சக்கரை நோயாளிகள் தினமும் இந்த விதைகளை சாப்பிடுங்கள்! எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும்? எப்படி தெரியுமா?

0

இன்று உலகளவில் அதிக நபர்களுக்கு இருக்கும் நோய் என்றால் அது சர்க்கரை நோய்தான்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

சர்க்கரை நோய் வந்துவிட்டால் ஒருவர் சாதாரண வாழ்க்கை வாழ்வது என்பது மிகவும் கடினமாகும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டிற்குள் வைக்க பல உணவுகள் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆனால் வெகுசில பொருட்கள் மட்டுமே நல்ல பலனை அளிக்கும். சியா விதைகள் என்பது முக்கியமான ஆரோக்கிய உணவுகளில் ஒன்றாக உள்ளது.

உலகம் முழுவதும் ஆரோக்கியமான உணவுகளுக்கான பட்டியலில் சியா விதைகள் கண்டிப்பாக இருக்கும். இந்த விதைகள் இவ்வளவு பிரபலமாக இருக்க காரணம் அவற்றின் மருத்துவ குணங்கள்தான்.

குறிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது இதன் முக்கியமான மருத்துவ குணமாகும்.

சர்க்கரை நோய்
நீங்கள் சர்க்கரை நோயாளியாக இருந்தால் உங்கள் மருத்துவர் கண்டிப்பாக உங்களை சியா விதைகளை உணவில் சேர்த்து கொள்ள பரிந்துரைப்பார்.

இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் உங்கள் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை தடுக்கும். மேலும் அதிலிருக்கும் எதிர் அழற்சி பண்புகள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

எடை குறைப்பு
உங்கள் உணவில் சியா விதைகளை சேர்ப்பதால் கிடைக்கும் சிறந்த நன்மை என்ன தெரியுமா? அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட இந்த விதைகள் மிகக்குறைந்த கலோரிகளை வழங்குவதன் மூலம் உங்கள் எடையை குறைக்க உதவுகிறது.

இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் உங்களை நீண்ட நேரத்திற்கு பசியெடுக்காமல் பார்த்து கொள்கிறது. இதன் சிறப்பம்சமே மற்ற விதைகளை போல இதனை நீங்கள் சமைக்க வேண்டிய அவசியமில்லை.

எப்படி பயன்படுத்த வேண்டும்?
பல்விதங்களில் பயன்படக்கூடிய இந்த சியா விதைகளை சர்க்கரை நோயாளிகள் எளிதில் தங்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். ஊறவைக்கப்பட்ட சியா விதைகளை காய்கறிகள் மற்றும் பழங்களுடன் சேர்த்து சாப்பிடலாம்.

அரைத்த சியா விதைகளை கோதுமையுடன் சேர்த்து உணவு சமைத்து சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ஓட்ஸ சிறந்த உணவாக கருதப்படுகிறது.

ஓட்ஸில் இதனை சேர்த்து சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பலனை அளிக்கும். சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் சியா விதைகள் சேர்க்கப்பட்ட எலுமிச்சை சாறை குடிப்பது மிகவும் நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகைரேகை இப்படி இருபவர்களுக்கு இரண்டாவது திருமணம் கண்டிப்பாக நடக்குமாம்! உங்களுக்கு எப்படி !
Next articleநடிகர் விஜயை கலாய்த்த இலங்கையர் உயிருக்கு போராட்டம்.. இலங்கை அகதிகள் முகாமில் நடந்த சம்பவம்!