இன்றைய ராசிபலன் 13.12.2022 Today Rasi Palan 13-12-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!

0

இன்று 13-12-2022 கார்த்திகை மாதம் 27ம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். இன்று பஞ்சமி திதி இரவு 09.22 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. இன்று ஆயில்யம் நட்சத்திரம் பின்இரவு 02.32 வரை பின்பு மகம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம் காணப்படும். நேத்திரம் – 2. ஜீவன் – 0. இன்று முருக – நவகிரக வழிபாடு நல்லது.

Today Rasi Palan 23-11-2022

இராகு காலம்: மதியம் 03.00-04.30, எம கண்டம்: காலை 09.00-10.30, குளிகன்: மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள்: காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

மேஷம்: ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படலாம். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.

ரிஷபம்: ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு அதிகாலையிலே வியத்தகு செய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.

மிதுனம்: ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கடகம்: ராசிக்காரர்களே:

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன் வசூலாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும்.

சிம்மம்: ராசிக்காரர்களே:

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். நண்பர்களின் சந்திப்பு ஆறுதலை தரும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.

கன்னி: ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு கிட்டும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.

துலாம்: ராசிக்காரர்களே:

இன்று முடியாத காரியத்தை கூட முடித்து காட்டுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த உயர்வு கிடைக்கப் பெறும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

விருச்சிகம்: ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். கடன்கள் ஓரளவு குறையும்.

தனுசு: ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் மற்றவர்களிடம் பேசும் போது வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.

மகரம்: ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் புது தெம்புடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி சாதகமான பலன் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் உண்டாகும்.

கும்பம்: ராசிக்காரர்களே:

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

மீனம்: ராசிக்காரர்களே:

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 12.12.2022 Today Rasi Palan 12-12-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசிபலன் 14.12.2022 Today Rasi Palan 14-12-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!