ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் கனடாவில் ரூ. 1 கோடி சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்த இந்திய மாணவி! என்ன வேலை தெரியுமா!

0

கனடாவில் விவசாயத்துறையில் ரூ.1 கோடி சம்பளத்திற்கு இந்திய மாணவி ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்புர் பகுதியை சேர்ந்த கவிதா ஃபாமன், Lovely Professional University-ல் M.Sc Agriculture படித்துவந்துள்ளார்.

படிப்பின் மீது அதிக ஆர்வமும் கற்றல் ஆற்றலும் அதிகமாக இருந்த காரணத்தால், கல்லூரியின் முதல் மாணவியாக கவிதா திகழ்ந்துள்ளார்.

அவர் கனடாவில் உள்ள Monsanto Canada என்ற விவசாயம் சார்ந்த நிறுவனத்தில் ரூ.1 கோடி சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்துள்ளார்.

பஞ்சாப் மாணவர்களின் கனவு நிறுவனமாக இருக்கும் அந்நிறுவனத்திற்கு கவிதா வேலைக்கு செல்லப்போவது சக மாணவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் விவசாயத்திற்கு இளைஞர்கள் முக்கியத்துவம் தராதநிலையில், பஞ்சாபை சேர்ந்த இளம்பெண், விவசாயத்துறையில் வேலைக்குச்செல்லப்போவது பலரது பாராட்டை பெற்றுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரட்டையர்களில் தந்தை யார்! விநோதத் தீர்ப்பினால் குழந்தைக்கு கிடைத்த அதிஷ்டம்!
Next articleதிருமணம் நிச்சயிக்கபட்ட பெண்ணை கொடூரமாக கொலை செய்தது எதற்காக! குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்!