வேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்! ஆனா எப்போ? எப்படி? எவ்வளவு சாப்பிடணும்?

0

வேர்க்கடலையின் நன்மைகளைப் பற்றி நாம் பல காலங்களாக பேசிக் கொண்டே இருக்கிறோம். இதன் எடை குறைக்கும் தன்மையால், வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. உயர் கார்போ உணவுகளுக்கு மாற்றாக வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலையால் தயாரிக்கப்பட்ட பொருட்களை உணவியல் வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வேர்க்கடலை உயர்ந்த கார்போ சத்து கொண்ட பருப்பு வகைகளுக்கு மாற்றாக வேர்கடலையை பச்சையாக எடுத்துக் கொள்ளலாம். தினமும் சாதாரண வெண்ணெய்க்கு மாற்றாக வேர்க்கடலை வெண்ணெய்யை பயன்படுத்தலாம். வேர்க்கடலை அந்த அளவிற்கு ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கிய உணவாக கருதப்படுகிறது.

மேலும் இதன் எடை குறைப்பு தன்மை, பல பொருட்களுக்கு மாற்றாக இதனை பயன்படுத்த வைக்கிறது. நீங்கள் கடினமான உணவு கட்டுப்பாட்டை நிர்வகிப்பவரா? உங்களுக்கு உங்கள் எடை குறைப்பில் வேர்க்கடலை பற்றிய சந்தேகம் இருக்குமானால் இந்த பதிவைப் படித்து எடை குறைப்பில் வேர்க்கடலை எப்படி உதவுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். இந்த காரணங்கள் நிரூபிக்கப்பட்டவை மற்றும் அற்புத தீர்வுகள் கொண்டவை என்பதில் சந்தேகம் இல்லை.

அதிக நார்ச்சத்து மற்றும் புரதம் எடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு அதிகம் தேவைப்படும். புரதம் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். நார்ச்சத்து உணவை விரைந்து ஜீரணித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு, மற்றும் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறது.

இதனால் உங்கள் உணவுத் தேடல் குறைந்து, குறைவான உணவு உட்கொள்ளல் சாத்தியமாகிறது. இதனால் எடை குறைப்பும் சாத்தியமாகிறது. அதிக நல்ல கொழுப்பு வேர்க்கடலையில் கொழுப்பு அதிகம் உள்ளது. ஆனால் இந்த கொழுப்பு வகை உடல் இயக்கத்திற்கு தேவையான நல்ல வகை கொழுப்பாக அறியப்படுகிறது. நிறைவுற்ற மற்றும் மாற்றமடைந்த கொழுப்புகள் உங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஆனால் வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு நிறைவாக இருப்பதால், உணவு எளிதில் செரிமானம் ஆகும் வகையில் செரிமான மண்டலத்திற்கு உதவுகிறது. மேலும் ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும் உதவுகிறது, ஆகவே கொழுப்பு மற்றும் கார்போ சத்து பற்றிய கவலை இன்றி வேர்க்கடலையை உட்கொள்ளலாம்.

இரத்த சர்க்கரை அளவு இரத்த ஓட்டத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரை படிவதால் நீரிழிவு மற்றும் தீங்கு விளைவிக்கும் நிலைமைகள் உண்டாகின்றன. கார்போ மற்றும் கொழுப்புகள், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதால், நீரிழிவு, உடல் பருமன், உயர் கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது. இரத்த சர்க்கரை அளவை சமன் செய்யும் தன்மை வேர்க்கடலைக்கு உள்ளதால், இந்த நிலைமை தடுக்கப்படுகிறது.

எளிதில் ஜீரணமாகிறது மற்ற உணவுப் பொருட்களை விட வேர்கடலை எளிதில் ஜீரணிக்கிறது. ஊட்டச்சத்து மிக்க இந்த கடலை, செரிமான மண்டலத்திற்குள் சென்று எளிதில் செரிமானம் ஆகிறது. வேர்க்கடலையில் நிரம்பி இருக்கும் நார்ச்சத்து மற்றும் புரதம் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து செரிமானத்திற்கு உதவுகின்றன. எளிதாகவும், விரைவாகவும் வேர்க்கடலை ஜீரணமாவதால், எடை அதிகரிப்பு பற்றி கவலைப் பட வேண்டாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவாய் துர்நாற்றம் வீசாமல் இருக்க நாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?
Next articleஉடலை வலுவாக்கும் தினை அரிசியின் பயன்கள் !!