கொழுப்பை கரைக்க வேண்டுமா! வெந்தயம் மட்டும் போதுமே!

0

உடலில் கொழுப்பை குறைக்க உதவும் வெந்தயத்தில் நிறைந்துள்ள ஏராளமான மருத்துவ குணங்கள் குறித்து இங்கு காண்போம்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வெந்தயம் பெருமளவில் பயன்படுகிறது. வெந்தயத்தை பல்வேறு வடிவில் பயன்படுத்துவதன் மூலம், மேலும் பல மருத்துவ பலன்களை பெறலாம்.

வெந்தயத் தூள்
வெந்தயத்தில் ஹைபோ-லிபிடமிக் மூலப் பொருட்கள் அதிகளவில் உள்ளன. இவை உடலில் உள்ள கொலஸ்ட்ராலை சீரான் அளவில் வைக்க உதவுகின்றன.

எனவே, வெந்தயத்தை பொடி செய்து, ஒரு தம்ளர் மிதமான சூட்டில் பாலில் கலந்துகொள்ள வேண்டும். மேலும் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றையும் கலக்க வேண்டும். இதனை தினமும் காலையில் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து விடலாம்.

வெந்தய தண்ணீர்
வெந்தயத்தில் கொழுப்புக்களை கரைக்கக் கூடிய மூலப் பொருட்கள் உள்ளன. எனவே, இதனை உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் நீர்ச்சத்து சமமான அளவில் இருக்கும்.

இதற்கு ஒரு கப் வெந்தய பொடியை கடாயில் நன்கு வறுத்துக்கொண்டு, பின்னர் அதனை அரைத்து ஒரு தம்ளர் சுடுநீரில் கலந்து குடிக்க வேண்டும். இந்த வெந்தய தண்ணீரை தினமும் பருகலாம்.

வெந்தய டீ
உடலில் கொலஸ்ட்ராலை சீராக வைத்துக்கொள்ள உதவும் மற்றொரு பொருள் வெந்தய டீ. இதற்கு வெந்தயத்தை தேவையான அளவு எடுத்து நசுக்கி, அதனை ஒரு தம்ளர் தண்ணீரில் மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர், இதனை வடிகட்டி தேன் கலந்து, தினமும் காலையில் குடித்து வர வேண்டும். இதன் மூலம் உடலில் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து ஆண்டி-ஆக்ஸிடண்ட் அளவு அதிகரிக்கும்.

ஊற வைத்த வெந்தயம்
ஒரு கைப்பிடி வெந்தயத்தை எடுத்துக்கொண்டு, முதல் நாள் இரவில் சூடான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் மறுநாள் காலையில் இந்த நீரை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

இதன்மூலம், உடலில் கொழுப்பு சேர்வது தடுக்கப்படும். மேலும், ஊற வைத்து வடிகட்டிய வெந்தயத்தை அப்படியே மென்று சாப்பிடலாம்.

அல்லது அதனை நன்கு அரைத்து சிறிதளவு தேன் கலந்து, வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் வயிறு சுத்தமாகி, உடலுக்கு அதிக பலம் ஏற்படும்.

முளைக்கட்டிய வெந்தயம்
முளைக்கட்டிய வெந்தயத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளன. இது உடலில் உள்ள அதிகமான கொலெஸ்ட்ரால்களை உறிஞ்சி எடுத்து விடும். மேலும், பைல் அமிலத்தை குடலில் அதிகம் சுரக்கச் செய்யும்.

இதற்கு ஒரு கைப்பிடி வெந்தயத்தை எடுத்துக்கொண்டு, அதனை முதல் நாள் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு, வெந்தயம் முளைக்கட்டி வரும் வரை காத்திருந்து வெந்தயத்தை காலையில் சாப்பிட வேண்டும். இதனை பொரியல் போல சமைத்தும் சாப்பிடலாம்.

வெந்தய கீரை
சிறு வயதிலேயே அதிக கொலஸ்ட்ரால் உள்ள குழந்தைகளுக்கு, வெந்தய கீரை ஒரு அருமருந்தாகும். வெந்தய கீரையை தேவையான அளவு எடுத்துக் கொண்டு, அவற்றை நறுக்கி சப்பாத்தி மாவில் கலந்து, சப்பாத்தியாக சுடலாம்.

மேலும், இந்த கீரையை இட்லி மாவிலும் கலந்து சாப்பிடலாம்.

வெந்தய காப்சியூல்
வெந்தய காப்சியூல்களில் உள்ள வெந்தயத்தை வறுத்து காய வைத்து, சிறிது தேன் கலந்த பவுடர் இருக்கும். எனவே, இதனை தினமும் மூன்று வேளையும் 10 கிராம் முதல் 30 கிராம் வரை சாப்பிட கொலஸ்ட்ராலின் அளவு குறையும். அத்துடன் உடல் சுறுசுறுப்பு பெறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதேனுடன் இலவங்கப்பட்டை! நன்மைகளோ ஏராளம்!
Next articleமூக்கடைப்பு பிரச்சனைக்கு குட் பை! வெறும் இரண்டு நிமிடம் போதும்!