Today Special Historical Events In Tamil | 02-12 | December 02
December 02 Today Special | December 02 What Happened Today In History. December 02 Today Whose Birthday (born) | December-2nd Important Famous Deaths In History On This Day 02/12 | Today Events In History December 02nd | Today Important Incident In History | மார்கழி 02 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 02-12 | மார்கழி மாதம் 02ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 02.12 Varalatril Indru Nadanthathu Enna| December 02 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 02/12 | Famous People Born Today 02.12 | Famous People died Today 02-12.
Today Special in Tamil 02-12
Today Events in Tamil 02-12
Famous People Born Today 02-12
Famous People died Today 02-12
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 02-12 | December 02
பன்னாட்டு அடிமை முறை ஒழிப்பு நாளாக கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய அமீரகத் தேசிய நாளாக கொண்டாடப்படுகிறது.
தேசிய நாளாக கொண்டாடப்படுகிறது. (லாவோஸ்)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 02-12 | December 02
1409ல் லீப்சிக் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1697ல் இலண்டனில் புனித பவுல் பேராலயம் திறக்கப்பட்டது.
1804ல் நோட்ரே டேம் டி பாரிசில் நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் பேரரசனாகத் தனக்குத்தானே முடிசூடினான்.
1805ல் நெப்போலியனின் தலைமையில் பிரான்சியப் படையினர் ஓஸ்டர்லிட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் உருசிய-ஆத்திரியக் கூட்டுப் படைகளைத் தோற்கடித்தனர்.
1823ல் அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் மன்ரோ ஐரோப்பிய சர்ச்சைகளில் அமெரிக்கா நடுநிலைமை வகிக்கும் என அறிவித்தார், அதேவேளையில் ஐரோப்பிய அரசுகள் அமெரிக்காக்களில் தலையிடக்கூடாது எனவும் எச்சரித்தார்.
1843ல் யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த அழிவுகள் ஏற்பட்டன.
1848ல் முதலாம் பிரான்சு யோசப்பு ஆத்திரியாவின் பேரரசராக முடிசூடினார்.
1851ல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரெஞ்சு அரசுத்தலைவர் லூயி-நெப்போலியன் பொனபார்ட் பிரான்சின் இரண்டாம் குடியரசைக் கலைத்தார்.
1852ல் மூன்றாம் நெப்போலியன் பிரான்சின் பேரரசராக முடிசூடினார்.
1859ல் அடிமை ஒழிப்பு செயற்பாட்டாளரும் போராளியுமான ஜான் பிரவுன் மேற்கு வர்ஜீனியாவில் அக்டோபர் 16 இல் நடத்திய முற்றுகைக்காக தூக்கிலிடப்பட்டார்.
1908ல் பூயி தனது இரண்டாவது அகவையில் சீனாவின் பேரரசனாக முடிசூடினான்.
1942ல் மன்காட்டன் திட்டம்: என்ரிக்கோ பெர்மி தலைமையிலான குழு செயற்கையாகத் தானே தொடருமாறு நிகழும் அணுக்கரு தொடர்வினையை ஆரம்பித்தது.
1943ல் இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் பாரி துறைமுகத்தில் இடம்பெற்ற வான்தாக்குதலில் அமெரிக்கக் கப்பல் ஒன்று உட்படப் பல கப்பல்கள் மூழ்கின.
1946ல் பிரித்தானிய அரசாங்கம் நேரு, பால்தேவ் சிங், ஜின்னா, லியாகத் அலி கான் ஆகிய தலைவர்களை இந்தியாவின் சட்ட சபையைப் பிரதிநிதித்துவப்படுத்த அழைத்தது.
1947ல் பாலத்தீனத்தை இரண்டாகப் பிரிக்க ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து எருசலேமில் கலவரம் மூண்டது.
1950ல் கொரியப் போர்: வட கொரியாவிலிருந்து ஐநா படையினர் முற்றாக விலக்கப்பட்டனர்.
1954ல் சீனக் குடியரசுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு உடன்பாடு வாசிங்டனில் கையெழுத்திடப்பட்டது.
