பத்து நாள் காதல்
முதல் நாள் அவள் ஒரு பெண் எனக் கண்டேன்,
இரண்டாம் நாள் இரு விழிகளினால் பேசு என்றேன்,
மூன்றாம் நாள் முத்தம் என்றேன்,
நான்காம் நாள் நாணமா? என்றேன்,
ஐந்தாம் நாள் ஐயம் வேண்டாம் என்றேன்,
ஆறாம் நாள் ஆறுதலாக பார்க்கலாம் என்றேன்,
ஏழாம் நாள் ஏற்றுக்கொள் என்றேன்,
எட்டாம் நாள் என்னவள் என்றேன்,
ஒன்பதாம் நாள் ஒன்றும் ஆகாது என்றேன்,
பத்தாம் நாள் பத்து நிமிடம் என்றேன்,
அவளில் என் இச்சையை செலுத்தி
பேதை அவள் கற்பை சூறையாடிச்சென்றேன் !
வென்றது நானா? இல்லை அவளா? இல்லை காதலா?
விடை தெரியவில்லை தேடிக்கொண்டு இருக்கிறேன்!
அன்புடன்..
எழுத்தாளர்: தமிழ்பித்தன்
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: