September 15 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 15

0

Today Special Historical Events In Tamil | 15-09 | September 15

September 15 Today Special | September 15 What Happened Today In History. September 15 Today Whose Birthday (born) | September-15th Important Famous Deaths In History On This Day 15/09 | Today Events In History September-15th | Today Important Incident In History | புரட்டாதி 15 இன்றைய நாள் வரலாற்று நிகழ்வுகள் 15-09 | புரட்டாதி மாதம் 15ல் இன்றைய நாள் சிறப்பு நிகழ்வுகள் 15.09 Varalatril Indru Nadanthathu Enna| September 15 Varalatru Nikalvukal | Celebrity Birthday Today 15/09 | Famous People Born Today September 15 | Famous People died Today15-09.

september 15
 • Today Special in Tamil 15-09
 • Today Events in Tamil 15-09
 • Famous People Born Today 15-09
 • Famous People died Today 15-09
 • இன்றை நாளின் சிறப்புக்கள் – Today’s special 15-09 | September 15

  பொறியியலாளர் நாளாக‌ கொண்டாடப்படுகிறது.
  (இந்தியா)
  விடுதலை நாளாக கொண்டாடப்படுகிறது. (குவாத்தமாலா, எல் சால்வடோர், ஹொண்டுராஸ், நிக்கராகுவா, கோஸ்ட்டா ரிக்கா, 1821)
  அனைத்துலக மக்களாட்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Historical Events 15-09 | September 15

  668ல் கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்சுடன்சு இத்தாலியில் அவரது குளியலறியில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.
  994ல் பாத்திம கலீபகம் பைசாந்தியப் பேரரசுக்கு எதிரான முக்கிய வெற்றியைப் பெற்றது.
  1556ல் முன்னாள் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு எசுப்பானியா திரும்பினார்.
  1776ல் அமெரிக்கப் புரட்சிப் போர்: நியூயார்க் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பிரித்தானியப் படைகள் கிப்சு குடாவில் தரையிறங்கின.
  1794ல் பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஆர்தர் வெலசுலி (பின்னாளில் வெலிங்டன் கோமகன்) தனது முதலாவது சமரை பாக்சுடெல் என்ற இடத்தில் நடத்தினார்.
  1795ல் பிரித்தானியா ஆப்பிரிக்காவின் தெற்கே இடச்சு கேப் குடியேற்றத்தைக் கைப்பற்றியது.
  1812ல் பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: அரிசன் கோட்டையை மீட்க சென்ற ஆயுதங்கள் அடங்கிய தொடருந்து தாக்குதலுக்குள்ளானது.
  1812ல் பிரெஞ்சு இராணுவம் நெப்போலியனின் தலைமையில் மாஸ்கோவின் கிரெம்ளினை அடைந்தது.
  1821ல் எசுப்பானியாவிடம் இருந்து குவாத்தமாலா விடுதலையை அறிவித்தது.
  1830ல் லிவர்பூல் முதல் மான்செஸ்டர் வரையான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்ட இதே நாளில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் அசுக்கிசன் உயிரிழந்தார். இவரே வரலாற்றில் தொடருந்து விபத்தில் இறந்த முதலாவது நபராக அறியப்படுகிறார்.
  1835ல் சார்லசு டார்வின் பீகில் கப்பலில் காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.
  1862ல் அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வர்ஜீனியாவின் ஆர்ப்பர்சு துறையைக் கைப்பற்றினர்.
  1869ல் கர்னாட்டிக் என்ற பிரித்தானிய நீராவிக் கப்பல் இலண்டனில் இருந்து பம்பாய் செல்லும் வழியில் செங்கடலில் பவளப் பாறையில் மோதி மூழ்கியது. 26 பேர் உயிரிழந்தனர்.[1]
  1873ல் பிரெஞ்சு-புரூசியப் போர்: கடைசி செருமானியப் படையினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
  1894ல் முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895): சப்பான் பியொங்யாங் சமரில் சிங் சீனாவை வென்றது.
  1915ல் ஆத்திரேலியாவில் முதலாவது திரையரங்கு “நியூ எம்பயர் சினிமா” நியூ சவுத் வேல்சு, பௌரல் என்ற இடத்தில் அமைக்கப்பட்டது.
  1916ல் முதலாம் உலகப் போர்: சோம் என்ற இடத்தில் முதற்தடவையாக பீரங்கி வண்டிகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.
  1935ல் செருமனியில் யூதர்களுக்கு குடியுரிமை சட்டபூர்வமாக மறுக்கப்பட்டது.
  1935ல் நாட்சி ஜெர்மனி சுவசுத்திக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது.
  1940ல் இரண்டாம் உலகப் போர்: பிரிட்டன் சண்டையில் பெரும் எண்ணிக்கையான லூப்டுவாபே வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
  1942ல் இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கக் கடற்படை வானூர்தி தாங்கிக் கப்பல் வாசுப் சப்பானியர்களினால் மூழ்கடிக்கப்பட்டது.
  1944ல் இரண்டாம் உலகப் போர்: போர் தொடர்பான நிலப்பாட்டை எடுப்பதற்காக பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் இரண்டாம் தடவையாக கியூபெக் நகரில் சந்தித்தனர்.
  1945ல் தெற்கு புளோரிடாவிலும் பகாமாசிலும் சூறாவளி காரணமாக 366 விமானங்கள் சேதமடைந்தன.
  1947ல் காத்லீன் சூறாவளி சப்பானைத் தாக்கியதில் 1,077 பேர் உயிரிழந்தனர்.
  1948ல் போலோ நடவடிக்கை: இந்தியத் தரைப்படை மகாராட்டிராவின் யால்னா, லாத்தூர், மொமினாபாது நகர்களைக் கைப்பற்றின.
  1950ல் கொரியப் போர்: அமெரிக்கப் படைகள் கொரியாவில் இஞ்சியோன் நகரில் தரையிறங்கின.
  1952ல் ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா எதியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது.
  1958ல் நியூ ஜேர்சியில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 48 பேர் உயிரிழந்தனர்.
  1959ல் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவை தில்லியில் ஆரம்பமானது.
  1959ல் நிக்கிட்டா குருசேவ் ஐக்கிய அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட முதல் சோவியத் தலைவர் ஆனார்.
  1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடி: சோவியத் கப்பல் பொல்த்தாவா கியூபா நோக்கிச் சென்றது.
  1963ல் அமெரிக்காவின் பர்மிங்காம் நகரில் ஆப்பிரிக்க-அமெரிக்கத் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 4 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
  1968ல் சோவியத்தின் சொண்ட் 5 விண்கலம் ஏவப்பட்டது. சந்திரனைச் சுற்றி வந்து பூமியின் காற்று மண்டலத்தினுள் நுழைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.
  1971ல் முதலாவது கிரீன்பீஸ் கப்பல் ஆம்சித்கா தீவில் அணுவாயுத சோதனை நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகப் புறப்பட்டது.
  1972ல் இசுகாண்டினேவிய வானூர்தி ஒன்று கோத்தன்பூர்கில் இருந்து ஸ்டாக்ஹோம் சென்று கொண்டிருந்த போது கட்டப்பட்டது.
  1974ல் வியட்நாம் வீமானம் ஒன்று கடத்தப்பட்டு, தரையிறங்குகையில் 75 பேருடன் தரையில் மோதியது.
  1975ல் பிரெஞ்சுப் பகுதியான “கோர்சிகா” தீவு இரண்டு நிர்வாகப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
  1981ல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.
  1983ல் இசுரேல் பிரதமர் மெனசெம் பெகின் பதவி துறந்தார்.
  1987ல் இந்திய அமைதிப் படைக்கெதிராக திலீபன் நல்லூரில் நீராகாரம் இன்றி உண்ணாநோன்பைத் தொடங்கினார்.
  2000ல் 27-வது ஒலிம்பிக் விளையாட்டுகள், சிட்னியில் ஆரம்பமாயின.
  2017ல் லண்டன், பார்சன்சு கிறீன் சுரங்கத் தொடருந்தில் குண்டு வெடித்ததில் 30 பேர் காயமடைந்தனர்.
  2017ல் சனிக் கோளை ஆய்வு செய்வதற்காக 1997 இல் ஏவப்பட்ட காசினி-ஐசென் விண்கலம் தன் பணிகளை முடித்துக்கொண்டு அழிந்தது.

  வரலாற்றில் இன்றைய நாளில் பிறந்தவர்கள் – Born Today In History 15-09 | September 15

  601ல் முதலாவது சியா இமாமான‌ அலீ பிறந்த நாள். (இறப்பு-661)
  1254ல் இத்தாலிய வணிகரும் நாடுகாண் பயணியுமான‌ மார்க்கோ போலோ பிறந்த நாள். (இறப்பு-1324)
  1819ல் சென்னை மாகாண ஆளுநரான‌ பிரான்சிஸ் நேப்பியர் பிறந்த நாள். (இறப்பு-1898)
  1857ல் அமெரிக்காவின் 27வது அரசுத்தலைவரான‌ வில்லியம் டாஃப்ட் பிறந்த நாள். (இறப்பு-1930)
  1857ல் அமெரிக்க வானியலாளரான‌ அன்னா வின்லாக் பிறந்த நாள். (இறப்பு-1904)
  1858ல் பிரான்சிய மதகுருவான‌ சார்லஸ் தெ ஃபூக்கோ பிறந்த நாள். (இறப்பு-1916)
  1860ல் மைசூர் திவானும் பொறியியலாளரும் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா பிறந்த நாள். (இறப்பு-1962)
  1876ல் வங்காள எழுத்தாளரான‌ சரத்சந்திர சட்டோபாத்யாயா பிறந்த நாள். (இறப்பு-1938)
  1890ல் ஆங்கிலேய எழுத்தாளரான‌ அகதா கிறிஸ்டி பிறந்த நாள். (இறப்பு-1976)
  1891ல் ஆங்கிலேய எழுத்தாளரான‌ செண்பகராமன் பிள்ளை பிறந்த நாள். (இறப்பு-1934)
  1893ல் இந்தியத் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான‌ சௌந்தரபாண்டியன் பிறந்த நாள். (இறப்பு-1953)
  1909ல் தமிழ்நாட்டின் 7வது முதலமைச்சரான‌ கா. ந. அண்ணாதுரை பிறந்த நாள். (இறப்பு-1969)
  1912ல் இந்திய எழுத்தாளரும் இதழாளருமான‌ ஆர். கே. கரஞ்சியா பிறந்த நாள். (இறப்பு-2008)
  1916ல் கவிஞரும் எழுத்தாளரும் தமிழ் திரைப்பட பாடலாசிரியருமான‌ கம்பதாசன் பிறந்த நாள். (இறப்பு-1973)
  1918ல் ஈழத்துத் தமிழறிஞரும் புலவருமான‌ அமுது பிறந்த நாள். (இறப்பு-2010)
  1930ல் அமெரிக்க வேதியியலாளரான‌ பாட்சி ஓ’கானெல் செர்மன் பிறந்த நாள். (இறப்பு-2008)
  1938ல் தமிழறிஞரும் எழுத்தாளருமான கொ. மா. கோதண்டம் பிறந்த நாள்.
  1939ல் இந்திய அரசியல்வாதியான‌ சுப்பிரமணியன் சுவாமி பிறந்த நாள்.
  1941ல் இலங்கை அரசியல்வாதியான‌ எம். ஜோசப் மைக்கல் பெரேரா பிறந்த நாள்.
  1948ல் ஆத்திரேலிய உயிரியலாளரான‌ மண்டயம் வீரம்புடி சீனிவாசன் பிறந்த நாள்.
  1952ல் இலங்கை மனித உரிமைச் செயற்பாட்டாளரும் கல்வியாளருமான‌ ரத்னஜீவன் ஹூல் பிறந்த நாள்.
  1954ல் தென்னிந்தியத் திரைப்பட இயக்குநரும் நடிகருமான‌ பி. வாசு பிறந்த நாள்.
  1955ல் பாக்கித்தானியத் துடுப்பாளரான‌ அப்துல் காதிர் பிறந்த நாள். (இறப்பு-2019)
  1964ல் சிலோவாக்கியாவின் 14வது பிரதமரான‌ இராபர்ட் பிகோ பிறந்த நாள்.
  1967ல் திரைப்பட நடிகையான‌ ரம்யா கிருஷ்ணன் பிறந்த நாள்.
  1977ல் நைஜீரிய புதின எழுத்தாளரான‌ சிமாமந்த நாகொசி அதிச்சி பிறந்த நாள்.
  1977ல் ஆங்கிலேய நடிகரான‌ டோம் ஹார்டி பிறந்த நாள்.
  1984ல் வேல்சு இளவரசரான‌ ஹாரி பிறந்த நாள்.
  1989ல் பெல்ஜிய-பிரான்சியக் குற்றவாளியான‌ சாலோ அப்டெச்லாம் பிறந்த நாள்.
  1992ல் இந்திய சதுரங்க வீரரான‌ அதிபன் பாசுகரன் பிறந்த நாள்.

  வரலாற்றில் இன்றைய நாளில் இறந்தவர்கள் – Dead Today In History 15-09 | September 15

  1950ல் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்தவரான‌ மறைமலை அடிகள் இறப்பு நாள். (பிறப்பு-1876)
  1967ல் ஐதராபாது மாகாண முதலமைச்சரான புர்குல ராமகிருஷ்ண ராவ் இறப்பு நாள். (பிறப்பு-1899)
  2005ல் தமிழக அரசியல்வாதியான‌ ரா. தாமரைக்கனி இறப்பு நாள். (பிறப்பு-1946)
  1973ல் சிலி நாட்டுப் பாடகரான‌ விக்டர் அரா இறப்பு நாள். (பிறப்பு-1932)

  வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் youtube.com

  By: Tamilpiththan

  உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

  Previous articleSeptember 14 வரலாற்றில் இன்றைய நாள் நிகழ்வுகள் – Today Special Historical Events In Tamil September 14
  Next articleநடக்கவிருக்கும் சனி பெயர்ச்சியால் ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்!