1956ல் பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா மற்றும் ஆதரவாளர்களும் கியூபா புரட்சியை முன்னெடுப்பதற்காக கிரான்மா என்ற படகில் கியூபாவை சென்றடைந்தனர்.
1961ல் பிடெல் காஸ்ட்ரோ தன்னை ஒரு மார்க்சிச-லெனினிசவாதி எனவும் கியூபா கம்யூனிச நாடாக இருக்கும் எனவும் அறிவித்தார்.
1970ல் ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் ஆரம்பமானது.
1971ல் சோவியத்தின் செவ்வாயை நோக்கி ஏவப்பட்ட மார்ஸ் 2 விண்கலம் தரையிறங்கி ஒன்றை அங்கு இறக்கியது. இது வெற்றிகரமாகத் தரையிறங்கினாலும், தொடர்புகளை இழந்தது. செவ்வாயில் மெதுவாகத் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1971ல் அபுதாபி, அஜ்மான், புஜைரா, சார்ஜா, துபாய், உம் அல்-குவைன் ஆகிய நாடுகள் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் இணைந்தன.
1975ல் பத்தே லாவோ என்பவர் லாவோசின் தலைநகர் வியஞ்சானைக் கைப்பற்றி, லாவோ மக்கள் சனநாயகக் குடியரசை அமைத்தார்.
1976ல் பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1980ல் எல் சல்வடோரில் நான்கு அமெரிக்கக் மதப்பரப்புனர்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
1982ல் யூட்டா பல்கலைக்கழகத்தில் உலகின் முதலாவது செயற்கை இதயம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது.
1984ல் ஒதியமலைப் படுகொலைகள்: முல்லைத்தீவு மாவட்டம், ஒதியமலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 32 தமிழ் மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1988ல் பெனசீர் பூட்டோ பாகித்தானின் முதல் பெண் பிரதமரானார்.
1989ல் மலேசிய – தாய்லாந்து அரசுகளுக்கும் மலாயக் கம்யூனிஸ்டுக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி ஒப்பந்தத்தை அடுத்து மலேசியக் கம்யூனிசக் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.
1990ல் ஒன்றுபட்ட செருமனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது பொதுத்தேர்தலில் எல்முத் கோல் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
1991ல் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற உக்ரைனை கனடாவும் போலந்தும் முதல் நாடுகளாக அங்கீகரித்தன.
1993ல் கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் தலைவன் பப்லோ எசுகோபர் மெதெயின் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.
1993ல் ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியைத் திருத்தும் நோக்கோடு நாசாவின் எண்டெவர் விண்ணோடம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1995ல் யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கை இராணுவத்திடம் வீழ்ச்சி அடைந்தது.
1999ல் பெல்பாஸ்ட் உடன்பாடு: ஐக்கிய இராச்சியம் வட அயர்லாந்தில் அரசியலதிகாரப் பகிர்வுக்கு ஒப்புக் கொண்டது.
2002ல் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஒஸ்லோவில் ஆரம்பமாயின.
2006ல் பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடமை ஆக்கப்பட்டன.
2006ல் பீகார் மாநிலத்தின் பகல்பூரில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் அதன் வழியாகச் சென்ற கடுகதித் தொடருந்து வண்டி விபத்துக்குள்ளாகியதில் 35 பேர் கொல்லப்பட்டனர்.
2016ல் கலிபோர்னியா, ஓக்லாந்தில் களஞ்சியச் சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 02-12 | December 02
1859ல் பிரான்சிய ஓவியரான யோர்ச் சோரா பிறந்த நாள். (இறப்பு-1891)
1880ல் வங்காள எழுத்தாளரும் கல்வியாளருமான க்ஷிதி மோகன் சென் பிறந்த நாள். (இறப்பு-1960)
1885ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவரான ஜார்ஜ் மினாட் பிறந்த நாள். (இறப்பு-1950)
1912ல் திரைப்படத் தயாரிப்பாளரும் பத்திரிகையாளருமான நாகிரெட்டி பிறந்த நாள். (இறப்பு-2004)
1930ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான கேரி பெக்கர் பிறந்த நாள். (இறப்பு-2014)
1933ல் திராவிடர் கழகத் தலைவரான கி. வீரமணி பிறந்த நாள்.
