சுதந்திரம்
மரணங்கள் நிகழலாம் ஆனால்
மரித்துப்போவது மனிதமாக இருக்கக்கூடாது..
அழிந்து போகலாம் ஆனால்
அழிக்கப்படுவது உன் தடங்களாக இருக்கக்கூடாது..
இடிந்து போகலாம் ஆனால்
இடிக்கப்படுவது உன் இல்லமாக இருக்கக்கூடாது..
மறைந்து போகலாம் ஆனால்
மறைக்கப்படுவது உன் நீதியாக இருக்கக்கூடாது..
பிடுங்கப்படலாம் ஆனால்
பிடுங்கப்படுவது உன் உரிமையாக இருக்கக்கூடாது..
தொலைந்து போகலாம் ஆனால்
தொலைக்கப்படுவது உன் நின்மதியாக இருக்கக்கூடாது..
கலைந்து போகலாம் ஆனால்
கலைக்கப்படுவது உன் கனவுகளாக இருக்கக்கூடாது..
பயந்து போகலாம் ஆனால்
பயப்படுவது நீயாக இருக்கக்கூடாது..
ஒழிக்கப்படலாம் ஆனால்
ஒழிந்திருப்பது நீயாக இருக்கக்கூடாது..
தகர்த்துவிடு உன் தடைகளை பதித்துவிடு உன் பெயரை,
நிலையாக இந்த பூமியிலே சரியாக,
நீ இல்லாவிட்டாலும் உன் பெயர் சொல்லும் அந்த தடங்கள்..!
அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்