உன் இலக்கு..! Un Ilakku !(Tamilpiththan kavithai-8)

0
267

நீ போய் சேர வேண்டிய இலக்கை எண்ணி
எப்போதும் வருந்தாதே போய்க்கொண்டு
இருக்கிற பாதையை சரியான முறையில்
அமைத்துக்கொள், அது நீ போய் சேர
வேண்டிய இலக்கில் சரியாக
கொண்டுபோய் சேர்க்கும்.
எந்த ஒரு வளர்ச்சியும்
திடீர் என்று ஏற்படுவதில்லை.

கால தாமதமானாலும் இறுதியில்
நீ நடந்து வந்த பாதையை திரும்பி
பார்க்கும் போது அதில் உன்
உழைப்பும், சாதனைகளுமே
உன் சந்தோசமாக இருக்கும்..!

அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: