உடலை வலுவாக்கும் தினை அரிசியின் பயன்கள் !!

0

உடலை வலுவாக்கும், சிறுநீர்ப்பெருக்கும் தன்மைகள் உண்டு. இது மிகச்சூடு உள்ளது. வாயு நோயையும், கபத்தையும் போக்கும்.ஆயினும் தீக்குற்றத்தைப் பெருக்கும். பசியை உண்டாக்கும் குணம் கொண்டது.உடலுக்கு வன்மையைக் கொடுக்கும். வலிமையைப் பெருக்கும், வாயுவைப் போக்கும், வீக்கங்களை ஒழிக்கும்., உடலைக் காக்கும் தன்மையுடையது.

கனிமச் சத்துக்கள்இரும்புசத்தின் அளவு மற்ற தானியங்களைவிட குறிப்பாக அரிசியை, கோதுமை, ராகியைவிட இரண்டுமடங்கு அதிகமாக உள்ளது.கால்சியத்தின் அளவும் மற்ற தானியங்களை விட கொஞ்சம் அதிகமாக உள்ளது.

உயிர் சத்துக்கள்தினை உயிர்ச்சத்துக்கள் அதிகம் கொண்ட தானியமாகும்.தினையின் பயன்கள்உமி நீக்கிய தினை உணவாகிறது.

இதனை களியாகவும், கஞ்சியாகவும் செய்து சாப்பிடுகின்றனர். மாவாக அரைத்து சூடான பால் சேர்த்து, உடல் தளர்ச்சியடைந்தவர்களுக்குக் கொடுக்கின்றார்கள்.

பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதனை முறுக்கு செய்யவும், தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்துள்ளனர்.

இயற்கையாக விளைந்த திணை கிடைக்கும்.

முளைக்க வைத்த தினையைப் பொரித்து சாப்பிடலாம்.மேலும் இதனைக் கோழிகளுக்கும், கூண்டில் வளர்க்கும் பறவைகளுக்கும் கூடத் தீனியாக்கியுள்ளனர். தினையின் தாள் இதனைக் கால்நடைகளுக்குத் தீவனமாக்குகின்றனர். பூவிடும் பருவத்திலிருந்தும், தானியம் முற்றாமல் இளம் பருவத்தில் இருக்கும் வரை சத்துக்கள் அதிகம் கொண்டிருக்கும்.

மேலும் இதனை வீடுகளுக்குக் கூரை வேயவும், படுக்கை தயார் செய்யவும் பயன்படுத்துகின்றனர்.

தானியம் நீக்கிய கதிர், எரி பொருளாகவும், மெத்தை, தலையணை போன்றவை தயாரிக்கவும் பயன்படுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்! ஆனா எப்போ? எப்படி? எவ்வளவு சாப்பிடணும்?
Next articleஇன்றைய ராசிபலன் 5.7.2018 வியாழக்கிழமை !