Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan Today Rasi Palan இன்றைய ராசி பலன் – 17.01.2020 வெள்ளிக்கிழமை !

Today Rasi Palan இன்றைய ராசி பலன் – 17.01.2020 வெள்ளிக்கிழமை !

0
1024

இன்றைய பஞ்சாங்கம்
17-01-2020, தை 03, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி காலை 07.28 வரை பின்பு அஷ்டமி திதி பின்இரவு 05.33 வரை பின்பு தேய்பிறை நவமி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 01.12 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. காணும் பொங்கல். கால பைரவர்க்கு உகந்த நாள். கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

இன்றைய ராசி பலன் – 17.01.2020

மேஷம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். நவீன பொருட்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். சுப செய்தி கிடைக்கும்.

ரிஷபம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். நண்பர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறைந்து சுமூகநிலை உருவாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.

கடகம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

சிம்மம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.

கன்னி ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று குடும்பத்தில் தாராள பணவரவு இருக்கும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

துலாம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிட்டும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரக்கூடிய அற்புதமான நாளாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். சுப காரிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும்.

தனுசு ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியாக நற்செய்தி வரும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார்கள். தொழில் ரீதியான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும்.

மகரம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று வியாபாரத்தில் லாபம் சுமாராக தான் இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று உங்கள் உடல் நிலையில் சிறு பாதிப்பும் மன உளைச்சலும் ஏற்படும். வேலையில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு பகல் 01.49 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெரிய தொகையை பிறரை நம்பி கொடுக்காமல் இருப்பது உத்தமம். மதியத்திற்கு பிறகு மன நிம்மதி ஏற்படும்.

மீனம் ராசிக்காரர்களான உங்களுக்கு இன்று குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 01.49 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை.

Previous articleவிரல் நடுவில்! Viral Naduvil (Tamilpiththan kavithai-2)
Next articleமுதுமை! Muthumai (Tamilpiththan kavithai-1)