என்னவளே..! என்னவளே..!
உன் கருவிழியில் கண்டேன்
அந்த கடலலையின் தளம்பல்..!
அந்த அலைகளுக்குள் ஒழிந்து கொண்டேன்
மின்னலென பாய்ந்து..!
உன் விழி மூடி திறக்கையிலே
இறப்பின் வலி உயிரினிலே கண்டேன்..!
கடலலையின் ஓசையுமே மயங்கியது
மங்கை உந்தன் சிரிப்பொலியில்..!
வானவில்லின் வண்ணங்கள் மொத்துமுமாய்
தெரியுதடி உந்தன் காலடியில்..!
போதையையும் கடந்துவிட்டேன்
பேதை உந்தன் பூவிதழில்..!
உன் கருங்கூந்தல் நெழிவினிலே
சிக்கிக்கொண்டேன் சிறு துரும்பாக..!
உன் இடை பிடித்து அணைத்துக்கொண்டேன்
என் மார்பில் சிறு குழந்தையாகி விட்டாய் நீ..!
உன் அழகெனும் ஆழ்கடலில் என்னை
மூழ்கடித்தது தெரியாத மடந்தையாய்..!
அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: