Today Special Historical Events In Tamil | 14-09 | September 14
September 14 Today Special | September 14 What Happened Today In History. September 14 Today Whose Birthday (born) | September-14th Important Famous Deaths In History On This Day 14/09 | Today Events In History September-14th | Today Important Incident In History | புரட்டாதி 14 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 14-09 | புரட்டாதி மாதம் 14ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 14.09 Varalatril Indru Nadanthathu Enna| September 14 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 14/09 | Famous People Born Today September 14 | Famous People died Today 14-09.
இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 14-09 | September 14
இந்தி மொழி நாளாக கொண்டாடப்படுகிறது.
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 14-09 | September 14
81ல் டைட்டசு இறந்ததை அடுத்து அவரது சகோதரன் தொமீசியன் உரோமைப் பேரரசராக முடி சூடினார்.
629ல் பேரரசர் எராக்கிளியசு பாரசீகப் பேரரசை வென்ற பின்னர் கான்ஸ்டண்டினோபிலை அடைந்தார்.
786ல் அல்-காதி இறந்ததை அடுத்து அவரது சகோதரர் அருண் அல்-ரசீது அப்பாசியக் கலீபாவாக நியமிக்கப்பட்டார்.
1752ல் கிரெகொரியின் நாட்காட்டியை பிரித்தானியா ஏற்றுக்கொண்டது. இதன்படி புதிய நாட்காட்டியில் 11 நாட்களை அது இழந்தது. முன்னைய நாள் செப்டம்பர் 2 ஆகும்.
1808ல் பின்லாந்துப் போர்: உருசியப் படைகள் சுவீடன் படைகளை வென்றன.
1812ல் நெப்போலியப் போர்கள்: நெப்போலியனின் படைகள் மாஸ்கோவினுள் நுழைந்தன. உருசியப் படைகள் நகரை விட்டு விலகியதும் மாஸ்கோவில் தீ பரவ ஆரம்பித்தது.
1829ல் உதுமானியப் பேரரசு உருசியாவுடன் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது. உருசிய-துருக்கியப் போர் முடிவுக்கு வந்தது.
1846ல் கோத் படுகொலைகள்: ஜங் பகதூர் ராணாவும் அவனது சகோதரர்களும் நேப்பாளத்தின் பிரதமர் உட்பட 40 அரச குடும்பத்தினரைப் படுகொலை செய்தனர்.
1901ல் அமெரிக்க அரசுத்தலைவர் வில்லியம் மெக்கின்லி செப்டம்பர் 6 இல் இடம்பெற்ற கொலைமுயற்சியில் காயமடைந்து இறந்தார். தியொடோர் ரோசவெல்ட் புதிய அரசுத்தலைவரானார்.
1914ல் ஆத்திரேலியாவின் முதலாவது நீர்மூழ்கிக் கப்பல் ஏஈ1 பப்புவா நியூ கினியில் கிழக்கு நியூ பிரித்தானியாவில் மூழ்கியது.
1917ல் உருசியப் பேரரசு அதிகாரபூர்வமாகக் உருசியக் குடியரசானது.
1940ல் அங்கேரிய இராணுவம் உள்ளூர் அங்கேரியர்களின் உதவியுடன் வடக்கு டிரான்சில்வேனியாவில் 158 உருமேனியர்களைப் படுகொலை செய்தனர்.
1943ல் இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் படைகள் கிரேக்கத்தின் பல கிராமங்களில் புகுந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் படுகொலைகளில் ஈடுபட்டனர். 500 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
1944ல் இரண்டாம் உலகப் போர்: மாஸ்ட்ரிக்ட் நகரம் நேச நாடுகளால் விடுவிக்கப்பட்டது.
1948ல் போலோ நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியத் தரைப்படை அவுரங்காபாது நகரைக் கைப்பற்றியது.
1954ல் சோவியத் ஒன்றியம் அணுவாயுதச் சோதனையை மேற்கொண்டது.
1959ல் சோவியத்தின் லூனா 2 விண்கலம் சந்திரனில் மோதியது. சந்திரனில் இறங்கிய மனிதனால் அமைக்கப்பட்ட முதலாவது விண்கலம் இதுவே.
1960ல் அமெரிக்க சிஐஏயின் உதவியுடன், சயீரில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மொபுட்டு செசெ செக்கோ ஆட்சியைக் கைப்பற்றினார்.
1960ல் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓப்பெக்) உருவாக்கப்பட்டது.
1979ல் அஃபிசுல்லா அமீனின் கட்டளைப்படி ஆப்கானித்தான் அரசுத்தலைவர் நூர் முகம்மது தராக்கி படுகொலை செய்யப்பட்டார். ஹஃபிசுல்லா அமீன் புதிய அரசுத் தலைவர் ஆனார்.
1982ல் லெபனானின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பசீர் ஜெமாயெல் படுகொலை செய்யப்பட்டார்.
1984ல் ஜோ கிட்டிங்கர் வளிமக் கூண்டில் அத்திலாந்திக் பெருங்கடலைத் தாண்டிய முதல் மனிதர் என்ற சாதனை படைத்தார்.
1985ல் மலேசியாவின் மிக நீளமான பாலம், பினாங்கு தீவையும் பெரும்பரப்பையும் இணைக்கும் பினாங்கு பாலம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.
1992ல் எர்செக்-பொசுனியா தனிநாடாகப் பிரிந்தது சட்டபூர்வமற்றது என பொசுனியா எர்செகோவினாவின் அரசமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1997ல் இந்தியாவின் மத்தியப் பிரதேசம், பிலாசுப்பூர் மாவட்டத்தில் விரைவுத் தொடர்வண்டி ஒன்று ஆற்றில் வீழ்ந்ததில் 81 பேர் உயிரிழந்தனர்.
