Thirukkural Kadavul Vazhthu Adhikaram-1 திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம்-1 பாயிரவியல் அறத்துப்பால் Payiraviyal Arathupal in Tamil

0

Thirukkural Kadavul Vazhthu Adhikaram-1 (Kadavul Vazhthu) திருக்குறள் கடவுள் வாழ்த்து அதிகாரம்-1 பாயிரவியல் அறத்துப்பால் Thirukkural Kadavul Vazhthu Adhikaram-1 Payiraviyal Arathupal in Tamil. திருக்குறள் கடவுள் வாழ்த்து பொருள் விளக்கம் (Thirukkural Porul Vilakkam) Adhikaram-1 பாயிரவியல் அறத்துப்பால். கடவுள் வாழ்த்து Kadavul Vazhthu Thirukkural by Thiruvalluvar. Thirukkural Kadavul Vazhthu Chapter-1. கடவுள் வாழ்த்து அதிகாரம் 1.

Thirukkural Kadavul Vazhthu Adhikaram-1

Thirukkural Kadavul Vazhthu Adhikaram-1

இந்த உலகில் கடவுள்(இறைவன்) இருக்கின்றார். உலகத்துக்கு ஆரம்பமாக‌ இருப்பவர் கடவுள் தான். கடவுளின் திருவடிகளை தினம் தொழாமல் ஒருவன் இருப்பானாகில் அவன் கற்ற கல்வியால் எந்த பயனும் இல்லை. தன்னை விட கற்றறிந்த ஒருவனை வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிட்டால் அவனுக்கு எவ்வித‌ பயனும் இல்லை. அறியாமையை உண்டாக்கும் இரு வினைகளை கடந்தவனே இறைமையைப் புரிந்து கொண்டு புகழை அடைகிறான். இறைவனை எப்போதும் நினைத்து வாழ்பவனுக்கு வாழ்வில் துன்பம் ஏற்படுவதில்லை.

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளை ஆட்கொண்டு தீய ஆசைகளை அழித்து சிறந்த வழியில் வாழ்பவன் நெடுநாள் வாழ்வான். பிறவி என்ற பெரிய கடலைக் கடக்க இறைவனின் துணை அவசியம். இறைவனை வணங்காதவனின் நிலை ஐம்பொறிகள் இருந்து அவை இயங்காததுக்கு சமனாகும். இறைவனை எப்போதும் நினைத்து அவன் மனம் மகிழ வாழ்வோமேயானால் இறைவனின் துணை எப்போதும் எம்முடன் இருக்கும்.

By: Tamilpiththan

திருக்குறள் பா: 01
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

kural 1: agara mudhala ezhuththellaam aadhi pakavan mudhatre ulaku

திரு மு.வரதராசனார் பொருள்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

மணக்குடவர் பொருள்:
எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

கலைஞர் பொருள்:
அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை; ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

சாலமன் பாப்பையா பொருள்:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

திருக்குறள் பா: 02
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

kural 2: katradhanaal aaya payanenkol vaalarivan natraal thozhaaar enin

திரு மு.வரதராசனார் பொருள்:
தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?

மணக்குடவர் பொருள்:
மேற்கூறிய வெழுத்தினா னாகிய சொற்க ளெல்லாங் கற்றதனானாகிய பயன் வேறியாது? விளங்கின வறிவினை யுடையவன் திருவடியைத் தொழாராயின். சொல்லினானே பொருளறியப்படுமாதலான் அதனைக் கற்கவே மெய்யுணர்ந்து வீடுபெறலாகும். மீண்டும் வணக்கம் கூறியது எற்றுக்கென்றாற்கு, இஃது அதனாற் பயனிது வென்பதூஉம், வேறுவேறு பயனில்லையென்பதூஉம் கூறிற்று. `கற்பக் கழிமட மஃகும் என்றாருமுளர்.

கலைஞர் பொருள்:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை

சாலமன் பாப்பையா பொருள்:
தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?

திருக்குறள் பா: 03
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

kural 3: malarmisai ekinaan maanati serndhaar nilamisai neetuvaazh vaar

திரு மு.வரதராசனார் பொருள்:
அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

மணக்குடவர் பொருள்:
மலரின்மேல் நடந்தானது மாட்சிமைப்பட்ட திருவடியைச் சேர்ந்தவரன்றே, நிலத்தின்மேல் நெடுங்காலம் வாழ்வார். ‘நிலம்’ என்று பொதுப்படக் கூறியவதனான் இவ்வுலகின் கண்ணும் மேலுலகின்கண்ணுமென்று கொள்ளப்படும். தொழுதாற் பயனென்னையென்றாற்கு, போகநுகர்தலும் வீடுபெறலுமென்று கூறுவார் முற்படப் போகநுகர்வாரென்று கூறினர்.

