மூட்டு வலி, சிறுநீரக கல் மற்றும் நீரிழிவை குண்மாக்க‌ இந்த பழச்சாறு மட்டும் போதும்!

0

மூட்டு வலி, சிறுநீரக கல் உட்பட பல பிரச்சனைகளை நாவல் பழச்சாறு குணப்படுத்தும் என்று நியூசிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்தில் உள்ள ப்ளான்ட் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானி ரோஜர் ஹர்ஸ்ட் தலைமையிலான குழுவினர், மனித உடலுக்கு நாவல் பழம் அளிக்கும் நன்மைகள் பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தனர்.

மூட்டு வலி

நாவல் பழச்சாறை தொடர்ந்து 10 பேருக்கு அளித்து, பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும், செய்த பிறகும், நாவல் பழச்சாறு சில சொட்டுகள் மட்டும் சாப்பிட்டவர்களுக்கு தசைகளில் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. தசைப்பிடிப்பு, அழுத்தமும் ஏற்படவில்லை. தவிர, உடற்பயிற்சி செய்த பிறகு ஏற்படும் உடல்வலி துளியும் இல்லாதது தெரிய வந்தது. தவிர, நாவல் பழச்சாறை 3 வாரங்களுக்கு சிறிதளவு சாப்பிட்டு வந்தவர்களுக்கு மூட்டு வலி குணமானதும், சிறுநீரக கல் கரைந்து போனதும் சோதனையில் தெரிந்தது.

மேலும், உடல் சோர்வு, வலிகளையும் நாவல் பழம் குறைக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுபற்றி ஹர்ஸ்ட் கூறுகையில், மூட்டு வலி, உடல் வலி, சோர்வு, சிறுநீரகக் கல், நுரையீரல் பாதிப்புகளை நாவல் பழச்சாறு அற்புதமாக குறையச் செய்கிறது. எனினும், இதற்கு அந்தப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி காரணமல்ல. அதில் உள்ள பளேவனாய்டு என்ற பொருள்தான் இந்த அற்புதங்களை செய்கிறது.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும்

நாவல் பழச்சாறு, விதைகள், நீரிழிவு நோய்க்கான மருந்தாகும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும் திறன் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நீரிழிவைக் கட்டுப்படுத்த நாவல் கொட்டைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொண்டு, ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டுவர வேண்டும்.

சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்

நாவல் பழங்களைப் பிழிந்து வடிகட்டிய சாறு 3 தேக்கரண்டியுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை மாலை இரண்டு வேளைகள், 2 நாட்களுக்கு சாப்பிட்டுவர சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கட்டு தீரும்.

பேதி கட்டுப்படும்

நாவல் இலைக்கொழுந்தை நசுக்கிச் சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை இரு வேளைகள் 3 நாட்களுக்கு இவ்வாறு செய்யபேதி கட்டுப்படும்.

தொண்டைப்புண்

10 செ.மீ. நீளமும், 5 செ.மீ. அகலமும் உள்ள முற்றிய நாவல் மரத்தின் பட்டையச் சேகரித்து, ½ லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். ¼ லிட்டராக சுண்டிய பின்னர் பொறுக்கும் சூட்டில் வாய் கொப்பளித்து வர தொண்டைப்புண், தொண்டை அழற்சி குணமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாலையில் உணவில் இதை சேர்த்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வந்துவிடும்! 60,000 பேரை கொண்ட ஆய்வில் தகவல்!
Next articleவயிறு வீக்கம், கருப்பை நீர்க்கட்டி, முடி வளர்ச்சி, இளநரை மற்றும் நச்சுக்களை முறிக்க தும்மட்டி பழங்களை இப்படி சாப்பிடுங்க!