Today Special Historical Events In Tamil | 06-11 | November 06
November 06 Today Special | November 06 What Happened Today In History. November 06 Today Whose Birthday (born) | November-06th Important Famous Deaths In History On This Day 06/11 | Today Events In History November 06th | Today Important Incident In History | கார்த்திகை 06 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 06-11 | கார்த்திகை மாதம் 06ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 06.11 Varalatril Indru Nadanthathu Enna| November 06 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 06/11 | Famous People Born Today 06.11 | Famous People died Today 06-11.
Today Special in Tamil 06-11
Today Events in Tamil 06-11
Famous People Born Today 06-11
Famous People died Today 06-11
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 06-11 | November 06
ஒபாமா நாளாக கொண்டாடப்படுகிறது. (கென்யா)
மர நாளாக கொண்டாடப்படுகிறது. (கொங்கோ குடியரசு)
போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பதற்கான பன்னாட்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 06-11 | November 06
447ல் கான்ஸ்டண்டினோபில் நகரை நிலநடுக்கம் தாக்கியதில் 57 கோபுரங்கள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன.
963ல் திருத்தந்தை பன்னிரண்டாம் ஜான் புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோவுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
1528ல் எசுப்பானிய வெற்றியாளர் ஆல்வர் நூனெசு கபீசா டெ வாக்கா கப்பல் மூழ்கிய நிலையில் டெக்சசில் கால்பதித்த முதல் ஐரோப்பியர் என்ற பெயரைப் பெற்றார்.
1632ல் முப்பதாண்டுப் போரில் சுவீடன் பேரரசர் குசுடாவசு அடொல்பசு கொல்லப்பட்டார்.
1759ல் பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.
1789ல் அமெரிக்காவின் முதலாவது கத்தோலிக்க ஆயராக ஜான் கரோல் திருத்தந்தை ஆறாம் பயசினால் நியமிக்கப்பட்டார்.
1844ல் டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.
1860ல் ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அரசுத்தலைவர் ஆவார்.
1861ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்குத் தலைவரானார்.
1891ல் “சிலோன் ஸ்டீம்ஷிப்” நிறுவனத்துக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் “லேடி ஹவ்லொக்” முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது.
1913ல் தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.
1917ல் முதலாம் உலகப் போர்: மூன்று மாதங்கள் தொடர்ச்சியான சண்டையை அடுத்து, கனடியப் படைகள் பெல்ஜியத்தின் பாசன்டேல் நகரைக் கைப்பற்றின.
1917ல் அக்டோபர் புரட்சி: பெத்ரோகிராது நகரில் உருசியப் படைகளுக்கும் போல்செவிக்கினருக்கும் இடையில் சமர் இடம்பெற்றது.
1918ல் போலந்தில் இடைக்கால பக்கள் அரசு அமைக்கப்பட்டது.
1935ல் எட்வின் ஆர்ம்சுட்ராங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.
1941ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தனது முப்பதாண்டு கால பதவியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். செருமனியின் தாக்குதலில் 350,000 சோவியத் வீரர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், செருமனியர் தமது 4.5 மில்லியன் பேரை இழந்திருப்பதாகவும் சோவியத் வெற்றி கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத்தின் செஞ்சேனைப் படைகள் உக்ரைன் தலைநகர் கீவைக் கைப்பற்றின. செருமனியினர் நகரை விட்டு விலகும் போது நகரின் பல பகுதிகளை சேதமாக்கினர்.
1943ல் இந்தியாவின் வங்காளத்தில் “நவகாளி”யில் இடம்பெற்ற இந்து-முசுலிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.
1944ல் புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் சப்பான், நாகசாகியில் அணுகுண்டு போடுவதற்கு இது பயன்பட்டது.
1962ல் ஐநா பொதுச்சபை தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.
1963ல் வியட்நாம் போர்: நவம்பர் 1 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து, இராணுவத் தலைவர் டோங் வான் மின் தெற்கு வியட்நாமின் தலைவரானார்.
1965ல் ஐக்கிய அமெரிக்காவுக்கு குடியேற விரும்பிய கியூபா நாட்டினரை விமானம் மூலம் அங்கு கொண்டு செல்ல கியூபாவும் ஐக்கிய அமெரிக்காவும் உடன்பட்டன. இதன்படி 1971இற்குள் 250,000 கியூபர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
1971ல் அமெரிக்கா கன்னிக்கின் என்ற குறியீட்டுப் பெயருடைய நிலத்தடி ஐதரசன் குண்டை அலூசியன் தீவுகளில் சோதித்தது.
