October 28 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 28

0

Today Special Historical Events In Tamil | 28-10 | October 28

October 28 Today Special | October 28 What Happened Today In History. October 28 Today Whose Birthday (born) | October -28th Important Famous Deaths In History On This Day 28/10 | Today Events In History October-28th | Today Important Incident In History | ஐப்பசி 28 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 28-10 | ஐப்பசி மாதம் 28ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 28.10 Varalatril Indru Nadanthathu Enna| October 28 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 28/10 | Famous People Born Today October 28 | Famous People died Today 28-10.

  • Today Special in Tamil 28-10
  • Today Events in Tamil 28-10
  • Famous People Born Today 28-10
  • Famous People died Today 28-10
  • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 28-10 | October 28

    செக்கோ-சிலோவாக் நாடு உருவான நாளாக கொண்டாடப்படுகிறது. (1918 செக் குடியரசு, சிலவாக்கியா)

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 28-10 | October 28

    97ல் உரோமைப் பேரரசர் நேர்வா தளபதி மார்க்கசு திராயானை தனது முடிக்குரிய வாரிசாக அறிவிக்க பிரடோரியன் காவலர்களால் கட்டாயப்படுத்தப்பட்டார்.
    306ல் மாக்செண்டியசு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
    312ல் மில்வியன் பாலத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசர் மாக்செண்டியசைத் தோற்கடித்து மேற்குலகின் தனித்த உரோமைப் பேரரசரானார்.
    456ல் போர்த்துகலின் பிராகா நகரை விசிகோத்து இனத்தவர்கள் சூறையாடி, நகரின் கிறித்தவக் கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கினர்.
    1420ல் பெய்ஜிங் அதிகாரபூர்வமாக மிங் அரசின் தலைநகரானது.
    1449ல் முதலாம் கிறித்தியான் டென்மார்க்கின் அரசராக முடிசூடினார்.
    1492ல் கொலம்பசு புதிய உலகத்திற்கான தனது முதலாவது பயணத்தின்போது கியூபாவைக் கண்டுபிடித்தார்.
    1636ல் மாசச்சூசெட்சு குடியேற்றத்தில் முதலாவது கல்லூரியை நிறுவுவதற்கான வாக்கெடுப்பை அடுத்து அமெரிக்காவின் ஆர்வர்டு பல்கலைக்கழகம் என இன்று அழைக்கப்படும் கல்லூரி நிறுவப்பட்டது.
    1707ல் சப்பானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஒன்சூ, சிகொக்கு, கியூசூ ஆகிய இடங்களில் 5,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
    1775ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: பாஸ்டனில் இருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுக்கும் பிரித்தானியச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
    1834ல் மேற்கு ஆஸ்திரேலியாவின் பிஞ்சாரா என்ற இடத்தில் பிரித்தானியக் குடியேறிகளினால் 30 நூங்கார் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.
    1886ல் நியூயார்க் துறைமுகத்தில் விடுதலைச் சிலையை அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து வைத்தார்.
    1891ல் சப்பானில் நோபி சமவெளியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 7,000 இற்கும் அதிகமானோர் உயிரிழ்ந்தனர்.
    1904ல் பனாமாவும் உருகுவையும் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டன.
    1918ல் முதலாம் உலகப் போர்: முன்னூறு ஆண்டுகள் ஆக்கிரமிப்பை அடுத்து, ஆத்திரியா-அங்கேரியில் இருந்து செக்கோசிலோவாக்கியா விடுதலையை அறிவித்தது.
    1918ல் புதிய போலந்து அரசு மேற்கு கலீசியாவில் உருவானதை அடுத்து, போலந்து-உக்ரைனியப் போர் ஆரம்பமானது.
    1922ல் பெனிட்டோ முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிஸ்டுகள் இத்தாலிய அரசைக் கைப்பற்றினர்.
    1940ல் இரண்டாம் உலகப் போர்: இத்தாலியின் காலக்கெடுவை கிரேக்கம் ஏற்க மறுத்ததை அடுத்து, கிரேக்க-இத்தாலியப் போர் ஆரம்பமானது. இத்தாலி கிரேக்கத்தை அல்பேனியா ஊடாக ஊடுருவியது.
    1942ல் கனடா ஊடான அலாஸ்கா வரையான அலாஸ்கா நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
    1949ல் ஏர் பிரான்சு வானூர்தி போர்த்துகலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 48 பேரும் உயிரிழந்தனர்.
    1956ல் எல்விஸ் பிரெஸ்லி தேசியத் தொலைக்காட்சியில் போலியோ தடுப்பூசியை ஏற்றிக் கொண்டார்.
    1958ல் 23-ம் யோவான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது. சோவியத் பிரதமர் நிக்கிட்டா குருசேவ் சோவியத் ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்ற உத்தரவிட்டார்.
    1965ல் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் “கிறித்தவமல்லாத சமயங்களுடனான திருச்சபையின் தொடர்புகள் தொடர்பான அறிவிப்பை” திருத்தந்தை ஆறாம் பவுல் அறிவித்தார். இதன்படி, இயேசு கிறித்துவின் இறப்புக்கு யூதர்கள் காரணம் என்ற 760-ஆண்டுக்கால அறிவிப்பு மீளப்பெறப்பட்டது.
    1990ல் ஜோர்ஜியாவில் வரலாற்றில் முதற்தடவையாக பல-கட்சி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்றது.
    1995ல் அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் சுரங்கத் தொடருந்துப் பாதையில் ஏற்பட்ட தீவிபத்தில் 229 பேர் உயிரிழந்தனர், 265 பேர் காயமடைந்தனர்.
    2006ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையே 8 மாதங்களாகத் தடைப்பட்டிருந்த அமைதிப் பேச்சுக்கள் ஜெனீவாவில் மீண்டும் ஆரம்பமாயின.
    2006ல் 1930களில் சோவியத் போல்செவிக் கம்யூனிஸ்டுகளால் உக்ரேனின் பிக்கிவீனா காட்டில் கொலை செய்யப்பட்ட 817 உக்ரேனியர்களினது இறுதிக் கிரியைகள் அவர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில் இடம்பெற்றன.
    2009ல் பாக்கித்தான், பெசாவர் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
    2014ல் நாசாவின் சிக்னசு ஆளில்லா விண்கலம் வர்ஜீனியாவில் இருந்து புறப்பட்டு சில நிமிட நேரத்தில் வெடித்துச் சிதறியது.

    வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 28-10 | October 28

    1466ல் டச்சு மெய்யியலாளரான‌ எராஸ்மஸ் பிறந்த நாள். (இறப்பு-1536)
    1845ல் போலந்து இயற்பியலாளரான‌ சிக்முந்த் வுரூபிளேவ்ஸ்கி பிறந்த நாள். (இறப்பு-1888)
    1867ல் அயர்லாந்து-இந்திய சமூக சேவையாளரும் நூலாசிரியருமான‌ சகோதரி நிவேதிதை பிறந்த நாள். (இறப்பு-1911)
    1892ல் மகாத்மா காந்தியின் 2வது மகனும் சமூக செயற்பாட்டாளருமான‌ மணிலால் காந்தி பிறந்த நாள். (இறப்பு-1956)
    1897ல் அமெரிக்க ஆடை வடிவமைப்பாளரான‌ எடித் எட் பிறந்த நாள். (இறப்பு-1981)
    1914ல் அமெரிக்க உயிரியலாளரும் மருத்துவருமான‌ யோனாசு சால்க் பிறந்த நாள். (இறப்பு-1995)
    1933ல் பிரேசில் கால்பந்து வீரரான‌ கரிஞ்சா பிறந்த நாள். (இறப்பு-1983)
    1955ல் மைக்ரோசாப்ட் நிறுவனரான‌ பில் கேட்ஸ் பிறந்த நாள்.
    1955ல் இந்திய-அமெரிக்கத் தொழிலதிபரான‌ இந்திரா நூயி பிறந்த நாள்.
    1956ல் ஈரானின் 6வது அரசுத்தலைவரான‌ மகுமூத் அகமதிநெச்சாத் பிறந்த நாள்.
    1958ல் மகாராட்டிராவின் 16வது முதல்வரான‌ அசோக் சவான் பிறந்த நாள்.
    1967ல் அமெரிக்க நடிகையான‌ ஜூலியா ராபர்ட்ஸ் பிறந்த நாள்.
    1978ல் இலங்கை அரசியல்வாதியான‌ ஹரின் பெர்னான்டோ பிறந்த நாள்.
    1979ல் யூடியூப்பை அமைத்தவர்களில் ஒருவரான‌ ஜவேத் கரீம் பிறந்த நாள்.
    1984ல் அமெரிக்க நடிகரான‌ பின் விட்டுரோக் பிறந்த நாள்.
    1988ல் தமிழ் நடிகையான‌ வாணி போஜன் பிறந்த நாள்.

    வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 28-10 | October 28

    1627ல் முகலாயப் பேரரசரான‌ ஜஹாங்கீர் இறப்பு நாள். (பிறப்பு-1569)
    1704ல் ஆங்கிலேய மெய்யியலாளரும் மருத்துவருமான‌ ஜான் லாக் இறப்பு நாள். (பிறப்பு-1632)
    1900ல் செருமானிய மொழியியலாளரான‌ மாக்ஸ் முல்லர் இறப்பு நாள். (பிறப்பு-1823)
    1978ல் இலங்கை நடிகையும் பாடகியுமான‌ ருக்மணிதேவி இறப்பு நாள். (பிறப்பு-1923)
    1981ல் தமிழக எழுத்தாளரும் உரையாசிரியரும் பதிப்பாசிரியருமான பி.ஸ்ரீ இறப்பு நாள். (பிறப்பு-1886)
    1982ல் பிரித்தானிய வானியலாளரும் இயற்பியலாளருமான‌ இராபெர்ட் தெ’ஸ்கோர்ட் அட்கின்சன் இறப்பு நாள். (பிறப்பு-1898)
    1983ல் பெல்ஜிய வானியற்பியலாளரான‌ போல் சுவிங்சு இறப்பு நாள். (பிறப்பு-1906)
    1997ல் வீணை இசைக்கலைஞரான‌ மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார் இறப்பு நாள். (பிறப்பு-1920)
    2013ல் இந்திய எழுத்தாளரான‌ ராஜேந்திர யாதவ் இறப்பு நாள். (பிறப்பு-1929)
    2014ல் சாம்பியாவின் 5வது அரசுத்தலைவரான‌ மைக்கேல் சாட்டா இறப்பு நாள். (பிறப்பு-1937)
    2021ல் தமிழக மார்க்சிய அரசியல்வாதியும் பேச்சாளருமான‌ ந. நன்மாறன் இறப்பு நாள்.

    வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

    By: Tamilpiththan

    உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

    Previous articleOctober 27 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 27
    Next articleOctober 29 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil October 29