கண்ணாடி இல்லாமல் கண்பார்வையை சரி செய்ய முடியுமா!

0

விழித்திரையை கிழித்தெறியும் அளவிற்கு நாம் இன்று பயன்படுத்தும் செல்போன் மற்றும் டேப்லேட் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களே கண் குறைபாட்டிற்கு முக்கிய காரணம்.

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்வை கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கிறார்கள். இதனால் பலர் இன்று கண்ணாடி போட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. அத்தகைய கண்பார்வையை குணப்படுத்தும் இயற்கை முறைகளைப் பார்ப்போம்.

கண் பார்வையை சரி செய்யும் சித்த மருத்துவம்
நெல்லிக்காய் மற்றும் கடுக்காய் இரண்டையும் கொட்டை நீக்கி அதனுடைய தோலை வெயிலில் நன்கு காயவைத்து பின்பு அதை அரைத்து பொடி செய்து தினமும் 2 கிராம் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை குறைபாடு சரியாகும்.

காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளையிலும் பாலுடன் சிறிதளவு முருங்கைப்பூவை சேர்த்து நன்கு காய்ச்சி குடித்து வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து கண் பார்வை தெளிவு பெரும்.

இரவில் துங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒரு மலை வாழைப்பழம் மற்றும் அதனுடன் நான்கு ஆப்ரிகாட் பழம் மற்றும் அரை கப் தயிர் சேர்த்து பின்பு அதனை ஒரு மணி நேரம் ஊறவைத்து உண்ட்ய் வந்தால் கண் பார்வை தெளிவாக இருக்கும்.

தினமும் 50 மில்லி அருகம்புல் சாறோடு சிறிதளவு இளநீர் சேர்த்து அதோடு தேன் சேர்த்து சாப்பிட்டு வர கண் பார்வை குறைபாடு சரியாகும்.

தினமும் உணவுடன் நெய் மற்றும் நார்ச்சத்துகள் அதிகம் நிறைந்த கீரை வகைகளை சேர்த்துக்கொள்வதின் மூலம் கண் பார்வை தெளிவாக இருக்கும்.

கண்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் பயிற்சி செய்தல் மற்றும் இரவு நேரங்களில் அதிக படியாக கணினி பயன்படுத்துவதை தவிர்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 19.03.2019 செவ்வாய்க்கிழமை !
Next articleதேனுடன் இலவங்கப்பட்டை! நன்மைகளோ ஏராளம்!