1977ல் ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
1985ல் கொலம்பியா, பொகோட்டா நகரில் இடதுசாரி தீவிரவாதிகள் நீதிக் கட்டிடத்தைக் கைப்பற்றி 11 நீதிபதிகள் உட்பட 115 பேரைக் கொன்றனர்.
1986ல் இசுக்காட்லாந்தில் பிரித்தானிய சி.எச்.-47 சினூக் உலங்குவானூர்தி சம்பரோ வானூர்தி நிலையத்துக்கு அருகில் வீழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.
1999ல் ஆத்திரேலியாவில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் தொடர்ந்திருக்க பெரும்பான்மையானோர் சம்மதம் தெரிவித்தனர்.
2004ல் இங்கிலாந்தில், விரைவுத் தொடருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் மோதியதில் ஏழு பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர்.
2013ல் தையுவான் நகரில் சீனப் பொதுவுடமைக் கட்சி அலுவலகத்தில் குண்டுகள் வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார், 8 பேர் காயமடைந்தனர்.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 06-11 | November 06
1494ல் உதுமானியப் பேரரசரான முதலாம் சுலைமான் பிறந்த நாள். (இறப்பு-1566)
1661ல் எசுப்பானியாவின் இரண்டாம் சார்லசு பிறந்த நாள். (இறப்பு-1700)
1814ல் சாக்சபோனைக் கண்டுபிடித்த பிரான்சியரான அடோல்ப் சக்ஸ் பிறந்த நாள். (இறப்பு-1894)
1861ல் கூடைப்பந்தாட்டத்தைக் கண்டுபிடித்த கனடிய-அமெரிக்கரான ஜேம்ஸ் நெய்ஸ்மித் பிறந்த நாள். (இறப்பு-1939)
1884ல் அமெரிக்க வானியலாளரான இலீகு பிரவுன் ஆலன் பிறந்த நாள். (இறப்பு-1973)
1886ல் அமெரிக்க வானியலாளரும் கணிதவியலாளருமான ஈதா பார்னி பிறந்த நாள். (இறப்பு-1982)
1926ல் புல்லாங்குழல் கலைஞரான டி. ஆர். மகாலிங்கம் பிறந்த நாள். (இறப்பு-1986)
1932ல் நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய இயற்பியலாளரான பிரான்சுவா எங்கிலேர் பிறந்த நாள்.
1937ல் இந்திய அரசியல்வாதியான யஷ்வந்த் சின்கா பிறந்த நாள்.
1940ல் கருநாடக இசைப் பாடகியும் திரைப்படப் பின்னனிப் பாடகியுமான சூலமங்கலம் ராஜலட்சுமி பிறந்த நாள். (இறப்பு-1992)
1950ல் இலங்கை அரசியல்வாதியான நிமலன் சௌந்தரநாயகம் பிறந்த நாள். (இறப்பு-2000)
1963ல் இந்தோனேசிய இயற்பியலாளரான யோகனேசு சூர்யா பிறந்த நாள்.
1968ல் தாய்வான் அமெரிக்கத் தொழிலதிபரான ஜெர்ரி யாங் பிறந்த நாள்.
1972ல் அமெரிக்க நடிகையான ரெபேக்கா ரோமெயின் பிறந்த நாள்.
1983ல் தமிழ்த் திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையான நீலிமா ராணி பிறந்த நாள்.
1987ல் செர்பிய டென்னிசு வீராங்கனையான ஆனா இவனோவிச் பிறந்த நாள்.
1988ல் அமெரிக்க நடிகையான எம்மா ஸ்டோன் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 06-11 | November 06
1406ல் திருத்தந்தையான ஏழாம் இன்னசெண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1339)
1632ல் சுவீடனின் மன்னராக பதவி வகித்தவரான கஸ்டாவஸ் அடால்பஸ் இறப்பு நாள். (பிறப்பு-1594)
1872ல் அமெரிக்கப் பொறியியலாளரும் அமெரிக்கத் தரைப்படை அதிகாரியுமான ஜார்ஜ் கார்டன் மீடு இறப்பு நாள். (பிறப்பு-1815)
1893ல் உருசிய இசையமைப்பாளரான பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி இறப்பு நாள். (பிறப்பு-1840)
1985ல் இந்திய நடிகரான சஞ்சீவ் குமார் இறப்பு நாள். (பிறப்பு-1938)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan