இளம்பெண்ணின் மூளையை சோதனை செய்து பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்! ஒரு வாரத்தில் நடந்த சோக சம்பவம்!

0

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் 18 வயது பெண்ணின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அவரின் மூளையில் டஜன் கணக்கில் நாடாப்புழுக்கள் இருந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் இடது கண் வீக்கம் அடைந்தது மற்றும் தலைவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

MRI ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது மூளை பகுதி முழுவதும் ஒட்டுண்ணிகளால் சூழப்பட்டு இருந்தது. மேலும் அவரது வலது கண்களிலும் ஒட்டுண்ணி பரவியிருந்தது. ஒட்டுண்ணிகள் மட்டுமின்றி டஜன் கணக்கில் நாடாப்புழுக்கள் இருந்துள்ளது.

இது neurocysticerosis என அழைக்கப்படுகிறது. பன்றி இறைச்சியை சாப்பிட்டதன் காரணமாக அதிலிருக்கும் ஒட்டுண்ணிகள் இவரது மூளைக்குள் வளர்ச்சியடைந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கருத்துப்படி மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கும் ஒரு தொற்றுநோய் ஆகும்.

குடல், தொண்டை மற்றும் மூளையை தாக்கி இறுதியில் நரம்பியல் ரீதியான பிரச்சனையை உருவாக்குகிறது.

இதுபோன்ற பிரச்சனைகளுக்கு ஸ்டெராய்டுகள் மற்றும் வலிப்பு நோய் எதிர்ப்பு மருந்துகள் அளிக்கப்பட்டாலும், குறித்த இளம்பெண் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தால் அவரை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில், ஒரு வாரம் கோமாவில் இருந்த இளம்பெண் உயிரிழந்தார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகடந்த மாதம் ஒரு குழந்தை! இந்த மாதம் இரட்டை குழந்தை பெற்ற தாய்! உலகையே அதிர்ச்சியடைய வைத்த சம்பவம்!
Next articleபணத்தை தூக்கமுடியாமல் தூக்கிப் போகும் ஈழத்தமிழ் திருடர் அண்ணா!