November 07 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 07

0

Today Special Historical Events In Tamil | 07-11 | November 01

November 07 Today Special | November 07 What Happened Today In History. November 07 Today Whose Birthday (born) | November-07th Important Famous Deaths In History On This Day 07/11 | Today Events In History November 07th | Today Important Incident In History | கார்த்திகை 07 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 07-11 | கார்த்திகை மாதம் 07ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 07.11 Varalatril Indru Nadanthathu Enna| November 07 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 07/11 | Famous People Born Today 07.11 | Famous People died Today 07-11.

Today Special in Tamil 07-11
Today Events in Tamil 07-11
Famous People Born Today 07-11
Famous People died Today 07-11

இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 07-11 | November 07

அக்டோபர் புரட்சி நாளாக கொண்டாடப்படுகிறது. (உருசியா (அதிகாரபூர்வமற்றது), பெலருஸ், கிர்கிசுத்தான்)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 07-11 | November 07

335ல் அலெக்சாந்திரியாவின் அத்தனாசியார் கான்ஸ்டண்டினோபில் நகருக்கு தானியங்களை எடுத்துச் செல்வதற்குத் தடையாக இருந்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டு நாடு கடத்தப்பட்டார்.
1492ல் உலகின் மிகப் பழமையான விண்வீழ்கல் என்சீசைம் பிரான்சில் கோதுமை வயல் ஒன்றில் வீழ்ந்தது.
1665ல் உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் முதலாவது இதழ் வெளியானது.
1775ல் வட அமெரிக்காவில் பிரித்தானியப் படைகளில் இணைந்த அடிமைகள் அனைவருக்கும் அவர்களது உரிமையாளர்களிடம் இருந்து முழுமையான விடுதலை பெற்றுக் கொடுக்கும் உடன்பாட்டில் வர்ஜீனியா குடியேற்றத்தின் பிரித்தானிய ஆளுநர் ஜான் மறே கையெழுத்திட்டார்.
1893ல் அமெரிக்காவில் கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1907ல் மெக்சிக்கோவில் யேசுசு கார்சியா என்பவர் டைனமைட்டு நிரப்பப்பட்ட எரியும் தொடருந்தை ஆறு கிமீ தூரம் தனிமையான இடத்துக்கு செலுத்தி வெடிக்க வைத்து நக்கோசாரி டி கார்சியா கிராமம் எரியாமல் காப்பாற்றினார்.
1910ல் உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.
1913ல் அமெரிக்காவின் வடமேற்குப் பகுதி, மற்றும் கனடாவில் ஒண்டாரியோ பகுதிகளை பெரும் புயல் தாக்கியது. 250 பேர் உயிரிழந்தனர், பெரும் சேதம் ஏற்பட்டது.
1916ல் அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் தொடருந்து எச்சரிக்கைக் கதவுகளை உடைத்து கால்வாய் ஒன்றில் வீழ்ந்ததில் 46 பேர் உயிரிழந்தனர்.
1917ல் அக்டோபர் புரட்சி: விளாதிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் உருசியாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய யூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது). போல்செவிக்குகள் குளிர்கால அரண்மனையைக் கைப்பற்றினர்.
1917ல் முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படையினர் உதுமானியரிடம் இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றினர்.
1918ல் மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.
1919ல் உருசியப் புரட்சியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளன்று, 10,000 இற்கும் அதிகமான பொதுவுடைமைவாதிகள் அமெரிக்காவின் 23 நகரங்களில் கைது செய்யப்பட்டனர்.
1929ல் நியூயார்க் நவீனக்கலை அருங்காட்சியகம் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது.
1931ல் மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.
1940ல் வாசிங்டனில் டகோமா குறும்பாலம் அமைக்கப்பட்டு நான்கு மாதங்களே ஆன நிலையில், கடும் புயலில் சிக்கி இடிந்து வீழ்ந்தது.
1941ல் இரண்டாம் உலகப் போர்: சோவியத் மருத்துவக் கப்பல் ஆர்மீனியா நாட்சி ஜெர்மனியின் விமானக் குண்டுவீச்சில் சேதமடைந்து மூழ்கியது. 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1944ல் சோவியத் உளவாளி ரிச்சார்டு சோர்கி சப்பானியரால் கைப்பற்றப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
1944ல் பிராங்க்ளின் ரூசவெல்ட் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1956ல் சூயெசு நெருக்கடி: எகிப்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு ஐக்கிய இராச்சியம், பிரான்சு, இசுரேல் ஆகியவற்றை ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கேட்டது.
1956ல் அங்கேரியப் புரட்சி, 1956: சோவியத்-ஆதரவு யானொசு காதர் புடாபெஸ்ட் திரும்பி, அங்கேரியின் அடுத்த தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1975ல் வங்காளதேசத்தில், அபூ தாகிர் தலைமையில் படையினர் பிரிகேடியர் காலிது மொசாரபைக் கொலை செய்து, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத் தலைவரும், பின்னாளைய அரசுத்தலைவருமான சியாவுர் ரகுமானை விடுவித்தனர்.
1983ல் அமெரிக்க மேலவைக் கட்டடத்தில் குண்டு வெடித்து, பெரும் சேதம் ஏற்பட்டது.
1987ல் தூனிசியாவில், அபீப் போர்கீபா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது.
1989ல் கிழக்கு செருமனியில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களை அடுத்து பிரதமர் வில்லி ஸ்டோப் தலைமையிலான அரசு பதவி விலகியது.
1991ல் மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. தீநுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.
1994ல் அமெரிக்காவின் வட கரொலைனா பல்கலைக்கழகத்தின் மாணவர் வானொலி நிலையம் உலகின் முதலாவது இணைய வானொலி சேவையை ஒலிபரப்பியது.
2000ல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2002ல் அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.
2007ல் பின்லாந்து பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
2012ல் குவாத்தமாலாவில் பசிபிக் கரையில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 52 பேர் உயிரிழந்தனர்.

வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 07-11 | November 07

1186ல் மங்கோலியப் பேரரசரான‌ ஒகோடி கான் பிறந்த நாள். (இறப்பு-1241)
1728ல் ஆங்கிலேயக் கடற்படைத் தலைவரும் நாடுகாண் பயணியுமான‌ ஜேம்ஸ் குக் பிறந்த நாள். (இறப்பு-1779)
1812ல் இலங்கை விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளரான‌ வீர புரன் அப்பு பிறந்த நாள். (இறப்பு-1848)
1858ல் இந்திய செயற்பாட்டாளரும் கல்வியாளருமான‌ பிபின் சந்திர பால் பிறந்த நாள். (இறப்பு-1932)
1867ல் நோபல் பரிசு பெற்ற போலந்து இயற்பியலாளரும் வேதியியலாளருமான‌ மேரி கியூரி பிறந்த நாள். (இறப்பு-1934)
1879ல் செஞ்சேனையைத் தோற்றுவித்த உருசியப் புரட்சியாளரான‌ லியோன் திரொட்ஸ்கி பிறந்த நாள். (இறப்பு-1940)
1888ல் நோபல் பரிசு பெற்ற இந்திய இயற்பியலாளரான‌ சி. வி. இராமன் பிறந்த நாள். (இறப்பு-1970)
1909ல் ஆந்திர அரசியல்வாதியும் இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளருமான‌ என். ஜி. ரங்கா பிறந்த நாள். (இறப்பு-1995)
1913ல் மேற்கு வங்க இடதுசாரி அரசியல்வாதியான‌ சமர் முகர்ஜி பிறந்த நாள். (இறப்பு-2013)
1913ல் நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளரான‌ அல்பேர்ட் காம்யு பிறந்த நாள். (இறப்பு-1960)
1918ல் அமெரிக்க எழுத்தாளரான‌ பில்லி கிரஹாம் பிறந்த நாள்.
1922ல் தமிழகக் கவிஞரும் எழுத்தாளருமான‌ அழ. வள்ளியப்பா பிறந்த நாள். (இறப்பு-1989)
1929ல் நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய-அமெரிக்க மருத்துவரான‌ எரிக் காண்டல் பிறந்த நாள்.
1938ல் கனடிய வேதியியலாளரான‌ டொனால்டு பிளெமிங் பிறந்த நாள்.
1939ல் அமெரிக்கக் கணினி அறிவியலாளரான‌ பார்பாரா இலிசுகோவ் பிறந்த நாள்.
1941ல் குவாதலூப்பே-பிரான்சிய அரசியல்வாதியான‌ எர்னஸ்ட் முத்துசாமி பிறந்த நாள்.
1943ல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளரான‌ மைக்கேல் ஸ்பென்ஸ் பிறந்த நாள்.
1943ல் நியூசிலாந்து அரசியல்வாதியான‌ சில்வியா கார்ட்ரைட் பிறந்த நாள்.
1954ல் தமிழக நடிகரும் இயக்குநரும் தயாரிப்பாளரும் அரசியல்வாதியுமான‌ கமல்ஹாசன் பிறந்த நாள்.
1959ல் இந்தியப் பாடகரான‌ சிறிநிவாஸ் பிறந்த நாள்.
1969ல் இந்தியத் திரைப்பட நடிகையும் இயக்குநருமான‌ நந்திதா தாஸ் பிறந்த நாள்.
1975ல் தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குநருமான‌ வெங்கட் பிரபு பிறந்த நாள்.
1980ல் தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரான‌ கார்த்திக் பிறந்த நாள்.
1981ல் இந்திய நடிகையான‌ அனுசுக்கா செட்டி பிறந்த நாள்.

வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 07-11 | November 07

644ல் இசுலாமியக் கலீபாவான‌ உமறு இப்னு அல்-கத்தாப் இறப்பு நாள். (பிறப்பு-590)
1627ல் முகலாயப் பேரரசரான‌ ஜஹாங்கீர் இறப்பு நாள். (பிறப்பு-1569)
1836ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியான‌ ஆ. குமாரசுவாமி இறப்பு நாள். (பிறப்பு-1783)
1862ல் முகலாயப் பேரரசரான‌ பகதூர் சா சஃபார் இறப்பு நாள். (பிறப்பு-1775)
1913ல் பிரித்தானிய உயிரியலாளரான‌ ஆல்பிரடு அரசல் வாலேசு இறப்பு நாள். (பிறப்பு-1823)
1947ல் இந்திய-இலங்கை ஊடகவியலாளரும் அரசியல்வாதியுமான‌ கோ. நடேசையர் இறப்பு நாள். (பிறப்பு-1887)
1951ல் கருநாடக இசைப் பாடகியும் நடிகையுமான‌ என். சி. வசந்தகோகிலம் இறப்பு நாள்.
1962ல் அமெரிக்காவின் 39வது முதல் சீமாட்டியான‌ எலினோர் ரூசுவெல்ட் இறப்பு நாள். (பிறப்பு-1884)
1978ல் குசராத்து மாநிலத்தின் 6வது முதலமைச்சரான‌ ஜீவராஜ் மேத்தா இறப்பு நாள். (பிறப்பு-1887)
1981ல் அமெரிக்க வரலாற்றாளரும் மெய்யியலாளருமான‌ வில்லியம் ஜேம்ஸ் டியூரண்ட் இறப்பு நாள். (பிறப்பு-1885)
1993ல் இந்திய ஆன்மிக சொற்பொழிவாளரான‌ திருமுருக கிருபானந்த வாரியார் இறப்பு நாள். (பிறப்பு-1906).
2000ல் இலங்கை அரசியல்வாதியான‌ நிமலன் சௌந்தரநாயகம் இறப்பு நாள். (பிறப்பு-1950)
2000ல் இந்திய அரசியல்வாதியான‌ சி. சுப்பிரமணியம் இறப்பு நாள். (பிறப்பு-1910)
2011ல் அமெரிக்கக் குத்துச்சண்டை வீரரான‌ ஜோ பிரேசியர் இறப்பு நாள். (பிறப்பு-1944)
2014ல் நார்வே வேதியியலாளரான‌ தோர்ப்சான் சிக்கிலேண்டு இறப்பு நாள். (பிறப்பு-1923)

வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleNovember 06 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 06
Next articleNovember 08 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் Today Special Historical Events In Tamil November 08