்புனரான‌ மிரோன் வின்சுலோ பிறந்த நாள். (இறப்பு-1864)
1803ல் பிரான்சிய புனைவிய இசையமைப்பாளரான‌ ஹெக்டர் பேர்லியோஸ் பிறந்த நாள். (இறப்பு-1869)
1843ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய மருத்துவரான‌ ராபர்ட் கோக் பிறந்த நாள். (இறப்பு-1910)
1863ல் அமெரிக்க வானியலாளரான‌ ஆன்னி ஜம்ப் கெனான் பிறந்த நாள். (இறப்பு-1941)
1882ல் தமிழகக் கவிஞரும் ஊடகவியலாளருமான‌ சுப்பிரமணிய பாரதி பிறந்த நாள். (இறப்பு-1921)
1882ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளரான‌ மாக்ஸ் போர்ன் பிறந்த நாள். (இறப்பு-1970)
1890ல் அமெரிக்க-சுவிசு ஓவியரான‌ மார்க் டோபே பிறந்த நாள். (இறப்பு-1976)
1911ல் நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளரான‌ நகிப் மஹ்ஃபூஸ் பிறந்த நாள். (இறப்பு-2006)
1918ல் நோபல் பரிசு பெற்ற உருசிய எழுத்தாளரான‌ அலெக்சாண்டர் சோல்செனிட்சின் பிறந்த நாள். (இறப்பு-2008)
1922ல் பாக்கித்தானிய-இந்திய நடிகரான‌ திலிப் குமார் பிறந்த நாள்.
1931ல் இந்திய மெய்யியலாளரான‌ ஓஷோ பிறந்த நாள். (இறப்பு-1990)
1935ல் 13வது இந்தியக் குடியரசுத் தலைவரான‌ பிரணப் முகர்ஜி பிறந்த நாள். (இறப்பு-2020)
1937ல் தமிழக வயலின் மற்றும் வாய்ப்பாட்டுக் கலைஞரான‌ எம். சந்திரசேகரன் பிறந்த நாள்.
1943ல் அமெரிக்க அரசியல்வாதியான‌ ஜான் கெர்ரி பிறந்த நாள்.
1949ல் தென்னிந்திய சாக்சபோன் இசைக் கலைஞரான‌ கத்ரி கோபால்நாத் பிறந்த நாள். (இறப்பு-2019)
1951ல் மலேசிய வானியலாளரான‌ மழிலான் ஆத்மன் பிறந்த நாள்.
1951ல் ஆங்கிலேய மொழியியலாளரான‌ பீட்டர் டி. டேனியல்ஸ் பிறந்த நாள்.
1954ல் நேபாளப் பிரதமரான‌ பிரசந்தா பிறந்த நாள்.
1958ல் தமிழக நடிகரான‌ ரகுவரன் பிறந்த நாள். (இறப்பு-2008)
1966ல் இத்தாலிய நாடக மற்றும் திரைப்பட நடிகரான‌ பெனடிக்டா பொக்கொலி பிறந்த நாள்.
1969ல் இந்திய சதுரங்க வீரரான‌ விசுவநாதன் ஆனந்த் பிறந்த நாள்.
1969ல் அமெரிக்க நடிகரும் இயக்குநருமான‌ மாக்ஸ் மார்டினி பிறந்த நாள்.
1980ல் தமிழ்த் திரைப்பட நடிகரான‌ ஆர்யா பிறந்த நாள்.
1987ல் செருமனியக் கணிதவியலாளரான பீட்டர் ஷோல்ஸ் பிறந்த நாள்.
1996ல் அமெரிக்க நடிகையான‌ ஹைலி ஸ்டெயின்பீல்ட் பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 11-12 | December 11

384ல் திருத்தந்தையான‌ முதலாம் தாமசுஸ் இறப்பு நாள். (பிறப்பு-305)
1241ல் மங்கோலியப் பேரரசரான‌ ஒகோடி கான் இறப்பு நாள். (பிறப்பு-1186)
1784ல் பின்னிய-சுவீடிய வானியலாளரும் கணிதவியலாளரும் இயற்பியலாளருமான‌ ஆண்டர்சு இலெக்செல் இறப்பு நாள். (பிறப்பு-1740)
1937ல் எசுத்தோனிய அரசியல்வாதியான‌ ஜான் ஆன்வெல்ட் இறப்பு நாள். (பிறப்பு-1884)
1945ல் பிரான்சிய இயற்பியலாளரான‌ சார்லசு பாப்ரி இறப்பு நாள். (பிறப்பு-1867)
1977ல் இலங்கைத் தமிழ்க் கல்விமானும் சமூக சேவையாளரும் அரசியல்வாதியுமான‌ ஹன்டி பேரின்பநாயகம் இறப்பு நாள். (பிறப்பு-1899)
2002ல் இந்திய அரசியல்சட்ட நிபுணரும் பொருளியல் அறிஞருமான‌ நானி பல்கிவாலா இறப்பு நாள். (பிறப்பு-1920)
2004ல் கருநாடக இசைப் பாடகியான‌ எம். எஸ். சுப்புலட்சுமி இறப்பு நாள். (பிறப்பு-1916)
2011ல் இந்திய-கோவா ஓவியரான‌ மரியோ மிராண்டா இறப்பு நாள். (பிறப்பு-1926)
2012ல் இந்திய சித்தார் இசைக்கலைஞரான‌ ரவி சங்கர் இறப்பு நாள். (பிறப்பு-1920)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 10 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 10
Next articleஅக்டோபர் 26 வரை புதனின் தாக்கம் இருக்கும் ராசிக்காரர்கள் யார்?