பெண்களை ஐரோப்பாவுக்குள் கடத்திச் சென்ற இலங்கையர் யார்? அம்பலமான தகவல்!

0

ஐரோப்பாவுக்குள் பெண்களை ஆட்கடத்தல் செய்த இலங்கையர் தொடர்பான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் இத்தாலியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான முக்கிய தகவலை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் எந்த வித தொடர்பும் அற்றவர் என, அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் இலங்கையின் இராஜதந்திரி அல்ல எனவும், வெளிவிவகார அமைச்சில் சேவை செய்பவர் அல்ல எனவும், சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இளைஞர், யுவதிகள் 4 பேரை சட்டவிரோதமாக இத்தாலிக்கு அழைத்து செல்ல முயற்சித்த குற்றச்சாட்டில், அவர் மிலான் நகரில் மல்பேன்ஸா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் செல்லுபடியாகும் இராஜதந்திரி கடவுச்சீட்டு இருக்கவில்லை. இலங்கை அரசாங்க நிறுவனத்தில் சேவை செய்ததனை அடிப்படையாக வைத்து அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு மூலம் இந்த நபர் இத்தாலிக்கு சென்றுள்ளார்.

அவர் ஒப்பந்த அடிப்படையில் 2012-2015 ஆகிய காலப்பகுதியினுள் வெளிநாட்டு இராஜதந்திரியாக பதவி வகித்துள்ளார்.

எனினும் ஒப்பந்த காலம் நிறைவடைந்த பின்னரும் இரத்துச் செய்யப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டு ஒன்று அவரிடம் இருந்ததாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – துலாம்
Next articleகுரு பெயர்ச்சி பலன் 2018 – 2019 – விருச்சிகம்