தேனுடன் இலவங்கப்பட்டை! நன்மைகளோ ஏராளம்!

0

இயற்கையின் அற்புதமான தேனை விரும்பி சாப்பிடாதவர்கள் மிகக் குறைவு, கெட்டுப் போகாத ஒரே உணவுப் பொருள் என்றால் அது தேன் தான்.

பழங்காலத்திலிருந்தே மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, இதனுடன் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்தால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.

அஜீரணக் கோளாறால் அவதிப்படும் நபர்கள், 2 டீஸ்புன் தேனை எடுத்து அதன் மேல் சிறிது இலவங்கப் பட்டைப் பொடியைத் தூவி சாப்பிடுவதற்கு முன்பு சாப்பிட்டு வருவது நல்லது.

காலை மற்றும் இரவு வேளைகளில் தேனையும் இலவங்கப் பட்டைப் பொடியையும் சம அளவில் எடுத்து தினமும் சாப்பிட்டு வர காது கேளாமை நீங்கும்.

மேலும் ஒரு டம்ளர் சூடான தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் தேனும் ஒரு சிறிய ஸ்பூன் இலவங்கப் பட்டைப் பொடியும் கலந்து தொடர்ந்து சாப்பிட மூட்டு நோய் குணமாகும்.

இருதயத்தில் உள்ள தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்க தேன் மற்றும் இலவங்கப் பட்டை பொடி பெரிதும் உதவுகின்றன. சுத்தமான தேனை தினமும் உணவுடன் சாப்பிட கொலஸ்ட்ரால் மூலம் வரும் தொந்தரவுகள் குறையும்.

கடுமையான ஜலதோஷம், இருமல், சைனஸ் தொல்லைகள் உள்ளவர்கள் ஒரு டீஸ்புன் தேனை சுடு நீரில் வைத்து சிறிது வெதுவெதுப்பாக்கி அதனுடன் இலவங்கப் பட்டை பொடியை சேர்த்து மூன்று நாளைக்கு சாப்பிட வர அவை விரைவில் குணமாகும்.

அல்சரினால் பாதிக்கப்பட்டவர்ளுக்கு தேனும் இலவங்க பட்டை பொடியும் மிகச் சிறந்த மருந்து. மேலும் இலவங்க பட்டை பொடியை தேனுடன் குழைத்து சாப்பிட வாயுத் தொல்லை நீங்கும்.

சரும தொற்று நோய்களான சொறி, சிரங்கு படை முதலியவற்றை மறைக்க தேனையும் இலவங்கப் பட்டை பொடியையும் சம அளவில் எடுத்து குழைத்து அவற்றின் மேல் போட இவை மறைந்து விடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண்ணாடி இல்லாமல் கண்பார்வையை சரி செய்ய முடியுமா!
Next articleகொழுப்பை கரைக்க வேண்டுமா! வெந்தயம் மட்டும் போதுமே!