1999ல் கிரிபட்டி, நவூரு, தொங்கா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகளில் இணைந்தன.
2000ல் எம்எஸ் டொஸ் கடைசித் திருத்தம் வெளியிடப்பட்டது.
2000ல் விண்டோஸ் மில்லேனியம் வெளியிடப்பட்டது.
2001ல் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களில் இறந்தவரக்ளுக்கான நினைவுகூர்தல் நிகழ்வு வாசிங்டன் தேசியப் பேராலயத்தில் இடம்பெற்றது.
2003ல் சுவீடனில் இடம்பெற்ற மக்கள் வாக்கெடுப்பில் யூரோ நாணயத்தை ஏற்றுக் கொள்ளும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
2003ல் ஐரோப்பிய ஒன்றியத்தில் எசுத்தோனியா இணைவதற்கு அந்நாட்டில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
2005ல் நடிகர் விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற புதிய அரசியற் கட்சியை ஆரம்பித்தார்.
2008ல் உருசியாவின் ஏரோபுளொட் விமானம் பேர்ம் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த அனைத்து 88 பேரும் உயிரிழந்தனர்.
2015ல் ஈர்ப்பு அலைகள் குறித்த முதலாவது அவதானிப்பு அறிவிக்கப்பட்டது.
வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 14-09 | September 14
1769ல் செருமானியப் புவியியலாளரும் நாடுகாண் பயணியுமான அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் பிறந்த நாள். (இறப்பு-1859)
1774ல் பிரித்தானிய இந்தியாவின் 14வது தலைமை ஆளுநரான வில்லியம் பென்டிங்கு பிரபு பிறந்த நாள். (இறப்பு-1839)
1853ல் இலங்கை அரசியல்வாதியான பொன்னம்பலம் அருணாசலம் பிறந்த நாள். (இறப்பு-1924)
1879ல் அமெரிக்க செயற்பாட்டாளரும் பாலியல் கல்வியாளருமான மார்கரெட் சாங்கர் பிறந்த நாள். (இறப்பு-1966)
1914ல் இலங்கை மலையக எழுத்தாளரான சி. வி. வேலுப்பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1984)
1922ல் தமிழ்க் கவிஞரும் எழுத்தாளருமான கு. இராமலிங்கம் பிறந்த நாள். (இறப்பு-2002)
1923ல் இந்திய வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான ராம் ஜெத்மலானி பிறந்த நாள். (இறப்பு-2019)
1927ல் தமிழகத் திரைப்பட நடிகையும் பாடகியுமான யூ. ஆர். ஜீவரத்தினம் பிறந்த நாள். (இறப்பு-2000)
1932ல் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் தமிழறிஞருமான மா. க. ஈழவேந்தன் பிறந்த நாள்.
1937ல் இத்தாலியக் கட்டிடக் கலைஞரான ரென்சோ பியானோ பிறந்த நாள்.
1939ல் ஈழத்து எழுத்தாளரான சோ. பத்மநாதன் பிறந்த நாள்.
1951ல் நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளரான தன்கன் ஆல்டேன் பிறந்த நாள்.
1965ல் உருசியாவின் 3வது அரசுத்தலைவரும் பிரதமருமான திமித்ரி மெட்வெடெவ் பிறந்த நாள்.
1973ல் அமெரிக்க ராப் இசைக்கலைஞரான நாஸ் பிறந்த நாள்.
1974ல் தமிழகத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையான பிரியா ராமன்,
1983ல் ஆங்கிலேய பாடகரான ஏமி வைன்ஹவுஸ் பிறந்த நாள். (இறப்பு-2011)
1989ல் அமெரிக்கப் பாடகரான லோகன் ஹென்டர்சன் பிறந்த நாள்.
வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 14-09 | September 14
407ல் பைசாந்தியப் பேராயரும் புனிதருமான யோவான் கிறிசோஸ்தோம் இறப்பு நாள். (பிறப்பு-347)
1321ல் இத்தாலியக் கவிஞரான டான்டே அலிகியேரி இறப்பு நாள். (பிறப்பு-1265)
1712ல் இத்தாலிய-பிரான்சியக் கணிதவியலாளரும் வானியலாளருமான ஜியோவன்னி டொமினிகோ காசினி இறப்பு நாள். (பிறப்பு-1625)
1852ல் முதலாம் வெல்லிங்டன் பிரபுவும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமருமான ஆர்தர் வெல்லஸ்லி இறப்பு நாள். (பிறப்பு-1769)
1901ல் அமெரிக்காவின் 25-வது அரசுத்தலைவரான வில்லியம் மெக்கின்லி இறப்பு நாள். (பிறப்பு-1843)
1985ல் அமெரிக்க எழுத்தாளரும் கல்வியாளருமான ஜான் ஹோல்ட் இறப்பு நாள். (பிறப்பு-1923)
2002ல் அமெரிக்க எழுத்தாளரும் கல்வியாளருமான லூயிஸ் வீரபிள்ளை இறப்பு நாள். (பிறப்பு-1934)
2011ல் நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளரான ரூடால்ஃப் மாஸ்பவர் இறப்பு நாள். (பிறப்பு-1929)
2015ல் தமிழக எழுத்தாளரான கௌதம நீலாம்பரன் இறப்பு நாள். (பிறப்பு-1948)
2015ல் இலங்கை இடதுசாரி அரசியல்வாதியான இந்திக குணவர்தனா இறப்பு நாள். (பிறப்பு-1943)
வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – youtube.com
By: Tamilpiththan