கலைஞர் பொருள்:
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

சாலமன் பாப்பையா பொருள்:
மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்.

திருக்குறள் பா: 04
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

kural 4: vendudhal ventaamai ilaanati serndhaarkku yaandum idumpai ila

திரு மு.வரதராசனார் பொருள்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

மணக்குடவர் பொருள்:
இன்பமும் வெகுளியு மில்லாதானது திருவடியைச் சேர்ந்தவர் எவ்விடத்து மிடும்பை யில்லாதவர்.பொருளுங் காமமுமாகாவென்றற்கு “வேண்டுதல் வேண்டாமையிலான்” என்று பெயரிட்டார்.

கலைஞர் பொருள்:
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

சாலமன் பாப்பையா பொருள்:
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.

திருக்குறள் பா: 05
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

kural 5: irulser iruvinaiyum seraa iraivan porulser pukazhpurindhaar maattu

திரு மு.வரதராசனார் பொருள்:
கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. சாலமன் பாப்பையா உரை:

மணக்குடவர் பொருள்:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.

கலைஞர் பொருள்:
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

சாலமன் பாப்பையா பொருள்:
கடவுளின் மெய்மைப் புகழையே விரும்புபவரிடம் அறியாமை இருளால் வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டும் சேருவதில்லை.

திருக்குறள் பா: 06
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

kural 6: porivaayil aindhaviththaan poidheer ozhukka nerinindraar neetuvaazh vaar

திரு மு.வரதராசனார் பொருள்:
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர். சாலமன் பாப்பையா உரை:

மணக்குடவர் பொருள்:
மெய் வாய் கண் மூக்குச் செவியென்னும் ஐம் பொறிகளின் வழியாக வரும் ஊறு சுவை யொளி நாற்ற மோசை யென்னு மைந்தின்கண்ணுஞ் செல்லும் மன நிகழ்ச்சியை அடக்கினானது பொய்யற்ற வொழுக்க நெறியிலே நின்றாரன்றே நெடிது வாழ்வார்?.இது சாவில்லையென்றது.

கலைஞர் பொருள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.

சாலமன் பாப்பையா பொருள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.

திருக்குறள் பா: 07
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

kural 7: thanakkuvamai illaadhaan thaalserndhaark kallaal manakkavalai maatral aridhu

திரு மு.வரதராசனார் பொருள்:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

மணக்குடவர் பொருள்:
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.

கலைஞர் பொருள்:
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

சாலமன் பாப்பையா பொருள்:
தனக்கு இணையில்லாத கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கே அன்றி, மற்றவர்களுக்கு மனக்கவலையைப் போக்குவது கடினம்.

திருக்குறள் பா: 08
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

kural 8: aravaazhi andhanan thaalserndhaark kallaal piravaazhi neendhal aridhu

திரு மு.வரதராசனார் பொருள்:
அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

மணக்குடவர் பொருள்:
அறமாகிய கடலையுடைய அந்தணனது திருவடியைச் சேர்ந்தவர்க்கல்லது, ஒழிந்த பேர்களுக்குப் பிறவாழியை நீந்தலாகாது. அது பெறுதலரிது. இது காமமும் பொருளும் பற்றி வரும் அவலங் கெடுமென்றது.

கலைஞர் பொருள்:
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.

சாலமன் பாப்பையா பொருள்:
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே அல்லாமல் மற்றவர் பிறவியாக கடலை நீந்திக் கடப்பது கடினம்.

திருக்குறள் பா: 09
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

kural 9: kolil poriyin kunamilave enkunaththaan thaalai vanangaath thalai

திரு மு.வரதராசனார் பொருள்:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

மணக்குடவர் பொருள்:
அறிவில்லாத பொறிகளையுடைய பாவைகள் போல, ஒரு குணமுமுடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள். உயிருண்டாகில் வணங்குமென் றிழித்து உடம்புக ளென்றார்.

கலைஞர் பொருள்:
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.

சாலமன் பாப்பையா பொருள்:
எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

திருக்குறள் பா: 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

kural 10: piravip perungatal neendhuvar neendhaar iraivan atiseraa thaar

திரு மு.வரதராசனார் பொருள்:
இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

மணக்குடவர் பொருள்:
பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்

கலைஞர் பொருள்:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

சாலமன் பாப்பையா பொருள்:
கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

Thirukkural in Tamil with the meaning: 1330 திருக்குறள் அதன் பொருள் விளக்க உரை என்பவற்றை பார்வையிடலாம்.

Tips: சித்த மருத்துவம் (siddha maruthuvam)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய ராசி பலன் – 12.12.2019 வியாழக்கிழமை !
Next article‘நானே கொன்றேன்!’ புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Naane kondren!