1937ல் மகாராட்டிராவின் 15வது முதலமைச்சரான மனோகர் ஜோஷி பிறந்த நாள்.
1946ல் ஆங்கிலேய-அமெரிக்க எழுத்தாளரான டேவிட் மெக்காலே பிறந்த நாள்.
1960ல் தென்னிந்திய நடிகையான சில்க் ஸ்மிதா பிறந்த நாள். (இறப்பு-1996)
1963ல் இந்திய-அமெரிக்க கணினி அறிவியலாளரும் தொழிலதிபருமான சிவா ஐயாதுரை பிறந்த நாள்.
1963ல் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியுமான நெப்போலியன் பிறந்த நாள்.
1973ல் செர்பிய-அமெரிக்க டென்னிசு வீராங்கனையான மோனிக்கா செலசு பிறந்த நாள்.
1978ல் கனடியப் பாடகியும் நடிகையுமான நெல்லி ஃபர்ட்டடோ பிறந்த நாள்.
1981ல் அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான பிரிட்னி ஸ்பியர்ஸ் பிறந்த நாள்.
1982ல் தீக்குளித்து இறந்த ஈழத்தமிழனான முருகதாசன் பிறந்த நாள். (இறப்பு-2009)
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 02-12 | December 02
1547ல் எசுப்பானிய தேடலறிஞரான எர்னான் கோட்டெஸ் இறப்பு நாள். (பிறப்பு-1485)
1594ல் பிளெமிய கணிதவியலாளரும் நிலப்படவரைவாளருமான கிரார்துசு மெர்காதோர் இறப்பு நாள். (பிறப்பு-1512)
1881ல் செருமானிய எழுத்தாளரும் கார்ல் மார்க்சின் மனைவியுமான ஜென்னி வான் வெசுட்பலென் இறப்பு நாள். (பிறப்பு-1814)
1911ல் தமிழறிஞரான பாண்டித்துரைத் தேவரான இறப்பு நாள். (பிறப்பு-1867)
1933ல் நாடக நடிகரும் பாடகரான எஸ். ஜி. கிட்டப்பா இறப்பு நாள். (பிறப்பு-1906)
1971ல் இலங்கைத் தொழிற்சங்கவாதியும் மலையக அரசியல்வாதியுமான வீ. கே. வெள்ளையன் இறப்பு நாள். (பிறப்பு-1918)
1973ல் தமிழ்ப் புலவரும் தமிழாசிரியருமான வை. பொன்னம்பலம் இறப்பு நாள். (பிறப்பு-1904)
1985ல் ஆங்கிலேயக் கவிஞரும் நூலாசிரியருமான பிலிப் லர்கின் இறப்பு நாள். (பிறப்பு-1922)
1987ல் பெலருசிய இயற்பியலாளரும் வானியலாளருமான யாகோவ் போரிசோவிச் செல்டோவிச் இறப்பு நாள். (பிறப்பு-1914)
1993ல் கொலம்பியாவின் போதைக் கடத்தல் குழுத் தலைவரான பப்லோ எசுகோபர் இறப்பு நாள். (பிறப்பு-1949)
2002ல் ஆத்திரியப் போதகரும் மெய்யியலாளருமான ஐவன் ஈலிச் இறப்பு நாள். (பிறப்பு-1926)
2008ல் பன்மொழிப் புலவரான மு. கு. ஜகந்நாதராஜா இறப்பு நாள். (பிறப்பு-1933)
2014ல் மகாராட்டிராவின் 8வது முதலமைச்சரான ஏ. ஆர். அந்துலே இறப்பு நாள். (பிறப்பு-1929)
2015ல் இந்தியத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான எம். ஏ. எம். ராமசாமி இறப்பு நாள். (பிறப்பு-1931)
2016ல் தமிழக அரசியல்வாதியான கோ. சி. மணி இறப்பு நாள். (பிறப்பு-1929)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan