இரட்டையர்களில் தந்தை யார்! விநோதத் தீர்ப்பினால் குழந்தைக்கு கிடைத்த அதிஷ்டம்!

0

பிரேசிலில் ஒரு குடும்பத்தில் இரட்டையரான சகோதரர்களின் ஒருவரின் மனைவிக்கு கிடைத்த குழந்தையன் உண்மையான தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க முடியாத விசித்திர வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது.

இரட்டையரில் யார் அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கு பணம் தருவது என்பதே வழக்கு.

குழந்தைக்காக பணம் செலுத்துவதை தவிர்க்க அந்த இரட்டையர்களில் குழந்தையின் உண்மையான தந்தை தாமாக முன்வந்து உண்மையைக் கூறவில்லை.

அவர்கள் இரட்டையர்கள் என்பதால் சோதனையிலும் அந்தக் குழந்தையின் தந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு விநோதத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இரட்டையர்கள் இருவரும் மாதம் ஒன்றிற்கு தலா 60 அமெரிக்க டொலர்களை வழங்க வேண்டும் அல்லது பிரேஸிலின் குறைந்தபட்சசம்பளத்தில் 30 சதவீதத்தை வழங்க வேண்டும் என்பதே அந்த நீதிபதியின் தீர்ப்பு.

இதன்மூலம் பிரேஸிலில் இந்த குழந்தையின் பொருளாதார பின்புலத்துக்கு ஒப்பான பின்புலம் கொண்ட பிற குழந்தைகளைக் காட்டிலும் இரண்டு மடங்கு பணம் அந்த குழந்தைக்கு கிடைக்கும்.

அதேபோல் அந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழில் இரட்டையர்கள் இருவரின் பெயரும் இருக்க வேண்டும் என்றும் தான் அந்த குழந்தையின் தந்தை என்பதை மறைக்க இரட்டையர்களில் ஒருவர் முயற்சி செய்கிறார்.

இம்மாதிரியான ஒரு மோசமான செயலை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது.” என்றும் நீதிபதி தெரிவித்துள்ளமையுமு் குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅத்தை மகனால் கொடூர கொலை செய்யப்பட்ட பிரகதி!கோபத்தை ஏற்படுத்துகிறது! கமல்ஹாசன்!
Next articleஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் கனடாவில் ரூ. 1 கோடி சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்த இந்திய மாணவி! என்ன வேலை தெரியுமா!