மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், என்ன நடக்கிறது….!!! ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவம்.

0

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், என்ன நடக்கிறது….!!! ஆட்சியை கைப்பற்றியுள்ள இராணுவம்.

ஆபிரிக்காவின் எட்டாவது மிகப்பெரிய நாடான மாலியில், 2013ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சி புரிந்து வந்த 75வயதான இப்ராஹிம் பவுபக்கர்,அவர்கள் பயங்கர வாதத்தை ஒடுக்க தவறியதாலும், 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் முறைகேடு செய்து, மீண்டும் ஆட்சியை பிடித்ததாகவும் கூறி, மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர் மேலும் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் போராடி வந்தனர்.

இதனால் இராணுவ புரட்சி ஏற்பட்டது ஜனாதிபதி இப்ராஹிம் பவுபக்கர் கெய்டாவையும், பிரதமர் பவ்பவ் சிஸ்சேவையும்,துப்பாக்கிமுணையில் கைது செய்து வீட்டு காவலில் வைத்தனர்.

இராணுவத்தினர் வெளியிட்ட அறிக்கையில் “மாலி நாட்டு மக்களுடன் நாங்கள் இருக்கிறோம். நாட்டில், இதற்கு முன்பு இருந்த பெருமையை மீட்டு எடுப்போம். இரத்தகளரியை ஏற்படுத்தி ஆட்சியில் இருக்கும் தேவை எமக்கு இல்லை,விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரச ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்குவோம். பாதுகாப்பு நடவடிக்கையாக, எல்லைகள் மூடப்பட்டுள்ளன. நாடு முழுதும், இரவு, 9:00 மணி முதல், அதிகாலை, 5:00 மணி வரை, ஊரடங்கு அமுல்படுத்தப்படும்” எனவும் குறிப்பிடபட்டுள்ளது.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுதன் முறையாக OTT க்கு வரும் நானியின் படம், அமேசான் ப்ரேமில்..!
Next articleஇன்றைய ராசி பலன் 22.08.2020 Today Rasi Palan 22-08-2020 Today Tamil Calendar Indraya Rasi Palan!