December 13 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 13

0

Today Special Historical Events In Tamil | 13-12 | December 13

December 13 Today Special | December 13 What Happened Today In History. December 13 Today Whose Birthday (born) | December-13th Important Famous Deaths In History On This Day 13/12 | Today Events In History December 13th | Today Important Incident In History | மார்கழி 13 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 13-12 | மார்கழி மாதம் 13ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 13.12 Varalatril Indru Nadanthathu Enna| December 13 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 13/12 | Famous People Born Today 13.12 | Famous People died Today 13-12.

Today Special in Tamil 13-12
Today Events in Tamil 13-12
Famous People Born Today 13-12
Famous People died Today 13-12

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 13-12 | December 13

குடியரசு நாளாக‌ கொண்டாடப்படுகிறது. (மோல்ட்டா, 1974)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 13-12 | December 13

1294ல் ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியில் இருந்து விலகினார். இவர் ஐந்து மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்தார்.
1577ல் சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.
1636ல் வட அமெரிக்காவில் மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றம் பெக்கோட் பழங்குடியினரில் இருந்து பாதுகாக்கவென மூன்று துணைப்படைகளை அமைத்தது.
1642ல் டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். இவரே நியூசிலாந்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.
1758ல் வில்லியம் கோமகன் என்ற ஆங்கிலேயக் கப்பல் வடக்கு அத்திலாந்திக் கடலில் மூழ்கியதில் 360 பேர் உயிரிழந்தனர்.
1867ல் இலண்டன், கிளெர்க்கென்வெல் என்ற இடத்தில் குண்டு ஒன்று வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
1888ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1937ல் இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீனாவின் நாஞ்சிங் நகரம் சப்பானிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
1938ல் பெரும் இன அழிப்பு: செருமனியின் ஆம்பர்கு நகரில் நியூவென்காம் வதை முகாம் திறக்கப்பட்டது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: கிரேக்கத்தில் கலவ்ரித்தா என்ற இடத்தில் செருமனியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 1,200 கிரேக்கப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 710 போர் விமானங்கள் செருமனியின் கீல் நகர் மீது தாக்குதலை நடத்தின.
1949ல் இசுரேலின் சட்டமன்றம் நாட்டின் தலைநகரை எருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.
1959ல் பேராயர் மூன்றாம் மக்காரியோசு சைப்பிரசின் முதலாவது அரசுத்தலைவரானார்.
1960ல் எத்தியோப்பியாவின் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி பிரேசிலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, அவரது மெய்ப்பாதுகாவலர்கள் தலைநகரைக் கைப்பற்றி இளவரசர் அசுபா வோசனைப் பேரரசராக அறிவித்தனர். ஆனாலும் இந்த இராணுவப் புரட்சி தோல்வியடைந்தது.
1972ல் அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், அரிசன் சிமித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.
1974ல் மால்ட்டா நாடுகளின் பொதுநலவாயத்தின் கீழ் குடியரசானது.
1977ல் அமெரிக்காவின் ஏர் இந்தியானா விமானம் வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.
1981ல் போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1982ல் தென்மேற்கு ஏமனை 6.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 2,800 பேர் உயிரிழந்தனர், 1,500 பேர் காயமடைந்தனர்.
1988ல் பலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார்.
1996ல் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.
2001ல் இந்திய நாடாளுமன்றக் கட்டடம் சன்சத் பவன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
2003ல் ஈராக் போர்: முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
2004ல் முன்னாள் சிலி சர்வாதிகாரி அகஸ்தோ பினோசெட் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
2006ல் ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
2011ல் பெல்ஜியத்தில் நத்தார்ச் சந்தை ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 125 பேர் காயமடைந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 13-12 | December 13

1780ல் செருமானிய வேதியியலாளரான‌ ஜோகன் தோபரீனர் பிறந்த நாள். (இறப்பு-1849)
1805ல் இசுக்காட்டிய-செருமானிய வானியலாளரும் இயற்பியலாளருமான‌ யோகான் வான் இலாமாண்ட் பிறந்த நாள். (இறப்பு-1879)
1816ல் செருமானிய பொறியியலாலரும் தொழிலதிபருமான‌ வெர்னர் வொன் சீமன்சு பிறந்த நாள். (இறப்பு-1892)
1903ல் அமெரிக்க செயற்பாட்டாளரான‌ எல்லா பேக்கர் பிறந்த நாள். (இறப்பு-1986)
1904ல் ஆங்கிலேய வானியலாளரும் கணிதவியலாளருமான‌ வில்லியம் அண்டர் மெக்கிரியா பிறந்த நாள். (இறப்பு-1999)
1908ல் பிரித்தானிய அறிவியலாளரான‌ எலிசபெத் அலெக்சாந்தர் பிறந்த நாள். (இறப்பு-1958)
1926ல் தொழிற்சங்கத் தலைவரான‌ செ. குப்புசாமி பிறந்த நாள். (இறப்பு-2013
1928ல் ஈழத்துப் பன்முகத் தமிழறிஞரான‌ ஈழத்துப் பூராடனார் பிறந்த நாள். (இறப்பு-2010)
1944ல் ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் நடிகருமான‌ வ. ஐ. ச. ஜெயபாலன் பிறந்த நாள்.
1952ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகையான‌ லட்சுமி பிறந்த நாள்.
1954ல் இந்திய மருத்துவரும் அரசியல்வாதியான‌ ஹர்ஷ் வர்தன் பிறந்த நாள்.
1955ல் இந்திய அரசியல்வாதியான‌ மனோகர் பாரிக்கர் பிறந்த நாள்.
1960ல் தெலுங்குத் திரைப்பட நடிகரான‌ வெங்கடேஷ் பிறந்த நாள்.
1963ல் தமிழக அரசியல்வாதிரான‌ டி. டி. வி. தினகரன் பிறந்த நாள்.
1981ல் அமெரிக்கப் பாடகரான‌ ஏமி லீ பிறந்த நாள்.
1989ல் அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான‌ டேலர் ஸ்விஃப்ட் பிறந்த நாள்.
1990ல் தென்னிந்திய நடிகையான‌ ரெஜினா கஸ்ஸாண்ட்ரா பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 13-12 | December 13

1048ல் பாரசீகக் கணிதவியலாளரும் பாரசீகக் கணிதவியலாளருமான‌ அல்-பிருனி இறப்பு நாள். (பிறப்பு-973)
1557ல் இத்தாலியக் கணிதவியலாளரான‌ டார்ட்டாக்ளியா இறப்பு நாள். (பிறப்பு-1499)
1784ல் ஆங்கிலேயக் கவிஞரான‌ சாமுவேல் ஜோன்சன் இறப்பு நாள். (பிறப்பு-1709)
1849ல் செருமானிய தாவரவியலாளரான‌ ஒப்மான்செக் இறப்பு நாள். (பிறப்பு-1766)
1935ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய வேதியியலாளரான விக்டர் கிரின்யார்டு இறப்பு நாள். (பிறப்பு-1871)
1944ல் உருசிய-பிரான்சிய ஓவியரான வசீலி கண்டீன்ஸ்கி இறப்பு நாள். (பிறப்பு-1866)
1961ல் அமெரிக்க ஓவியரான‌ அன்னா மேரி ராபர்ட்சன் மோசஸ் இறப்பு நாள். (பிறப்பு-1860)
1984ல் இலங்கைத் தமிழ் மனித உரிமை ஆர்வலரான‌ ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் இறப்பு நாள்.
1986ல் அமெரிக்க செயற்பாட்டாளரான‌ எல்லா பேக்கர் இறப்பு நாள். (பிறப்பு-1903)
1987ல் தமிழக எழுத்தாளரும் இதழாசிரியருமான‌ நா. பார்த்தசாரதி இறப்பு நாள். (பிறப்பு-1932)
2009ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ பவுல் சாமுவேல்சன் இறப்பு நாள். (பிறப்பு-1915)
2010ல் ஈழத்து எழுத்தாளரான‌ திமிலை மகாலிங்கம் இறப்பு நாள். (பிறப்பு-1938)
2010ல் அமெரிக்க ஊடகவியலாளரான ரிச்சர்ட் ஆல்புரூக் இறப்பு நாள். (பிறப்பு-1941)
2010ல் எசுப்பானிய பாடகரான‌ என்ரீக்கே மொறேந்தே இறப்பு நாள். (பிறப்பு-1942)
2012ல் தமிழகத் திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான‌ கர்ணன் இறப்பு நாள்.
2015ல் ஈழத்து எழுத்தாளரான‌ அருண் விஜயராணி இறப்பு நாள். (பிறப்பு-1954)
2016ல் ஈழத்து எழுத்தாளரும் நாடகாசிரியரும் வரலாற்றாய்வாளருமான‌ வே. சுப்பிரமணியம் இறப்பு நாள்.

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleDecember 12 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 12
Next articleDecember 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil December 14